காவேரி நினைவேடுகள்: சத்குருவின் காவேரிப் பயணம்: நாள் 13
இன்றோடு பங்கேற்பாளர்களின் பயணம் முடிவுக்கு வருகிறது. அதனால் காலையில் சத்குருவுடன் சத்சங்கம் நடைபெறுகிறது. இதை முடித்ததும் காலை 9 மணியளவில் புதுச்சேரியிலும் மாலை 4 மணிக்கு சென்னையிலும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இன்றோடு பங்கேற்பாளர்களின் பயணம் முடிவுக்கு வருகிறது. அதனால் காலையில் சத்குருவுடன் சத்சங்கம் நடைபெறுகிறது. இதை முடித்ததும் காலை 9 மணியளவில் புதுச்சேரியிலும் மாலை 4 மணிக்கு சென்னையிலும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் இருக்கும் ஆற்றோரக் குட்டை அருகே தென்னந்தோப்பில் இரவு தங்கினார்கள்.. காலை வேளை…

|
|
|
இன்றோடு பங்கேற்பாளர்களின் பயணம் முடிவடைகிறது. இன்று காலை சத்குருவுடன் சத்சங்கம் நடைபெறுகிறது

|
|
|
சத்சங்கம் முடிந்து க்ரூப் ஃபோட்டோ - பைக்கர்களுடன்

பங்கேற்பாளர்களுடன்...

ஆனந்தமான நேரம்...

புதுச்சேரி கூட்டத்திற்குக் கிளம்ப சத்குரு ஆயத்தமாகிறார்

பொதுக்கூட்டம் நிகழும் இடம் நோக்கி

சத்குருவும் பைக்கர்களும் புதுச்சேரி ராஜ் நிவாஸ் அடைந்துவிட்டார்கள். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் சத்குருவை வரவேற்றார்.
![]() | ![]() |
இங்கு கூடியிருக்கும் முக்கிய பிரமுகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்கிறது.
|
|
|
இந்த நிகழ்வின் ஞாபகார்த்தமாக ராஜ்நிவாஸ் வளாகத்தில் சத்குரு அவர்கள் ஒரு செடி நடுகிறார்.
![]() | ![]() |
காவேரி கூக்குரலுக்கு அதரவு...
|
|
ராஜ் நிவாஸில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் கம்பன் கலை அரங்கம் செல்லும் வழியில் காந்தி சிலை அருகே நின்று மரியாதை செய்துவிட்டு செல்கிறார்கள். மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இப்போது செயலில் இருக்கும் 35 நர்சரிகளுக்கும், இனி காவேரி வளையத்தில் வரப்போகும் 350 நர்சரிகளுக்கும் 'மகாத்மா பசுமை இந்தியா பணித்திட்டம்' (Mahatma Green India Mission) என்று பெயர் சூட்டப்படும் என்று சத்குரு நேற்று அறிவித்தார்கள்.
![]() | ![]() |
வரவேற்பு ஏற்பாடுகள்
|
|
|
சிறப்பு விருந்தினர்கள்
மாண்புமிகு முதல்வர் திரு.V.நாராயணசாமி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கோகுலகிருஷ்ணன் அவர்கள், சமூகநலத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. M.கந்தசாமி அவர்கள், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.நமச்சிவாயம் அவர்கள்

சம்ஸ்கிருதி பிள்ளைகளின் நடன நிகழ்ச்சி

வந்திருக்கும் பொதுமக்கள்
![]() | ![]() |
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கோகுலகிருஷ்ணன் அவர்கள்

இன்று ஒரு முக்கியமான நாள். Nature நாளிதழ் 151 நாடுகளில் பசுமைப்பரப்பு பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது. இதில் அமெரிக்காவில் ஒவ்வொரு மனிதருக்கும் தலா 699 மரம் இருப்பதாகவும் இந்தியாவில் ஒரு நபருக்கு 28 மரங்கள் மட்டுமே இருப்பதாக சொல்கிறார்கள். முன்காலத்தில். வெள்ளையர்கள் மரம் வெட்டினார்கள். இப்போது நாமே செய்கிறோம். விவசாயத் தேவை, நகரமயமாக்கல் என்ன குறுகியகால வசதிக்காக சுற்றுச்சூழல் பற்றிய கவனமின்றி இருந்துவிட்டோம். மரங்கள் வளர்த்தால் பொருளாதார புரட்சி ஏற்படும். நீர் மேலாண்மை. வான்கொடையாய் வரும் மழையை நமக்கு சேமிக்கத் தெரியவில்லை. நதிகளிய இணைக்கலாமா? வேண்டாமா? என்பது போன்ற சுற்றுச்சூழல் சர்ச்சைகளுக்குள் சிக்காமல், கிடைத்த நீரை சேமிக்க நாம் வழிசெய்யவேண்டும். நிறைய மரம் நடுவோம், தண்ணீர் சேமிப்போம்
Subscribe
சுற்றுச்சூழல் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் திரு. M.கந்தசாமி அவர்கள்

போர்வெல் போடுவது மட்டுமல்ல தொழிற்சாலைக் கழிவுகளை 200 அடி ஆழத்தில் பூமிக்குள் செலுத்துகிறார்கள். குழந்தைகளுக்கு எதை விட்டுச் செல்லப்போகிறோம்? சொத்து சேர்த்து பிரயோஜனம் இல்லை., வருங்காலத்துக்கு நல்ல சூற்றுச்சூழல் விட்டுச் செல்லவேண்டும்
பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.நமச்சிவாயம் அவர்கள்

எதை செய்ய நினைத்தாலும் அதை நேர்த்தியாக, அழகாக செய்துமுடிக்கும் திறன் சத்குருவிற்கு உண்டு. நாம் வாழ சுத்தமான ஆரோக்கியமான சூழ்நிலை தேவை. மரம் நடுவதால், காற்று, தண்ணீர், மண், மக்கள் அனைவரும் பயன்படுவர். ஆனால் இதை அரசாங்கம் மட்டும் தனியாக செயல்படுத்த முடியாது. மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு திட்டம் வெற்றியாகும். குழந்தைகளுக்கு சொத்து மட்டுமில்லை, சுத்தமான தண்ணீர், காற்று, நிலம் ஆகியவற்றையும் தருவது பெற்றோரின் கடமையாக இருக்கவேண்டும். இப்பணியில் சத்குருவோடு இணைந்து செயல்படுவதில் பெருமை. நிச்சயம் துணை நிற்போம். இது உறுதி.
மாண்புமிகு முதல்வர் திரு.V.நாராயணசாமி அவர்கள்

நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பது மட்டுமல்ல நம் ஜீவாதாரமே காவேரித்தாய்தான். முன்காலத்தில் காவேரிக் கரையில் முப்போகம் விளைந்தது. காவேரியில் நீர் அபரிமிதமாக இருந்தது. சுற்றுச்சூழல் சரியாக வைத்தால் இயற்கை கேட்கும் அனைத்தும் கொடுக்கும். ஆனால் சுகத்திற்காக வியாபார நோக்கில் செயல்படுவதால் இயற்கை அழிகிறது. நாமும் பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம். நீர்நிலை காப்பதற்கும் மரம் வளர்ப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும். அந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சத்குரு இந்தப் பயணம் மேகொண்டிருக்கிறார். சுற்றுச்சூழல் பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. காவேரி படுகையில் எங்கள் அரசு மரம் நடும். மர விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிக்கு ₹10,000 மானியம் வழங்கப்படும். சத்குருவின் வேண்டுகோளுக்கு இணங்க காடு வளர்க்கும் விவசாயிகளுக்கும் இந்த மானியம் வழங்குவோம். ஈஷா மற்றும் பொதுமக்கள் ஒத்த்ழைப்பு இருந்தால், நிச்சயம் புதுவையை பசுமையான மாநிலமாக மாற்றுவோம்.
சத்குரு:



புதுச்சேரியில் இருந்து முதல்வர் V.நாராயணசாமி சத்குரு அவர்களை வழியனுப்பிகிறார்

சென்னை நோக்கி பயணம் ஆரம்பம்
|
|
|
சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் இன்று மாலை பொதுக்கூட்டம் நிகழவுள்ளது. அங்கு நடந்து வரும் ஏற்பாடுகள்

|
|
|
சென்னையில் நுழைகிறார்கள்...
|
|
|
மக்கள் வரத் (நிறையத்) துவங்கிவிட்டார்கள்

சென்னையில் நகரிற்குள் சத்குரு
![]() | ![]() |
அரங்கிற்குள் பைக்கில் நுழைகிறார்
திரு.செந்தில் கணேஷ் மற்றும் திருமதி.ராஜலட்சுமி நாட்டுப்புற பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
![]() | ![]() |
விழா நடைபெறும் இடத்தில் சத்குரு

சிறப்பு விருந்தினர்கள்
மேதகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்கள், மாண்புமிகு தமிழக முதலவர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு O.பன்னீர்செல்வம் அவர்கள், அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் தலைவர் திரு பிரதாப் ரெட்டி அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன் அவர்கள், திருமதி.சுஹாசினி மணிரத்னம் அவர்கள்

|
|
|
பெரும் திரளாய் வந்திருக்கும் மக்கள்
|
|
|
|
|
|
சம்ஸ்கிருதி பிள்ளைகளின் நாட்டிய நிகழ்ச்சி
![]() | ![]() |
தமிழ் தாய் வாழ்த்து


திருமதி சுஹாசினி மணிரத்ணம் அவர்கள் பேச்சு

கடந்த மூன்று மாதங்களாக நான் சத்குருவைப் பார்த்து வருகிறேன். அவர் சுவாசிப்பதும் கூட காவேரி-காவேரி என்றுதான் இருக்கிறது. உள்மூச்சும் காவேரி வெளிமூச்சும் காவேரி! அவர் இதுபோல் இருக்கையில் நாம் ஒரு சுவாசமேனும் காவேரியின் நினைப்பில் எடுக்கலாமா? பலப்பல இளைஞர்கள் இந்த இயக்கத்தில் பங்குபெறுவதைக் காண்கிறேன். இளைஞர்கள் இறங்கிவிட்டால் இது நிச்சயம் வெற்றிபெறும். காவேரி மீண்டும் பொங்கி ஓடவேண்டும்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் திரு. G.K.வாசன் அவர்கள் 
3:30 மணி வரையில் இங்கு மழைக்கு அறிகுறியில்லை. இவர் வந்தார், மழை கொட்டுகிறது! விவசாயம் தளைக்க வேண்டும் என்று அவர் இந்த பயணம் மேற்கொண்டுள்ளார். விவசாயிக்கு பயிர் பிரச்சினை, உயிர் பிரச்சினை. மனிதர்களுக்கு தண்ணீர் பிரச்சினை உயிர் பிரச்சினை என்று எடுத்துக்கூறி இதற்கு காவேரி வேண்டும் என்கிறார். அதற்கு அவசியம், அவசரம் தேவை மரம் நடுவது. இதற்கு அரசாங்கம் 100% ஆதரவு அளிக்கவேண்டும் என்று முதல்வர் ஐயாவை கேட்டுக்கொள்கிறேன்.
அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி

சத்குருவை நினைத்து எனக்கு மிகப் பெருமையாக உள்ளது. கடந்த 50 வருடங்களாக நலம் நளிந்து வருவதை பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் அதற்கான தீர்வாக நாடு முழுவதும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நதிகளை மீட்போம் பேரணியை நிகழ்த்தினார். நம் உடலில் 80% தண்ணீர். நம் உணவுக்கும், உணவு தயாரித்தலுக்கும் அனைத்திற்கும் தண்ணீர்தான் ஆதாரம். விவசாயிக்கும் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் தண்ணீர் அத்தியாவசியம். சத்குரு எங்கு போனாலும் அவருக்கு அபரிமிதமான மரியாதையும் வரவேற்பும் உள்ளது. இப்போது அவர் துவக்கி இருக்கும் காவேரி கூக்குரல் நிகழ்வை அடுத்துவரும் பல தலைமுறைகள் நினைவில் கொள்வர். இப்படியை எடுத்து செயல்படுத்துவதற்கு அவருக்கு மிகுந்த பணிவன்போடு நன்றி கூறுகிறேன்.
மாண்புமிகு துணைத் முதல்வர் திரு. O.பன்னீர் செல்வம் அவர்கள்

காவேரியின் புகழாரத்தை பல தமிழ் இலக்கியங்களில் நாம் காணலாம். அத்தனை பழமைவாய்ந்த, புகழ்வாய்ந்த காவேரி இன்று இந்நிலையில் உள்ளது. மக்கட்தொகை பெருக்கத்தால் நிலத்தேவை, மரத்தேவை என்று மரங்கள் கண்க்கிண்றி வெட்டப்பட்டுள்ளன. இதனால் மரத்தையும், மழையையும் சார்ந்திருக்கும் விவசாயியின் நிலை கடினமாகிவிட்டது. காவேரியை மீண்டும் அதன் பழைய பொலிவிற்கு உயர்த்தும் வரலாற்று சிறப்புமிக்க இந்த முயற்சியை சத்குரு மேற்கொண்டுள்ளார்.
காவேரி கூக்குரலுக்கு ஆதரவு. நீல நிறமாக மாறிய அரங்கம்

![]() | ![]() |
சத்குரு:

![]() | ![]() |
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்

இந்தியாவில் மிக அதிகமாக மரம் நடக்கூடியவர் சத்குரு மட்டும் தான். தமிழ்நாட்டின் விவசாயிகள் மட்டுமல்ல, பெண்களும், இளைஞர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். காவேரி கூக்குரல் இயக்கத்தை செயல்படுத்த என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, அது அனைத்தையும் இந்த அரசாங்கம் செய்யும் என்று உறுதியளிக்கிறேன்.
மேதகு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் அவர்கள்

அரசாங்கத்தின் சார்பாகவும், முதல்வர், துணை முதல்வரின் சார்பாகவும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாகத் தெரிவித்தார். காவேரிக்காக 16 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை முதல்வர் நியமித்திருப்பதாகவும், விவசாயிகள் இதனால் மிக ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இப்பணியில் அரசாங்கம் சத்குருவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்பதால், இத்திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்று வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது

நிகழ்ச்சி முடிந்து சிறப்பு விருந்தினர்கள் கிளம்பிய பின் சத்குரு சிலநிமிடம் பங்கேற்பாளர்களுடன் பேசுகிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் தன்னார்வத் தொண்டர்களுடன் சத்சங்கம்


ஆம்... இது சத்சங்க தன்னார்வத் தொண்டர்கள் கூட்டம்தான்... மற்றொரு பொதுக்கூட்டமல்ல!!
|
|
|
மேலும் படிக்க...
விவசாயிகள் சேர்க்கை | தன்னார்வ செயல்கள் | பிரபலங்கள் | ||
|---|---|---|---|---|
சத்குரு வீடியோ | கட்டுரைகள் | நாளிதழ் செய்திகள் | ||
சேனல் செய்திகள் | சிந்தனைக் கருவூலம் | விவசாயி வெற்றிக் கதைகள் |
















































