காவேரி நினைவேடுகள்: சத்குருவின் காவேரிப் பயணம் - நாள் 2
நேற்று மடிக்கேரியில் இருந்து நாகர்ஹோலே வந்து தங்கினார்கள். இன்று மாலை 4 மணிக்கு ஹுன்சூரில் அடுத்த பொதுமக்கள் சந்திப்பு நிகழவுள்ளது. இன்று நாகர்ஹோலே தேசியப் பூங்கா மற்றும் புலி பாதுகாப்பு வனத்தில் சிறிது நேரம் சுற்றிப் பார்க்கிறார்கள்.

காலை 8 மணியளவில் தன்னுடன் பயணிக்கும் பைக்கர்களை சந்தித்துப் பேசினார் சத்குரு. இதில் பங்கெடுக்கும் பைக்கர்கள் பலர் பல விழிப்புணர்வுப் பயணங்களில் பங்கெடுத்திருக்கலாம், ஆனால் இப்பயணம் அனைத்திலும் முக்கியமாக அமையும், ஏனெனில் இது காவேரித் தாயைக் காக்கும் முயற்சி மட்டுமல்ல, நம் நாட்டின் உயிர்நாடிகளான மற்ற நதிகளைக் காக்கவும் இது முன்னுதாரணமாய் அமையும் என்று இப்பயணத்தின் ஆழத்தை அவர்களுக்கு உணர்த்திவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரையும் (அவர்களின் பைக்கையும் :-D) அறிமுகப் படுத்திக்கச் சொன்னார். அவர்களின் பைக்குகளையும் பார்வையிட்டு, சிலவற்றின் சக்தியையும் பரிசோதித்தார். அப்படியே அவரது சிறு வயது மோட்டார் சைக்கிள் பயண அனுபவங்களைப் பகிர்ந்தார்.


![]() | ![]() |
9:15 மணிக்கு மற்ற பங்கேற்பாளர்கள் "புலி பார்த்துவிட்டு" சஃபாரியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். (காலையில் சீக்கிரமே எழுந்து அவர்கள் வனத்தை சுற்றிப்பார்க்க சஃபாரியில் சென்றிருந்தார்கள். 2 மணி நேரம் கழித்து இப்போதுதான் வருகிறார்கள்) கால்ப் கார்ட்டில் வந்துகொண்டிருந்தவர்களைப் பார்த்ததும், அவர்கள் நெருங்கிய நேரத்தில் திடீரென தன் நாற்காலியில் இருந்து பதற்றமாக அந்த வண்டியை பிடிப்பது போல் பாவனை செய்து, "அய்யோ! என்னவாயிற்று? ஒரு இருக்கை காலியாக உள்ளதே... யாரை புலி அடித்துத் திண்றது?" என்று சத்குரு கேட்டதும் ஒரு நிமிடம் அனைவரும் ஸ்தம்பித்தார்கள். பின்தான் சத்குருவின் நகைச்சுவை உணர்வு அவர்களுக்குப் புரிந்தது!
பைக்கர்களுடன் காலை உணவு சாப்பிடும்போது, மெது மெதுவாக பைக்கர்களின் அனுபவங்களும் வெளிவரத் துவங்கின. ஒருவருக்கு இத்தனை தூரம் பைக்கில் ரோட்டில் பயணிப்பது இதுதான் முதல்முறையாம், ஏனெனில் அவரது பெற்றோர்கள் அதை அனுமதிக்க மாட்டார்களாம். இம்முறை சத்குருவுடன் இருப்பதால்தான் அவரை அனுமதித்தார்களாம்! ஆச்சரியம் என்னவெனில் இவர் ஒரு மோட்டார் சைக்கிள் ரேசர். தேசிய அளவு பந்தயங்களில் பொதுவாக 5வது இடத்தில் முடிப்பவர்.
ராஜ்யசபா டிவி சேனலின் தொகுப்பாளர் திரு. ராஹுல் மஹாஜன் அவர்களுடன் சத்குரு உரையாடுகிறார்.

சுவர்ணா டிவி சேனலின் நிருபர் பாவனா அவர்களுக்கு பேட்டியளிக்கிறார் சத்குரு
நேற்று மடிக்கேரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நடிகர்-தயாரிப்பாளர் ரக்ஷித் அவர்களும், நடிகர் டிகந்த அவர்களும் வனப்பூங்கா பாதையில் சத்குருவுடன் நடந்துகொண்டே உரையாடுகிறார்கள். ரக்ஷித் அவர்கள் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார். சற்றும் சளைக்காமல் தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடும், ஆழமாக சிந்திக்கத்தூண்டும் வகையில் சத்குரு பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.

மதிய உணவு வேளை…
நம் பங்கேற்பாளர்களில் சிலர்...
![]() | ![]() | ![]() |
உணவை முடித்துக் கிளம்பத் தயாராக இருக்கும் நம் பைக்கர்கள்


ஹுன்சூர் நோக்கி

Subscribe
வழியில் ஒரு மரப்பண்ணை வளர்க்கும் விவசாயியை சத்குரு சந்தித்தார்
கடந்த 25 ஆண்டுகளாக தனது 12 ஏக்கர் பண்ணையை இந்த விவசாயி பராமரித்து வருகிறார். இங்கு தென்னை, பாக்கு, தேக்கு, கொய்யா, மாமரம், நாவற்பழம், சீதாப்பழம், மிளகுக் கொடி போன்ற 14 வகை மரங்களை ஒரே தோப்பில் வளர்த்து வருகிறார். இப்படியொரு அருமையான பண்ணையை உருவாக்கியதற்காக அந்த விவசாயியை சத்குரு பாராட்டினார்.

மீண்டும் பயணம் தொடர்ந்து ஹுன்சூரை அடைந்தனர்...

மாண்டியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நம் தன்னார்வக் குழு
100 க்கும் மேற்பட்ட கிராமங்களில், 15 பள்ளிக்கூடங்களில், 50 ற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, கிட்டத்தட்ட 35,000 சிற்றேடுகளை இவர்கள் வழங்கியிருக்கிறார்கள். 80ற்கும் மேற்பட்ட பைக்கர்களின் பங்கேற்போடு விழிப்புணர்வுப் பேரணி, மாணவர்களுக்கு இத்தலைப்பில் ஓவியப்போட்டி என பல நிகழ்ச்சிகளை செயல்படுத்தி மாண்டியாவில் இந்த இயக்கத்திற்கு ஆதரவு பெற்றனர்.

பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி

எம்.எல்.ஏ. திரு.விஜய்குமார் அவர்கள்

சட்டமன்ற உறுப்பினர் திரு.ஹெச். விஸ்வநாத், "காவேரி வெறும் ஆறோ, தண்ணீரோ அல்ல. அவள் நம் உயிர். அவளைத் தாய் என்று அழைத்து நம் பிள்ளைகளுக்கு அவள் பெயரை சூட்டிவந்தோம். அவள் மீது கொண்டிருந்த அன்பை நாம் மறந்தபோது, இதோ சத்குரு வந்திருக்கிறார், நாம் மறந்திருந்த அன்னையை நமக்கு நினைவூட்ட" என்றார்.
ஜீ டிவி கர்நாடக மாநில தலைவர் திரு. ஹுன்சூர் ராகவேந்திரா அவர்கள்

திரு. ஹுன்சூர் ராகவேந்திரா அவர்கள் பிரச்சினையை அற்புதமாக சுட்டிக்காட்டினார் :
"இரண்டு துருவங்கள் போன்ற சூழ்நிலைகளில் நாம் மாட்டித் தவிக்கிறோம். வறட்சி ஏற்பட்டு தவிக்கும்போது நமக்கு அரசாங்கம் 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளிக்கிறது. அடுத்து வெள்ளத்தால் பாதிப்பு வரும்போது நமக்கு பிஸ்கட்டும், தண்ணீர் பாட்டிலும் கொடுக்கிறார்கள். நமக்குத் தேவையானது தற்காலிக நிவாரணங்கள் அல்ல, நிலையான தீர்வு"
பிரபல கன்னட நடிகர் ராகினி த்விவேடி அவர்கள்

ராகினி த்விவேடி அவர்கள் அனல் பறக்கும் பேச்சால் அனைவரையும் கவர்ந்து, இந்த காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு துணை நிற்பதாகக் கூறினார்:
"இக்கால இளைஞர்கள் ஒருமுறை உணவகத்திற்கு சென்றாலே ₹500-₹2,000 வரை செலவாகிறது. ஆனால் காவேரியைக் காக்க ஒரு மரம் நடுவதற்கு ₹42 போதுமானது. நாமெல்லாம் முன்வந்து இந்த இயக்கம் வெற்றியடைய நம்மால் முடிந்த நிதியுதவி செய்யவேண்டும். காவேரித்தாய் எனக்கு உண்ண உணவும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்திருக்கிறாள். இங்கு நான் நின்று பேசுவதற்கான சக்தியும் அவள் கொடுத்ததுதான். என்னால் முடிந்த வகியில் எல்லாம் இந்த இயக்கத்திற்கு நான் துணை நிற்பேன்" என்றார்.
விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர், திரு. எம்.ஏ.சங்கர் அவர்கள்
டாக்டர் எம்.ஏ.சங்கர் அவர்கள், நம் வாழ்வில் இம்மண்ணின் இன்றியமையாத தன்மையை நிலைநிறுத்தி வேளாண்காடு வளர்ப்பு நாம் சந்தித்துவரும் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக இருக்கும் என்பதை வலியுறுத்தினார். "மனிதர்கள் நாம் இறந்தால், மக்கி மண்ணோடு மண்ணாவோம். ஆனால் மண்ணே இறந்துவிட்டால் நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது? உணவின் மூலமாக நம் வாழ்க்கைக்குத் தேவையான சத்துக்களை பூமித்தாய் நமக்கு வழங்குகிறாள். அதேபோல் நமக்குத் தேவையான நீரையும் அவளுக்குள் தாங்கிப்பிடித்து அவள் நமக்கு வழங்கமுடியும். அதற்கு நாம் நிறைய மரங்கள் நடவேண்டும். அதுதான் சிறந்த வழி" என்றார்.



நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது ஒரு சிறு குழந்தை, "ஆர்ஜுன்" சத்குருவிடம் வந்து காவேரி கூக்குரலுக்காக ₹42 வழங்கியது...

நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது மக்கள் திரளாக வந்து வழியனுப்புகிறார்கள்...
உண்டுவாடி நோக்கி பயணிக்கும்போது ஒரு சிறு பழ-வேளை
சத்குருவோடு பயணிக்கும்போது பொதுவாக சாலையோர இடைவெளிகள் அதிகம் இராது. ஆனால் இம்முறை கூட வருவோரின் நிலையறிந்து அவர்கள் பசியார சத்குரு சாலையோர கொய்யாப்பழ வண்டி அருகே பைக்கை நிறுத்தினார். கொய்யாப்பழங்களை இவர்கள் ஆசையாக சுவைத்தார்கள்.
கொய்யாப்பழத்திற்கு இத்தனை சுவையா? என்று கொய்யாப்பழத்திலும் சத்குருவின் அன்பிலும் பைக்கர்கள் கரைந்தார்கள்

பாலம் கல்யாணசுந்தரம் ஐயா - நூலக அறிவியலில் தங்கப் பதக்கம் வென்று, 35 வருடம் நூலகராக வேலை செய்தவர் பாலம் கல்யாணசுந்தரம் ஐயா. 35-வருட நூலகப் பணியில் தான் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கு கொடுத்துவிட்டு, தன் சொந்த செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர் இவர். பாலம் எனும் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து அதை இவர் நடத்தி வருகிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியுள்ளது. இவர் "காவேரி கூக்குரல்" இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
தெலங்கானாவின் மேதகு ஆளுநரும், தமிழகத்தின் முன்னாள் பா.ஜ.க பொதுச்செயலாளராருமான திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் "காவேரி கூக்குரல்" இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணராஜ சாகரத்தின் கரைகளில்...
ரக்ஷித் ஷெட்டி, டிகந்த மற்றும் பெங்களூருவில் இருந்த வந்திருந்த அவர்களின் பைக்-நண்பர்கள் சத்குருவுடன் கிருஷ்ணராஜசாகராவின் கரைகளில் சத்குருவுடன் உரையாடினர். காவேரியைக் காக்கத் தேவையான 242 கோடி நிதி சேரும்வரை இந்த இயக்கத்திற்காக செயல்படுவோம் என்று அவர்கள் உறுதி அளித்தார்கள்.
காவேரி நீர்தேக்கம் பற்றிப் பேசுகையில், காவேரி கூக்குரல் என்பது காவேரி வடிநிலத்தை புத்துயிர் பெறச் செய்வது பற்றிய இயக்கம். காவேரி வடிநிலம் புத்துயிர் பெற்றால், ஆறு தானாக ஓடும் என்று விளக்கினார்.
|
|
மண்-தடத்தில்...
மைசூர் அருகே தங்குமிடத்தை அடைந்தபோது சத்குருவை வரவேற்கும் பங்கேற்பாளர்கள்
நம் பைக்கர்களின் குழு-புகைப்படம்
இரவு தங்குமிடத்தில் ராகினி த்விவேடி அவர்கள் சத்குருவுடன் உரையாடுகிறார்
![]() | ![]() |
காவேரிக் கரையில் தங்குமிடம் அமைத்திருக்கிறார்கள். காவேரியின் சலசலப்பு காற்றில் ஒலித்துக் கொண்டிருக்க, உரையாடலின் நடுவே எழுந்த சத்குரு, பேசிக்கொண்டே தண்ணீருக்குள் இறங்கினார். வழக்கம்போல் ஹாஸ்யமான தொனியில் "என் கால்களை முதலைகளுக்குக் கொடுக்கிறேன்" என்றுவிட்டு, சிறிதுநேரம் காவேரியோடு உறவாடியவாறே உரையாடலைத் தொடர்ந்தார்...
|
நாள் 2 நிகழ்வுகளின் தொகுப்பு
மேலும் படிக்க...
விவசாயிகள் சேர்க்கை | தன்னார்வ செயல்கள் | பிரபலங்கள் | ||
|---|---|---|---|---|
சத்குரு வீடியோ | கட்டுரைகள் | நாளிதழ் செய்திகள் | ||
சேனல் செய்திகள் | சிந்தனைக் கருவூலம் | விவசாயி வெற்றிக் கதைகள் |















