பயணத்தின் முன்பாகங்கள் ..

நேற்றோடு சத்குரு மேற்கொண்ட மோட்டார்-சைக்கிள் ராலி நிறைவடைந்தது. இன்று, சத்குரு முன்பே கூறியது போல் கர்நாடக முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவையோடு நதிகளை மீர்போம் வாரியமும் சத்குரு அவர்களும் அடுத்து எடுக்கப்பட வேண்டிய படிகள் குறித்து கலந்தாலோசிக்கின்றனர்.

day16-tb-cc-pic1-2.jpeg

day16-tb-cc-pic1-3.jpeg

day16-tb-cc-pic1-1.jpeg

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? என்று சத்குரு கூறியிருப்பது பற்றியும் இதுவரை நாம் தாண்டி வந்திருக்கும் பாதை, நமக்குக் கிடைத்திருக்கும் ஆதரவுகளைப் பற்றியும் பார்ப்போம்.

242 கோடி மரம் எப்படி முடியும்?

இந்த 242 கோடி மரம் உடனே அல்ல (உடனே முடிந்தால் நன்றாக இருக்கும்!), 12 ஆண்டுகளில் நடவேண்டும்.

  • இதை விவசாயிகள் அவரவர் நிலங்களில் நட்டு பாதுகாப்பார்கள். மரங்கள் காடு-வளர்ப்பு என்பதில் இருந்து விவசாய-வளர்ப்பு என்று மாறவேண்டும். விவசாயி தன் நிலத்தில் வளர்ப்பவற்றை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்சென்று விற்க அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
  • வெட்டுமர வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
  • மரவிவசாயத்தில் ஈடுபடும் முதல் 4-5 ஆண்டுகளுக்கு விவசாயிக்கு பொருளாதாரத்தில் குறைவு ஏற்படும். அதை ஈடுசெய்யவே அரசாங்கத்தில் சலுகை கேட்கிறோம். இதற்கு இரண்டு அரசாங்கங்களும் சம்மதித்துள்ளன.

அரசாங்கங்கள் ஒத்துழைக்கின்றன, விவசாயிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். இப்போது உடனடியாக நடக்கவேண்டியது மரக்கன்று உருவாக்கம்.

மரக்கன்று உருவாக்கத்தில் இருக்கும் சவால்

விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்து அவர்களை மரவிவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கே அதிக செயல் செய்யவேண்டி உள்ளது. ஆனால் அப்படி அவர்கள் மனமுவந்து மரக்கன்று நடும்போது அவை நல்ல நிலையில் வளரவேண்டும். ஏனோ தானோவென்று உருவாக்கப்பட்ட மரக்கன்றுகளை அவர்களிடம் கொடுத்து அவை பட்டுப்போனால் விவசாயிகளின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது சாத்தியமில்லை.

நல்ல மரக்கன்று உருவாக்க 9-15 மாதங்கள் ஆகும்

விவசாயிகள் பலரின் மீது நம்பிக்கை வைத்து துவண்டுபோய் உள்ளார்கள். இப்போது நாம் வழங்கும் மரக்கன்று நல்ல தரமானதாக இருக்கவேண்டும். அவற்றை நட்டால் அவை நன்றாக வளரவேண்டும். பட்டுவிடக்கூடாது. ஒரு நல்ல மரக்கன்று வளர்ப்பது என்றால் 9-15 மாதங்கள் ஆகும். ஆனால் அப்போதும் அவை பார்க்க சுமாராகத்தான் இருக்கும். மற்ற நர்சரிகளில் 4-5 மாதத்தில் பார்க்க நன்றாக இருக்கும் மரக்கன்று வளர்த்துவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் இரசாயன உரம் சேர்க்கிறார்கள். நாமோ இயற்கை விவசாய முறையில் வளர்க்கிறோம். இவ்வழியில் உருவாக்கப்படும் மரக்கன்றுகள் பார்க்க சுமாராக இருந்தாலும் நடப்படும்போது பிழைக்கும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இரசாயன உரம் பயன்படுத்தினால் வேரில் நிமடாய்டு சேரும்

சமீபத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 40 மரக்கன்று உற்பத்தியாளர்களை அவரவர் மரக்கன்றுகளை சோதனைக்கு சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தார்கள். பசுமைக்கரங்களும் இதில் பங்கெடுத்தது. அதை பரிசோதித்ததில் மற்ற 39 மரக்கன்றுகளின் வேரில் நிமடாய்டு (Nematoid) சேர்ந்திருந்தது. இரசாயன உரம் பயன்படுத்தினால் இவ்வாறு ஆகும். இது மண்வளத்தை பாதிக்கும். வெளிநாடுகளில் இரசாயன உரம் பயன்படுத்தாதீர்கள் என்று சொல்கிறார்கள். நாம் உடனே செய்யமுடியாது என்றாலும் படிப்படியாக 80%மேனும் குறைக்கவேண்டும்.

நீங்களும் மரக்கன்று உருவாக்கலாம்

தேவையான மரக்கன்றுகளை ஈஷா உருவாக்கிக் கொடுக்கும் என்றல்ல. ஈஷாவில் ஏற்கெனவே செயல்படும் 35 நர்சரிகளும், அதாவது இனி "மகாத்மா பசுமை இந்தியா பணித்திட்டம்" மையங்களும், அடுத்து காவேரி வளையத்தில் வரப்போகும் 350 மையங்களும் மரக்கன்றுகள் உருவாக்கும். ஆனால் இதுதவிர அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் மரவிவசாயப் பயிற்சியில், கிராமப் பெண்களுக்கும் விருப்பமிருப்போருக்கும் மரக்கன்று உருவாக்க பயிற்சியளித்து, அவர்கள் இதையே ஒரு தொழிலாக பின்பற்றக்கூடிய வாய்ப்புகளும் வழங்கப்படும்.

நீங்கள் கொடுக்கும் ₹ 42

அப்படி உருவாக்கப்படும் மரக்கன்றுகளை வாங்குவதற்குத்தான் நீங்கள் வழங்கும் ₹42 பயன்படும். ஆனால் இதைவிட எளிதாக யாரிடமெல்லாம் ஜமீன் இருக்கிறதோ, யாரால் முடியுமோ அவர்கள் பணத்திற்குப் பதிலாக தரமான மரக்கன்றுகளை வளர்த்துத் தந்துவிட்டால், இந்த நிதியைக் கையாளும் சிரமமே எங்களுக்கு இருக்காது.
என்று சத்குரு பேசியபோது

  • அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி மரக்கன்றுகள் உருவாக்கித் தருவதாக ஈரோட்டில் SKM குழும நிறுவனங்களின் நிறுவனர் பத்மஸ்ரீ SKM மயிலாநந்தன் அவர்கள், எக்செல் கல்விக்குழும நிறுவனர் திரு. AKநடேசன் அவர்கள், அக்னி ஸ்டீல்ஸ் மற்றும் ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திரு. M.சின்னசாமி அவர்கள் ஆகியோர் இன்னும் பிறரோடு சேர்ந்து இதை செய்வதாக உறுதியளித்தனர்.
  • மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு.எட்டியூரப்பா அவர்கள் வனத்துறை மூலமாக 2 கோடி மரக்கன்றுகள் தருவதாக உறுதியளித்துள்ளார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர் திரு.O.P.ரவீந்திரநாத் அவர்கள் 1 கோடி மரக்கன்றுகள் உருவாக்கித் தருவதாக வாக்களித்துள்ளார்.
  • ரத்தினம் கல்வி குழுமங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் வளர்த்துதர தர உறுதியெடுத்துள்ளார்கள்.
  • ஆர்ய வைஸ்ய சமூகம் அடுத்த 12 ஆண்டுகளில் 3 லட்சம் மரக்கன்றுகள் தருவதற்கான நிதி திரட்டவுள்ளது.
  • இதுபோல் நடிகர்கள் கங்கனா ரனாவத், காஜல் அகர்வால், சமாந்தா, தமன்னா, ராய் லக்ஷ்மி, ரக்ஷித் ஷெட்டி, ஷில்பா ரெட்டி ஆகியோர் ஒவ்வொருவரும் 1 லட்சம் மரக்கன்றுகளுக்கு நிதி திரட்டுவதாக உறுதியளித்துள்ளனர்.

பெரும் புரட்சி

ஒவ்வொரு தாலுக்காவிலும் குறைந்தது 250-500 விவசாயிகள் மரவிவசாயத்திற்கு மாறினால், அவர்களின் வெற்றியைப் பார்த்து அடுத்த சில ஆண்டுகளில் பற்பல விவசாயிகள் இதற்கு மாறத் துவங்குவார்கள். இது பெரும் புரட்சியாக மாறும். அதனால் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், விவசாயி சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?

  • உங்கள் நிதி திரட்டும் பக்கத்தை துவங்கி, நிதி திரட்டலாம்
  • தரமான மரக்கன்றுகளை உருவாக்கிக் கொடுக்கலாம்
  • மரவிவசாயம் பற்றி விளக்கி ஒவ்வொரு தாலுக்காவிலும் 250-500 விவசாயிகளை மரவிவசாயத்திற்கு மாறச் செய்ய தன்னார்வத் தொண்டு செய்யலாம்.

காவேரிக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

இதுவரை எத்தனை மரங்கள் எங்கெங்கிருந்து வழங்கப்பட்டுள்ளன? தெரிந்துகொள்ள இங்கே காண்க

இத்துடன் காவேரிப் பயணம் இனிதே நிறைவடைகிறது. இனிதான் நம் அனைவரின் செயல் ஆரம்பம்!!!

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்