தலைக்காவேரிக்கு சத்குரு கிளம்பிக் கொண்டிருக்கிறார்

day1-caca-tamil-blog-pic1

 

மற்ற பைக்கர்களும் தலைக்காவேரி நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். விடாது மழை பெய்து கொண்டிருக்கிறது...

 

தலைக்காவேரி

Day1-CaCa-ThalaiCauvery

 

10:15 மணியளவில் சத்குரு தலைக்காவேரியை அடைந்தார். அங்கு அவரது பால்ய நண்பர்களின் வாழ்த்துக்கள் அவருக்காக காத்திருந்தது.

Day1-CaCa-SG-ThalaCauveryday1-caca-tamil-blog-pic2

அவரின் நண்பர் சோமேந்திர சிங் மைசூரில் இருந்து 4.5 மணி நேரம் அவரே கார் ஓட்டி இங்கு வந்திருக்கிறார். "நினைத்திருந்தால் மைசூரிலேயே அவரை சுலபமாக சந்தித்திருக்கலாம். ஆனால் என் நண்பர் மாபெரும் ஒரு செயலைத் துவக்கும்போது அவர் அருகில் இருக்க விரும்பினேன். என் வாழ்நாளில் ஒரு விதை கூட நடாத எனக்கு, இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்வது நெகிழ்ச்சியாக உள்ளது" என்றார். இவர் வருவார் என்று எதிர்பார்த்திராத சத்குருவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி!

காவேரியை வணங்கிவிட்டு காவேரி கூக்குரல் பயணத்திர்கு சத்குரு ஆயத்தமாகிறார்...

காவேரி-1

 

சத்குருவை பேட்டி எடுக்க டிக்விஜய் சேனலின் அபிஷேக் அவர்கள் வந்திருக்கிறார்.

day1-caca-tamil-blog-pic3

அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.

Day1-CaCa-PressMeetday1-caca-tamil-blog-pic4

 

கைல்போத் திருவிழா

இன்று கர்நாடகத்தில் கைல்போத் திருவிழா, இங்கிருக்கும் விவசாயிகளுக்கு மிக முக்கியமான நாள். இந்த பண்டிகை எதைப்பற்றி என்று நம் தன்னார்வத் தொண்டர் ஒருவர் ஆர்வமாகக் கேட்க, அவ்வூர் விவசாயி ஒருவர் பதிலளித்தார். இன்று விவசாயிகள் அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் அனைத்தையும் கழுவி, அதற்கு பூஜை செய்வார்களாம். பின் பாரம்பரிய உணவு சமைத்து குடும்பத்தினருடன் சேர்ந்தமர்ந்து அதை உண்பார்களாம். இதில் முக்கியமான ஒரு விஷயம், இப்பண்டிகையில் அவர்கள் ஏதேனும் ஒரு கடவுளை முக்கியமாக வணங்குவார்களா? என்று கேட்டதற்கு, நம் எளிய விவசாயி கூறினார், "ஆம். காவேரித் தாயை"

சத்குருவின் பயணம் துவங்கும் இந்நாளில் தமிழ்நாடு முழுவதும் தன்னார்வத் தொண்டர்கள் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டனர். இன்னும் விவரங்களை இங்கே காண்க

 

Day1-CaCa-PA-1Day1-CaCa-PA-2
Day1-CaCa-PA-3Day1-CaCa-PA-4

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

Day1-CaCa-StartOff-1

 

Day1-CaCa-StartOff-2

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று காலை முதலே சத்குருவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவியத் துவங்கிவிட்டன. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், நம் பிரதம மந்திரி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். “HappyBirthdaySadhguru” டாக் இன்று இந்தியாவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

முதல் மக்கள் விழிப்புணர்வுக் கூட்டம் - இன்று மாலை மடிக்கேரியில்

மதியம் 3:30: மடிக்கேரியின் கிரிஸ்டல் ஹாலிற்கு மக்கள் வரத் துவங்கிவிட்டனர்

day1-caca-tamil-blog-pic5

day1-caca-tamil-blog-pic7day1-caca-tamil-blog-pic8

 

சிறப்பு விருந்தினர்களுடன் சத்குரு அமர்ந்திருக்கிறார்

சிறப்பு விருந்தினர்கள்:

ஏர் மார்ஷல் நந்தா கரியப்பா அவர்கள்; நாடாளுமன்ற உறுப்பினர் ஷோபா கரன்ட்லாஜே; முன்னாள் விளையாட்டு வீராங்கனை அஸ்வினி நாச்சப்பாஅவர்கள்; கர்நாடக சட்டப்பேரவை தலைவர், K.G.போபையா அவர்கள்; நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரக்ஷித் ஷெட்டிஅவர்கள்; ; நடிகர் டிகந்த் அவர்கள்; 

Day1-CaCa-First-Event-1

 

நிகழ்ச்சி ஆரம்பம்

Day1-CaCa-First-Event-2

முதலில் பேசிய ஏர் மார்ஷல் கரியப்பா அவர்கள், காவேரி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் கூறினார். அடுத்து பேசிய ஷோபா அவர்கள், "காவேரியில் நீர் குறைந்ததால் பெங்களூருவிற்கும்கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. சத்குரு துவங்கியிருக்கும் இந்த இயக்கத்தால் காவேரியில் நீரோட்டம் அதிகரிக்கும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும்" என்றார். அஸ்வினி அவர்கள், "நம் நதிகள் அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஓடவேண்டும். அதற்கு நாம் இன்றே செயலில் இறங்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். போபையா அவர்கள், "இன்று மரம் நட்டுவிட்டு நாளையே மரத்தில் பழம் தேடக்கூடாது. இது நெடுங்காலம் நீடிக்கும் ஒரு திட்டம். காவேரிக்கரை நெடுகிலும் 242 கோடி மரம் நட நாங்கள் உதவுவோம்" என்றார். 

ரக்ஷித் ஷெட்டி, "242 கோடி மரங்கள் நடுவது சாதாரண காரியமல்ல. ஆனால் சத்குருவின் வழிகாட்டுதலில் இது நிச்சயம் சாத்தியப்படும். இது ஒரு மாபெரும் இயக்கம். இதுவரை பல இயக்கங்கள் நிகழ்ந்துள்ளன, ஆனால் இதுபோல் வேறில்லை" என்றார். கடைசியாக பேசிய டிகந்த அவர்கள், "'பெரும் பிரச்சினைகள் உருவெடுக்கும்போது நீ வழிகாட்டு, இல்லையெனில் வழிகாட்டுபவரை பின்தொடர்ந்து செல்' என்பார்கள். நான் சத்குருவைப் பின்தொடர்கிறேன். என் வாழ்வை சத்குருவிற்கு அர்ப்பணிக்கிறேன். இதுபோல் அவர் முன்னெடுக்கும் எல்லா இயக்கங்களுக்கும் நான் துணை நிற்பேன். சிறு துளி பெரு வெள்ளம் ஆவதுபோல் இந்த மாபெரும் இயக்கத்திற்கு சில் துளிகளேனும் சேர்க்க விரும்புகிறேன்." என்றார்.

சத்குரு கூறியதாவது...

Day1-CaCa-First-Event-3

"இது மற்றுமொரு மரம் நடும் உத்வேகமல்ல. இது மிகவும் வித்தியாசமானது. இது சுற்றுச்சூழல் மீது தாக்கம் ஏற்படுத்தும் ஒரு பொருளாதார திட்டம். இதன் முக்கியத்துவமே இதுதான். பொருளாதார ரீதியாக இலாபம் இல்லாவிட்டால், இது வெற்றிபெற வாய்ப்பில்லை. அதிலும் இந்த நாட்டில் பொருளாதார நிலையில் பயன் தராவிட்டால் அது வெற்றிபெற வாய்ப்பில்லை, ஏனெனில் இங்கிருக்கும் மக்கட்தொகை மிக அதிகம். இதில் ஈடுபடப் போகிறவர்களுக்கு இது நிச்சயமாக இலாபகரமாக இருக்கவேண்டும்."

மடிக்கேரியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Day1-CaCa-First-Event-4

நாகர்ஹோல் நோக்கி பயணம் ஆரம்பம்

Day1-CaCa-First-Event-5

 

இன்றைய நாளின் சுருக்கம்...சத்குருவின் வார்த்தைகளில்

காலையில் தலைக்காவேரியில் இருந்து கிளம்பினோம். மதியம் மடிக்கேரியில். மக்கள் திரண்டு வந்து பெருமளவில் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அழகான கொடுகு மலையைத் தாண்டி குஷால் நகர் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அங்கிருந்து பெரியபட்னா, ஹல்சூர், நாகர்ஹோலே. நாகர்ஹோலே என்பது அங்கிருக்கும் ஓடையின் பெயர். நாகங்களின் பெயரை அதற்கு சூட்டியிருக்கிறார்கள். ராஜநாகங்களின் உறைவிடம். நாகர்ஹோலேவில் ராஜநாகத்துடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பின்னர் சொல்கிறேன். ஆனால் அது ஆபத்தான நிகழ்வாய் இருந்தது. இங்கு இவர்களுக்கு இடைவெளி தேவைப்பட்டதால் சிறிது நேரம் வழியில் நிற்கிறோம். கொடுகுமலையில் இருந்து இறங்கி இப்போது சமதள நிலத்தில் இருக்கிறோம். எல்லோரும் ஒருமுறையாவது கொடுகு மலைக்கு வரவேண்டும். மிக அற்புதமானைடம். இங்கிருக்கும் காபி செடிகள் மலரும் நேரம்... அது பிரம்மாண்டமான அனுபவமாக இருக்கும். காபி... அதைப்பற்றி ஒரு கவிதைகூட எழுதியிருக்கிறேன். இப்போதுதான் அம்மலையினின்று இறங்குகிறோம். பிரமாதமான இடம். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. என்னுடன் பைக்கில் பயணம் செய்பவர்களின் எலும்பு மஜ்ஜை வரை ஈரம் சார்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்றாலும் பைக்கில் பயணித்து நாங்கள் தங்கும் இடத்தை அடைவோம்.

 

சத்குருவின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்ஹோலேவில் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து, "காவேரி கூக்குரல்" மிட்டாய்களை அனைவருக்கும் வழங்கினார்கள்

Day1-CaCa-PA-3Day1-CaCa-PA-4

நாள் 1: நிகழ்வுகளின் தொகுப்பு

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்