பயணத்தின் முன்பாகங்கள் ..

இன்று மாலை கொடிசியா வளாகத்திற்கு கோவை திரண்டு வர உள்ளது. காவேரியைக் காக்கும் தாகம் அனைவருக்கும் பரவி வருகிறது. இது கொழுந்துவிட்டு எரியும் தீயாக வேண்டும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கொழுந்துவிட்டு எரியும் இந்தத் தீதான் மரத்தை உருவாக்கி, காவேரியில் நீரோட வழிசெய்யும்!

இம்முறை கோவையின் தொழிலதிபர்களும் முக்கிய பிரமுகர்களும் சத்குருவின் இந்த மகத்தான பணிக்கு தம் நன்றியையும் உறுதுணையையும் எடுத்துரைக்கும் விதமாக, சத்குருவை வரவேற்கும் விழா பொறுப்பை அவர்களே முழுவதுமாக மேற்கொண்டுள்ளார்கள்...

day15-tb-cc-pic1-5.jpg

கொடிசியாவில் "சத்குரு செல்ஃபி பாயிண்ட்"…

வழக்கமாக யாருடனும் சத்குரு அவர்கள் செல்ஃபி எடுப்பதில்லை. இன்றும் அப்படித்தான். 2017ல் முதல்முறையாக அவர் நின்றிருந்த ஆற்றின் அருகே செல்ஃபி எடுத்து அதைப் பகிர்ந்தார். இப்போது காவேரிக்காக…

day15-tb-cc-pic1-1.jpg

day15-tb-cc-pic1-2.jpg

வருபவர்களின் மனதில் காவேரி நிலைக்க மற்றுமொரு முயற்சி…

மருதாணியில் காவேரி…

day15-tb-cc-pic2-2.jpeg

day15-tb-cc-pic2-1.jpeg

இரவு 11:20 மணிக்கு சேலத்தை வந்தடைந்தும், அருகில் இருக்கும் கொல்லி மலையின் வளைவுகளில் பைக் ஓட்ட விருப்பம் கொண்டு காலை 7 மணிக்கெல்லாம் அந்த 75 கொண்டையூசி வளைவுக்ளை எதிர்கொண்டனர்

day15-tb-cc-pic7-15.jpeg.jpg

காலை 10:30 மணியளவில் 1 லட்சம் மரக்கன்றுகளுக்கு நிதி வழங்கிய இந்தி நடிகர் கங்கனா ரனாவத் அவர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்

இன்று காலை சேலத்தில் நடிகர் ராய் லக்ஷ்மி சத்குரு அவர்களை சந்தித்தார். இவரும் 1 லட்சம் மரக்கன்றுகளுக்கு நிதி திரட்டுகிறார்…

day15-tb-cc-pic2-3.jpeg

அடுத்த இடம் சேலம் லிங்கபைரவி கோவில். சத்குரு கிளம்புகிறார். நடிகர் ராய் லக்ஷ்மியும் இன்னொரு பைக்கில் பயணிக்கிறார்…

day15-tb-cc-pic2-5.jpeg

day15-tb-cc-pic2-4.jpeg

சேலம் லிங்கபைரவி கோவிலில்…

day15-tb-cc-pic2-6.jpeg

day15-tb-cc-pic2-7.jpeg

day15-tb-cc-pic2-10.jpeg

day15-tb-cc-pic2-9.jpeg

கோவை நோக்கி பயணம் ஆரம்பம்…

day15-tb-cc-pic2-12.jpeg

day15-tb-cc-pic2-11.jpeg

ஜீம்…பூ…பா… தயாராகிவிட்ட கொடிசியா வளாகம்!

மதியம் 1:00 மணி - கோவையைச் சேர்ந்த 40 தொழிலதிபர்கள் ஒன்றாக இணைந்து இன்று மாலை சத்குரு அவர்களை வரவேற்க உள்ளார்கள். இவர்களில் கங்கா மருத்துவமனை இயக்குநர் திரு.ராஜசேகர் அவர்களும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.M.கிருஷணன் அவர்களும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு முழு நிகழ்ச்சியையும் ஒருங்கிணைக்கிறார்கள்.

ஈரோடு டெக்ஸ் வாலியில் … கொடிசியாவில் சத்குருவை வரவேற்க கிமீ கணக்கில் அணிவகுத்திருக்கும் தன்னார்வத் தொண்டர்கள்

ஈரோடு டெக்ஸ் வாலியில் இளைப்பாறிவிட்டு மீண்டும் பயணம் தொடர்கிறது. மழை வரத் துவங்கிவிட்டது.

day15-tb-cc-pic3-1.jpg

day15-tb-cc-pic3-2.jpg

day15-tb-cc-pic3-3

day15-tb-cc-pic3-4.jpg

கோவையின் நுழைவிடத்தில் இன்னும் சிலர் மோட்டார் சைக்கிளில் சேர்ந்து கொள்கின்றனர். பொதுக்கூட்டம் நிகழும் கொடிசியா வளாகம் நோக்கி கடைசி கட்டப் பயணம் துவங்குகிறது.

day15-tb-cc-pic3-9.jpg day15-tb-cc-pic3-11.jpg

 

day15-tb-cc-pic3-6.jpg day15-tb-cc-pic3-5.jpg

 

கொடிசியா நுழைவாயிலில் இருந்து வளாகக் கட்டிடம் வரை சத்குருவை வரவேற்க தன்னார்வத் தொண்டர்கள் கிமீ கணக்கில் அணிவகுத்து நிற்கிறார்கள். அனைவருக்கும் கையசைத்தபடி சத்குரு பைக் ஓட்டிச் செல்கிறார்.

day15-tb-cc-pic7-13.jpeg

day15-tb-cc-pic7-11.jpeg

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

Day15-Changed-5

Day15-Changed-1

மாலை 6:00 மணியளவில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கும் தொழிலதிபர்களை சத்குரு சந்திக்கிறார்.

day15-tb-cc-pic7-3.jpeg

day15-tb-cc-pic5-2.jpeg

கங்கா மருத்துவமனை இயக்குநர் திரு.ராஜசேகர் அவர்கள்

day15-tb-cc-pic7-1.jpeg

"கோயமுத்தூரின் மிகமிக முக்கியமான பிரமுகர்கள் அனைவரும் சத்குருவின் இந்த மகத்தான முயற்சிக்கு உறுதுணையாக இன்று இங்கு ஒன்றுகூடி இருப்பது வரலாற்று சிறப்புமிக்க தருணம்" என்று வந்திருப்பவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

நதிகளை மீட்போம் ஒருங்கிணைப்பாளர் திரு.யூரி ஜெயின் அவர்கள் காவேரி கூக்குரல் இயக்கம் பற்றிப் பேசுகிறார்.

day15-tb-cc-pic7-2.jpeg

மரவிவசாயி பொள்ளாச்சி வள்ளுவன் அவர்கள் இயற்கை வேளாண்மை பற்றியும், ஈஷாவின் உதவியோடு தான் மரவிவசாயத்திற்கு மாறியது பற்றியும் பகிர்கிறார்.

day15-tb-cc-pic7-4.jpeg

அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குநர் திரு.ரவி சாம் அவர்கள், "நீங்கள் சென்ற ஊரில் எல்லாம் கொட்டும் மழையிலும் நள்ளிரவு வேளையிலும் உங்களுக்காகக் காத்திருந்து மக்கள் உங்களை வரவேற்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு மலைப்பாக உள்ளது" என்று பாராட்டிவிட்டு, இந்த இயக்கம் வெகுவிரைவில் வெற்றிபெறுவதற்கு கூடியிருக்கும் அனைவரின் பங்களிப்பையும் வேண்டினார்.

day15-tb-cc-pic7-6.jpeg

கடைசியாக பேசிய சத்குரு அவர்கள், பனை மரங்களே தண்ணீரின்றி இறக்கத் துவங்கினால், இது பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை. உடனடியாக செயல்படாவிட்டால் இந்தியாவின் 40% நிலம் பாலைவனமாகும். இது தாமதமின்றி செயல்பட வேண்டிய நேரம். விவசாயிகளுக்கு அதிகளவில் வருமானம் கிடைக்க மரவிவசாயம் வழிசெய்யும். அதனால் இந்த முயற்சி தோற்காது. இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரே சவால், தேவையான மரக்கன்றுகளை உருவாக்குவதுதான். அவரவரால் முடிந்ததை எல்லாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்று சத்குரு கேட்டுக்கொண்டார்.

day15-tb-cc-pic7-5.jpeg

நிகழ்ச்சி நுழைவாயில்

Day15-Changed-3

மேடையில் நந்தியின் வாயில் இருந்து நீர் ஊற்றுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இது தலைக்காவேரியில் இருப்பது போன்ற அமைப்பு. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு. கிருஷ்ணன் அவர்களின் எண்ணத்தில் இந்த சிந்தனை உதித்ததாம்.

day15-tb-cc-pic7-16.jpeg.jpg

சம்ஸ்கிருதி பிள்ளைகள் கலைநிகழ்ச்சி

day15-tb-cc-pic5-6.jpeg

day15-tb-cc-pic5-8.jpeg

day15-tb-cc-pic5-5.jpeg

அரங்கிற்குள் சத்குரு பைக்கில் நுழைகிறார்

Day15-Changed-8

தமிழ்த்தாய் வாழ்த்து

day15-tb-cc-pic5-11.jpeg

கூடியிருக்கும் மக்கள்

day15-tb-cc-pic5-10.jpeg

day15-tb-cc-pic5-7.jpeg

காவேரி கூக்குரலுக்கு ஆதரவாக நீலநிறமாய் மாறிய அரங்கம்

day15-tb-cc-pic5-14.jpeg

Day15-Changed-7

 

day15-tb-cc-pic5-13.jpeg

சிறப்பு விருந்தினர்கள்

  • கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் திரு. B.K.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள்
  • நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. S.P.வேலுமணி அவர்கள்
  • சாண்ட்ஃபிட்ஸ் வார்ப்பக தலைவர் A.V.வரதராஜன் அவர்கள்
  • கொங்கு மக்கள் தேசிய கட்சி நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் திரு. E.R.ஈஸ்வரன் அவர்கள்
  • இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் லக்ஷ்மி நாராயணசாமி அவர்கள்
  • கோவை கொடிசியா தலைவர் திரு. R.ராமமூர்த்தி அவர்கள்

விழா ஒருங்கிணைப்பாளர்கள்

  • சங்கரா கண் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக அரங்காவலர் பத்மஸ்ரீ டாக்டர் R.V.ரமணி அவர்கள்
  • ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் திரு.M.கிருஷணன் அவர்கள்
  • கங்கா மருத்துவமனை இயக்குநர் திரு.ராஜசேகர் அவர்கள்
  • கே.பி.ஆர் குழும தலைவர் திரு. கே.பி.ராமசாமி அவர்கள்
  • ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் திரு.K.ராமசாமி அவர்கள்
  • அத்வைத் லக்ஷ்மி இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் திரு.ரவி சாம் அவர்கள்
  • CRI குழும துணைத் தலைவர் திரு. R.சௌந்தரராஜன் அவர்கள்
  • குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி துணை தாளாளர் மற்றும் தலைவர் திரு.சங்கர் வானவராயர்
  • செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குநர் திரு.D.நந்தகுமார் அவர்கள்
  • கோவை யங்க இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் மற்றும் கோவை கதிர்மில்ஸ் நூற்பாலையின் தலைவர் திரு.அனுஷ் ராமசாமி அவர்கள்
  • சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆறுக்குட்டி அவர்கள்

கங்கா மருத்துவமனை இயக்குநர் திரு.ராஜசேகர் அவர்கள்

day15-tb-cc-pic6-2.jpeg

இத்தனை பிரம்மாண்டமான ஒரு செயலை சிந்திக்க மட்டுமல்ல அதை செயல்படுத்துவதும் சத்குருவால் மட்டும்தான் முடியும். நதிசார்ந்த நாகரீகமாக நாம் வளர்ந்தோம். 802 கிமீ நீளத்திற்குல் கிடைத்த மிக வளமான பூமி இது. நம் இலக்கியங்களில் வான் பொய்த்தாலும் காவேரி பொய்க்காது என்றார்கள். அப்படிப்பட்ட மாபெரும் நதி இன்று வற்றியுள்ளது. நம் பேராசையாலும், கவனமற்ற , பொறுப்பற்ற போக்காலும் இந்நிலை வந்துள்ளது. அனைவருக்கும் பிரச்சினை தெரியும். தீர்வும் தெரியும். அதை நடத்துவதற்கு சத்குரு அவர்களும் வந்துவிட்டார். அரசாங்கம், மக்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரையும் ஒன்றுசேர்க்கக்கூடிய அதீத சக்தி அவரிடம் உள்ளது. அவருடன் செயல்பட முடிவது நம் பெருமை. இந்த செயல் வெற்றிகரமாக நடைபெற 12 ஆண்டுகளும் துணை நிற்போம்.

மரவிவசாயி திரு.செந்தில்குமார் அவர்கள்

day15-tb-cc-pic6-3.jpeg

மரவிவசாயம் பின்பற்ற ஆரம்பித்ததில் இருந்து வறட்சி, அடைமழை போன்ற பிரச்சினைகள் தன் வயலை பாதிப்பதில்லை. விளைச்சலும் அமோகமாக நல்ல தரத்தில் உள்ளது. சென்ற வருடம் மட்டும் பயிர் விளைச்சலால் 13 லட்சம் வருமானம் கிடைத்தது. செலவு போக கையில் 9 லட்சம் லாபமாகக் கிடைத்தது. இது வெறும் 6.5 ஏக்கரில் கிடைத்திருக்கும் வருமானம். மற்றவரின் வாழை ₹300 என்றால் என் வாழை ₹350ற்குப் போகிறது. மற்றவரின் மஞ்சள் ₹7000 என்றால் என் மஞ்சள் ₹12500ற்குப் போகிறது. விளைச்சலின் தரம் அவ்வாறு இருக்கிறது. இதேபோன்ற பயங்களை மரவிவசாயம் பின்பற்றி லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற வேண்டும்.

இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் லக்ஷ்மி நாராயணசாமி அவர்கள்

day15-tb-cc-pic6-4.jpeg

நேரடியாக காவேரிக் கரையில் இல்லாவிட்டாலும், காவேரியில் கலக்கும் நொய்யல் நதி நம்மூர் வழியே செல்கிறது. அதனால் காவேரிப் பிரச்சினை நம் பிரச்சினையும்தான். நம் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், நீர்வள பிரச்சினைகள் அனைத்திற்கும் இது நிச்சயம் நல்ல தீர்வாக அமையும்.இதில் என் தனிப்பங்காக நான் 5000 மரக்கன்றுகளுக்கு நிதி வழங்குவேன்.

கோவை கொடிசியா தலைவர் திரு. R.ராம்மூர்த்தி அவர்கள்

day15-tb-cc-pic6-13.jpeg

சில திட்டங்கள் சிலருக்கு மட்டும் பயன்படும். சில திட்டங்கள் சில பகுதிக்கு மட்டும் பயன்படும். ஆனால் இத்திட்டம் அனைவருக்கும் பயன்படும் விதமாக உள்ளது. விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு சுற்றுச்சூழல் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என்று பலவற்றிற்கும் இது தீர்வாக அமையும். அதையுவிட ஜி.எஸ்.டி மூலம் அரசாங்கத்திற்கும் வருமானம் வரும் என்கிறார். நாம் எல்லோரும் துணைநின்று இதைச் செயல்படுத்த வேண்டும்.

சாண்ட்ஃபிட்ஸ் வார்ப்பக தலைவர் A.V.வரதராஜன் அவர்கள்

day15-tb-cc-pic6-5.jpeg

மிகப் பிரம்மாண்டமான பணியை சத்குரு மேற்கொண்டிருக்கிறார். இன்று பனியையும் காணவில்லை, மழையையும் காணவில்லை, ஆடிக் காற்றும் காணவில்லை. முன்பு வகை வகையாய் பயிர்களும், சிறுதானியங்களும் கிடைக்கும். இன்று அவற்றில் பெரும்பாலானவற்றை பார்க்கவே முடியவில்லை. தொழில் மட்டும் வளர்ந்து விவசாயம் இல்லாவிட்டால் பின் நமக்கு உணவிற்கு வழியிருக்காது. நமக்கு முன் இந்த பூமியும் இயற்கையும் நன்றாக இருந்தன. மனிதன் வந்து சௌகரியம் தேட ஆரம்பித்ததும்தான் இயற்கை அழியத்துவங்கியது. இந்நிலை நீடித்தால் முதலில் அழியப்போவதும் நாம்தான். இந்த பாதிப்பு நிகழக் காரணமாக இருப்பது நாம்தான். நாம் வைக்கப்போகும் மரங்கள் ஏதோ தரும் காரியமல்ல. நாம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக மரம் நடுவோம். உறவினர்களை நேசிப்பது போல் மரங்களையும் நேசித்து வளர்ப்போம், காப்போம்.

கொங்கு மக்கள் தேசிய கட்சி நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் திரு. E.R.ஈஸ்வரன் அவர்கள்

day15-tb-cc-pic6-6.jpeg

இது வரவேற்பு விழாவா? வெற்றி விழாவா? என்ற சந்தேகம் எழும்புகிறது. ஆனால் இது காவேரி வரும் என்பதற்கான நம்பிக்கை விழா. பொருளாதார நிலையில் விவசாயிகளுக்கு இது லாபம் தருவதாக இருக்கும் என்று விவசாயிகளுக்கு நாம் எடுத்துக்கூற வேண்டும். மேட்டூரில் இருந்து கரூர்வரை இருக்கும் விவசாயிகள் மரவிவசாயத்தில் ஈடுபடுவதற்கு தேவையான செயல்களை நாங்கள் நிச்சயம் செய்வோம்.

ஆர்ய வைஸ்ய சமூகம் அடுத்த 12 ஆண்டுகளில் 3 லட்சம் மரக்கன்றுகள் தருவதற்கான நிதி திரட்டவுள்ளது. அதற்கு அச்சாரமாக ₹5 லட்சத்திற்கான காசோலையை சுமங்கலி வாசனைத் திரவியங்கள் திரு.தண்டபாணி அவர்களும் திரு. யுவராஜ் அவர்களும் சத்குரு அவர்களிடம் வழங்குகிறார்கள்.

day15-tb-cc-pic6-9.jpeg

ரத்தினம் கல்வி குழுமங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் வளர்த்துதர தர உறுதியெடுத்துள்ளார்கள். மாதாமாதம் 30,000 மரக்கன்றுகள் உருவாக்கி வழங்க 1 ஏக்கர் நிலத்தை இதற்காக ஒதுக்கியிருக்கிறார்கள். திரு. மதன் அவர்கள் இப்போது ஒரு மரக்கன்றை சத்குருவிடம் வழங்குவார்.

day15-tb-cc-pic6-8.jpeg

கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் திரு. B.K.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள்

day15-tb-cc-pic6-7.jpeg

இதுவரை இதுபோல் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் கூடி பேசியிருக்கிறோம். ஆனால் அதுபோன்ற கூட்டங்களில் பெரும்பாலும் நான்தான் இருப்பதிலேயே வயது குறைந்தவனாக இருப்பேன். இன்று இங்கு இத்தனை இளைஞர்கள், மக்களைக் காண்கிறேன். பிரச்சினைக்குத் தீர்வென்ன என்று பலர் பேசுகிறோம், புலம்புகிறோம். ஆனால் வித்தியாசமாக சிந்தித்து, துணிச்சலோடு செயல்பட்டு, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, கால மாற்றத்திற்கு வித்திடக்கூடியவர்கள் வெகுசிலர். அதில் சத்குருவும் ஒருவர். இப்பிரச்சினையை பற்றி சத்குரு மக்களிடம் விழிப்புணர்வல்ல, பொறுப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.

UNCCD COP14ன் நேரலை காட்சிகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். 195 நாடுகளின் பிரதிநிதிகள் அங்கு வந்திருந்தார்கள். சத்குருவை ஒருமனதாக வரவேற்று முன்வரிசையில் அவர்கள் அமரச் செய்ததை நான் பார்த்து அசந்துபோனேன். அரசாங்கம், விவசாயிகள், ஊடகம், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரையும் ஒருநோக்காக இதில் ஒன்றிணைத்திருக்கிறார். ஏனெனில் எந்தவொரு இயக்கமும் மக்களின் இயக்கமாக மாறாமல் வெற்றியடையாது. மகாத்மாவின் வழியில் இதை மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறீர்கள். இது நிச்சயம் வெற்றி பெறும்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. S.P.வேலுமணி அவர்கள்

day15-tb-cc-pic6-10.jpeg

கடந்த சில வருடங்களாக புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளைப் பின்பற்றி இதுவரை 4.5 கோடி மரங்கள் நட்டுள்ளோம். தேவையான நிதி ஒதுக்கி எங்கள் நாற்றுப்பண்ணைகள் மூலம் மரக்கன்றுகளை உருவாக்கவும், விவசாயி மரவிவசாயத்திற்கு மாறுவதற்கு சலுகைகள் வழங்கவும், சட்டங்கள் மாற்றவும் முதல்வர் அவர்களுடன் சேர்ந்து நிச்சயம் செயல்படுவோம்.

சத்குரு:

day15-tb-cc-pic6-11.jpeg

நிகழ்ச்சியின் முழு வீடியோ பதிவு:


9:45 மணியளவில் விழா முடித்து சத்குரு அவர்கள் கிளம்புகிறார்கள்:

day15-tb-cc-pic6-14.jpeg

ஈஷா யோக மையம் நோக்கி…

day15-tb-cc-pic6-15.jpeg

என்றாலும் உடனே ஈஷா யோக மையம் அல்ல. வழியில் தொடர்ந்து மக்கள் சத்குருவை வரவேற்க ஆங்காங்கே காத்திருக்கிறார்கள்

10:30 மணியளவில் தீத்திப்பாளையம்

Day15-Changed-7Day15-Changed-8

பூளுவாப்பட்டி

Day15-Changed-9

ஆலாந்துரை

Day15-Changed-10Day15-Changed-11

 

Day15-Changed-12Day15-Changed-13

 

இருட்டுப்பள்ளம்

Day15-Changed-14Day15-Changed-15

செம்மேடு

Day15-Changed-16Day15-Changed-17

11:45 மணியளவில் ஆதியோகி

Day15-Changed-18Day15-Changed-19

மலைவாழ் மக்களும் ஈஷாவின் மூலம் சிறுதொழில் ஆரம்பித்தவர்களும் காவேரி கூக்குரலுக்கு ₹57,540 நிதி வழங்குகிறார்கள்

Day15-Changed-20

பைக்கர்களிடம் விடைபெறுகிறார்

Day15-Changed-21

 

பயணம் இனிதே நிறைவடைந்தது

Day15-Changed-22

 

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்