பயணத்தின் முன்பாகங்கள் ..

காலை 6 மணிக்கே பங்கேற்பாளர்கள் குருபூஜை மற்றும் யோகப்பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் நிகழ்ச்சி நிரல் 8 மணிக்கு ஆரம்பம்.

மைசூர் மாளிகை… காலை வேளை

isha-tamil-blog-caca-day4-pic1

மைசூர் மாநகரில் இன்று காலை தன்னார்வத் தொண்டர்கள் பங்கெடுக்கும் மோட்டார் சைக்கிள் ராலி நடைபெறவுள்ளது. மாளிகையின் வடக்கு வாசலில் குழுமியிருக்கும் தன்னார்வத் தொண்டர்கள். "பாரதம், மஹாபாரதம்" பைக்கர்களின் வண்டியில் பொறுத்தப்பட்டுள்ள ரேடியோ மூலம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

isha-tamil-blog-caca-day4-pic2

isha-tamil-blog-caca-day4-pic3

isha-tamil-blog-caca-day4-pic4

isha-tamil-blog-caca-day4-pic5

isha-tamil-blog-caca-day4-pic6

isha-tamil-blog-caca-day4-pic7

சத்குருவின் பால்ய நண்பர் திரு.சோமேந்திர சிங் அவர்களும் இதில் கலந்துகொண்டார்

isha-tamil-blog-caca-day4-pic8

மைசூர் ராஜா உயர்திரு யடுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைக்க ராலி இனிதே ஆரம்பம்!

isha-tamil-blog-caca-day4-pic9

மைசூர் நகர வீதிகளில் காவேரிக்காக விழிப்புணர்வுப் பேரணி

isha-tamil-blog-caca-day4-pic10

isha-tamil-blog-caca-day4-pic11

isha-tamil-blog-caca-day4-pic12

isha-tamil-blog-caca-day4-pic13

day4-tb-cc-pic1

day4-tb-cc-pic2

ராலி முடித்துவிட்டு அடுத்த நிகழ்ச்சி சாமுண்டி மலையில்…

வார்த்தையில் விவரிக்க இயலா பரவசப்பித்தில் பேரானந்தத்தில், 37 வருடங்களுக்கு முன் சத்குருவை திளைக்கச் செய்த அனுபவம் அவருக்குக் கிட்டிய இடம்…

பங்கேற்பாளர்கள் காலையில் பயிற்சி செய்து தயாராகி நேராக இங்கு வந்துவிட்டனர். பிரம்மானந்த ஸ்வரூப்பா சாண்ட் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சத்குரு மோட்டார்-சைக்கிள் ராலியை முடித்துவிட்டு இங்கு வருகிறார்.

day4-tb-cc-pic3

day4-tb-cc-pic4

day4-tb-cc-pic5

day4-tb-cc-pic6

day4-tb-cc-pic7

day4-tb-cc-pic8

day4-tb-cc-pic9

இந்திய பெண்கள் க்ரிக்கெட் அணியில் விளையாடும் வேதா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் இந்த பயணத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது: "இது மிகவும் மாறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு பிரம்மாணடமான நிகழ்வில் இதுவரை நான் பங்கெடுத்ததில்லை. இந்த மாபெரும் இயக்கத்தில் நானும் பங்கெடுத்திருப்பது என் பாக்கியம். இங்கிருப்போரின் செயல் உறுதியும், அளவற்ற தீவிரமும் அனல்போல் தகிக்கிறது"

day4-tb-cc-pic12

day4-tb-cc-pic13

சத்சங்கம் முடித்து தங்குமிடத்திர்கு வந்த நம் பங்கேற்பாளர்களின் முகங்கள் பிரகாசிக்கின்றன. ஒவ்வொருவரும் வெவ்வேறு வார்த்தைகளில் தங்கள் பரவசத்தைப் பகிர்கிறார்கள். "நான் எண்ணங்களற்றுப் போனேன்", "தேவியின் உருவத்தை அவரில் கண்டேன்", "சத்குருவின் அருளில் திளைக்கும் தருணங்களை முடிந்தவறை தவறவிடமாட்டேன். அவர்முன் அமர்ந்தால் பரவசம் தலைக்கேறும்"

day4-tb-cc-pic18

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அடுத்த நிகழ்ச்சி, மைசூரின் பசுமை இயக்கம்

day4-tb-cc-pic19

day4-tb-cc-pic20

day4-tb-cc-pic21

மைசூரின் 4 பெரிய நிறுவனங்கள் மைசூர்நகரில் 1 லட்சம் மரங்களை நட முன்வந்துள்ளன. பசுமை மைசூரு நிகழ்ச்சியில் பேசுகையில், "மைசூரில் 1 லட்சம் மரங்கள் நடப்படுவது அற்புதமான விஷயம். அம்மரங்கள் எங்கு நடப்பட்டாலும் அவை பிழைக்கின்றனவா என்பதையும் நீங்கள் ஊர்ஜிதம் செய்துகொள்ள வேண்டும். அது யார் நட்ட மரமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்போது காவேரி கூக்குரல் நடந்து கொண்டிருக்கிறது. மரங்கள் தனி உயிர்கள் அல்ல, அவை சமுதாயத்தின் உயிர்" என்றார். அதோடு "இந்தியாவின் வளம் மனிதர்கள்தான். இம்மனிதர்கள் நேர்மறை சக்தியாக செயல்பட்டால் மாபெரும் அதிசயங்களை நாம் நிகழ்த்த முடியும். அதிலும் பெரும்பான்மையான மக்கட்தொகை இளைஞர்கள் என்பதால், செயலில் இறங்க அவர்களை சரியான திசையில் ஊக்குவித்தாலே போதும்" என்றார்.

தங்க இடமளித்த ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மாண்டியாவிற்கு செல்லத் தயாராகக் காத்திருக்கும் நம் பைக்கர்கள். சத்குருவிற்காக காத்திருக்கிறார்கள். பங்கேற்பாளர்கள் முன்பே கிளம்பிவிட்டார்கள்.

day4-tb-cc-pic3-2

day4-tb-cc-pic3-3

4:00 மணியளவில் மாண்டியா நோக்கி பயணம் ஆரம்பம்…

Day5-eve-11

இன்று மாலை நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் மாண்டியா சிறுநகரில் விவசாயிகளின் துயரம் மிக அதிகமாக இருந்துள்ளது. கர்நாடகத்தில் நடந்த விவசாயி தற்கொலைகளில் 24% இங்குதான் நடந்துள்ளது.

மாலை நிகழ்ச்சி நடைபெறவுள்ள அம்பேத்கர் ஆடிட்டோரியத்தில் நடந்த மனம் உருக்கும் சம்பவத்தை ஒரு தன்னார்வத் தொண்டர் பகிர்கிறார்.

"வழக்கம்போல் மேடையின் பின்சுவர் அமைப்பில் 'காவேரி கூக்குரல்' பேனர் அமைத்து மற்ற கடைசி நேர ஏற்பாடுகளை முடித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு வயதான வலுவிழந்த மனிதர் ஒருவர் உள்ளே வந்தார். அவர் கையில் மலர்களும், ஊதுபத்தியும் இருந்தது. காதுக்குப் பின்னாலும் மலர்கள் வைத்திருந்தார். அவர் நேராக மேடைக்குச் சென்று 'காவேரி கூக்குரல்' என்று எழுதியிருந்த இடத்தில் ஊதுபத்தியை வைத்து ஆரத்தி எடுத்து, மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தார். இந்த நேரத்தில் மேடையில் எதிர்கொண்ட அனைவருக்கும் பணிவாக தலை அசைத்து வணக்கம் தெரிவித்தார். பின் சாஷ்டாங்கமாக அவ்விடத்தில் விழுந்து வணங்கினார்.

Day4-old-farmer

 

இதைப் பார்த்திருந்த எனக்கு ஆர்வம் தாளவில்லை. அருகில் இருந்தவரிடம் விசாரித்தேன். யாருக்கும் விவரம் தெரியாததால், அந்த முதியவரை நெருங்கினேன். அவரிடம் நான் வருவதைப் பார்த்ததும் அவர் முகத்தில் பயம் தெரிந்தது. அவசரமாக கையில் இருந்த ஊதுபத்தியையும் மலர்களையும் காட்டி, தன் தாய்மொழியில் அவர் நிறைய பேசினார். எனக்கு ஒன்றும் புரியாமல் பார்த்திருக்க என் காலில் விழுந்து வணங்கப் பார்த்தார். அவசரமாக பின்சென்றுவிட்டு, அருகில் இருந்தவரிடம் விவரம் கேட்டேன்.

'வந்தவர் விவசாயியாம். இந்த இயக்கத்தை நடத்துவதற்காக நமக்கு நன்றி தெரிவிக்கிறார். இனி காவேரியில் நீர் வந்துவிடும், மீண்டும் முன்போல் விவசாயம் செய்யலாம். ஒருவேளை உணவிற்குக்கூட சிரமப்படும் நிலை நிச்சயம் மாறிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு வந்துவிட்டது. தனக்குத் தெரிந்த விதத்தில் தன் ஆனந்தத்தை கொண்டாடுகிறார். அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கும் நமக்கு நன்றி தெரிவிக்கிறார்' என்று விளக்கினார்.

அதிர்ந்துபோனேன். விவசாயிகளின் துயரம் பற்றிப் படித்திருந்தேன். கேள்விப் பட்டிருந்தேன். ஆனால் அதை நேரில் பார்த்துணர்ந்தபோது செய்வதறியாது வெட்கித் தலைகுனிந்தேன். இந்த இயக்கத்தின் அவசியமும் இதை செயல்படுத்துவதில் சத்குரு காட்டும் தீவிரமும் புரிந்தது.

Day4-school-children

ஜே.எஸ் கல்லூரியின் முதல் மற்றும் இரண்டாம் P.U.C பயிலும் 600 மாணவ மாணவியர் காவேரி கூக்குரல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகர சாலைகளில் சில கிமீ தூரம் ஊர்வலமாக நடந்துவந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். "எதற்காகத் திண்டாடுகிறோம்?" "தண்ணீருக்காக செயல்படுவோம்" என்பதுபோல் அவர்கள் எழுப்பிய காவேரி கூக்குரல் கோஷங்களின் தீவிரத்தில் மெய்சிலிர்த்துப் போனது.

விழா நடைபெறும் இடத்தில்…

புகழ்பெற்ற நாட்டுப்புற இசைக்கலைஞர் திரு. ஜனபத மல்லையா அவர்களின் உயிர்ப்பான நாட்டுப்புற இசையில் அரங்கமே மகிழ்ந்தது

day4-tb-cc-pic3-5

1300 நபர்கள் அமரக்கூடிய ஆடிட்டோரியம் நிரம்பிவிட்டது. இடம் இல்லாமல் வெளியில் சிலர் நின்றிருக்கிறார்கள்…

day4-tb-cc-pic3-9

day4-tb-cc-pic3-10

4:25 மணியளவில் சத்குரு உள்ளே வருகிறார்

day4-tb-cc-pic3-4

சிறப்பு விருந்தினர்கள்

day4-tb-cc-pic3-6

விழா ஆரம்பம்:

day4-tb-cc-pic3-8

டாக்டர் M.A.சங்கர் அவர்கள் :

day4-tb-cc-pic3-7டாக்டர் M.A.சங்கர் அவர்கள் பேசும்போது, இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைக்கும் நாம் சந்தித்துவரும் சுற்றுச்சூழல் சீர்கேடிற்கும் வேளாண்காடு வளர்ப்பு சரியான தீர்வாக இருக்கும் என்பதை எடுத்துரைத்தார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்கள்:

day4-tb-cc-pic3-23

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்கள், தண்ணீர் நம் ஒவ்வொருவருக்குமே அத்தியாவசியம் என்று கூறி, அவரது இளம்வயதில் பெருகி ஓடிய ஆற்றின் கரைகளில் ஆனந்தமாக விளையாடியதை நினைவு கூர்ந்தார். ஆனால் இன்றோ அவரது பிள்ளைகளை ஆற்றங்கரைக்கு கூட்டிச் சென்றால் அங்கு அவர்கள் பார்ப்பது வெறும் மணற்படுக்கையைத்தான். இப்படிப்பட்ட உலகையா நம் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லவேண்டும்? என்று வினவினார்.

நடிகர் ஹரிப்ரியா அவர்கள்:

day4-tb-cc-pic3-22

நடிகர் ஹரிப்ரியா அவர்கள், "காவேரி கூக்குரலுக்குக் கிடைத்திருப்பது போன்ற மக்களின் ஆதரவு வேறெந்த இயக்கத்திற்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மரங்களை நட்டு இயற்கையைப் பாதுகாப்பது நம் சமுதாயப் பொறுப்பு. சத்குரு அவர்கள் மரம் வளர்ப்பது மட்டுமல்ல, கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நட்பையும் சேர்த்து வளர்க்கிறார்" 

டாக்டர்.M.V.வெங்கடேஷ் IAS அவர்கள்:

day4-tb-cc-pic3-23

டாக்டர்.M.V.வெங்கடேஷ் IAS அவர்கள், "மரங்களும் மண்ணும் நீர்தேக்கம் போல் செயல்பட்டௌ மழைநீரை பிடித்து வைக்கின்றன. அதனால் காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையில் 1 கிமீ தூரம் வரை மரம் நட்டு 3 ஆண்டுகள் வரை பராமரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்."

உயர்திரு மஹாராஜா யடுவீர் வாடியார் அவர்கள்:

day4-tb-cc-pic3-18

மஹாராஜா யடுவீர் வாடியார், காவேரியின் வரலாறையும், முக்கியத்துவத்துவத்தை எடுத்துரைத்தார். ஹொய்சலா சாம்ராஜ்யத்தில் இருந்து விஜயநகர சாம்ராஜ்யம் வரை அனைத்தும் தளைத்து வளர்ந்தது காவேரியின் கரைகளில்தான். காவேரியை மீட்க சத்குரு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் மைச்சொர் மாளிகை துணை நிற்கும் என்றார்.

சுமலதா அம்பரீஷ் அவர்கள்:

day4-tb-cc-pic3-20

சுமலதா அம்பரீஷ் அவர்கள், காவேரியைக் காக்க மாண்டியா நகரவாசிகள் அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டினார். காவேரி வெறும் நதியல்ல. நம் தாய். நம் தாயை அவள் குழுந்தைகளான நாமே காக்கவில்லை என்றால், வேறு யார் அவளைக் காக்கமுடியும்? என்று கேட்டார். அதைத்தொடந்து, காவேரியைக் காக்கும் பொறுப்பு விவசாயியினுடையது மட்டுமல்ல, தண்ணீர் பருகும் ஒவ்வொருவருமே அதில் பங்கெடுக்க வேண்டும் என்றார்.

மதிப்பிற்குரிய மட்டே கௌடா அவர்கள்:

Day4-Madde-Gowda

92-வயதான சுதந்திரப் போராட்டத் தியாகி நம் வாழ்விற்கு மரங்கள் இன்றியமையாதது என்பதை எடுத்துக்கூறி, நதிகள் மீண்டும் ஊற்றெடுக்க சத்குரு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் நம்மை துணை நிற்கக்கூறி வேண்டினார்.

day4-tb-cc-pic3-15

கடைசியாக பேசிய சத்குரு, காவேரியுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை விவரித்தார். "காவேரியின் அரவணைப்பில் நான் இருந்த சமயங்களில், நான் எத்தனை சிறிய படைப்பு என்றும் காவேரி மாபெரும் ஒரு உயிர் என்றும் எனக்குத் தோன்றும். ஆனால் இன்று அந்த பிரம்மாண்டமான உயிர் நம்மிடம் உதவி கேட்கும் நிலைக்கு அதைக் கொண்டுவந்துவிட்டோம்" என்று வருத்தத்தோடு கூறி, காவேரி கூக்குரல் இயக்கத்தை அனைவருக்கும் விவரித்தர்.

பேசிவிட்டு அமரச்சென்ற சத்குருவிடம் திரு. மட்டே கௌடா அவர்கள் கை நீட்டினார். பேசுவதற்காக மைக் கேட்கிறார் என்று நினைத்து சத்குரு மைக்கை நீட்ட, அதை வேண்டாம் என்றுவிட்ட சத்குருவின் கைகளை பற்றிக் கொண்டார் மட்டே கௌடா அவர்கள். எத்தனையோ பிரச்சினைகளைக் கடந்து வந்த அவரது தாய்நாடு, இப்போது வேறொரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியிருக்கும் சத்குருவிற்கு அவர் நன்றி சொல்ல நினைத்தார் போலும்!

day4-tb-cc-pic3-19

day-4-caca-tamil-blog-collage

day-4-caca-tamil-blog-6

6:45 மணியளவில் நிகழ்ச்சியை முடித்துக் கிளம்பும்போது மக்கள் சத்குருவை சூழ்ந்து கொண்டனர். "எங்கள் நதியைக் காக்க ஊர் ஊராகப் பயணிக்கும் இம்மாமனிதரை தரிசிக்க வந்தேன்", "இணையத்தில் சத்குருவின் பேச்சுக்களை கடந்த 5-7 வருடங்களாக கேட்டு வருகிறேன். எங்களுக்கு சத்குரு என்றால் கொள்ளைப் பிரியம்". "காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக எனக்கு சத்குருவைத் தெரியும்" என்று அங்கு குழுமியிருந்த இளைஞர்கள் பகிர்கிறார்கள். இப்படி இன்னும் பற்பல ஆர்வமான பகிர்தல்கள் அங்கே கிடைத்தன.

இன்று மதியம் விழா நடக்கும் மேடையில் பூஜை செய்த விவசாயி இவர்தான். இவர் பெயர் சின்னப்பா. சத்குரு பேசப்பேச காவேரி கூக்குரல் அட்டையின் பின்புறம் இவர் குறிப்பு எடுத்து வைத்துள்ளார். இதை அவ்வப்போது படித்து நினைவில் கொள்ளவேண்டும் என்று அதை பொக்கிஷமாய் வைத்துள்ளார்.

day4-tb-cc-pic30

day4-tb-cc-pic31

 

சத்குருவை சூழ்ந்து கொண்ட மக்கள்...

Day4-eve-1

 

காவேரி கூகு (கன்னடத்தில்) ஒலித்து சத்குருவை வழியனுப்பும் மக்கள்

 

மக்கள் கூட்டத்தைத் தாண்டி...

Day4-eve-2

 

சிவனசமுத்திரம் செல்லும் வழியில் 7:45 மணியளவில் ஒரு சாதுவின் சீடர் ஓடிவந்து சத்குருவின் பாதையில் நின்றார். சத்குரு மோட்டார் சைக்கிளை நிறுத்தியவுடன், சுவாமி நடானந்தநாதா அவர்களும் அவரின் இரு சிஷ்யர்களும் ஓடிவந்து சத்குருவை மழையில் இருந்து காக்க குடைபிடித்து, அவர் கழுத்தில் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். சத்குருவை தட்டிக் கொடுத்து, காவேரியைக் காக்க மழையென்றும் பாராமல் செயல்பட்ட அவருக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தார்கள்.

Day4-eve-4Day4-eve-5


 

பின் பயணத்தை தொடர்ந்து 8:30 மணியளவில் சிவனசமுத்திரம் அடைந்தோம். இருட்டிவிட்டதால் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. அருகில் அருவி இருப்பதுபோல் சப்தம் கேட்டது.

Day5-eve-6

 

Day5-eve-7

 

Day5-eve-8

 

Day5-eve-9

 

இன்று சுடச்சுட பூரி பரிமாறினார்கள். அதை முடித்தபோது,

10 மணியளவில் சத்குருவின் சத்சங்கம் ஆரம்பமானது.
நடிகை ஹரிப்பிரியா அவர்களுடன் இந்த உரையாடல் பங்கேற்பாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. 

Day5-eve-10

 

நாள் 4 நிகழ்வுகளின் தொகுப்பு

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்