காவேரி நினைவேடுகள்: சத்குருவின் காவேரிப் பயணம்! - நாளை ஆரம்பம்!
பல்லாயிரம் வருடங்களாய் பெருகி ஓடிய நதிகள் இன்று வெறும் மணற்படுக்கைகளாய் காட்சியளிக்கின்றன. 30 அடி ஆழத்தில் இருந்து நிலத்தடிநீர் இன்று 1000 அடி போனாலும் கிடைப்பதில்லை. இவ்வருடம் சென்னை சந்தித்த தண்ணீர் பஞ்சத்தில் பலர் வாழ வழியில்லாமல் தற்காலிகமாக அவரவர் ஊருக்கே சென்றனராம். சென்னையில் மட்டுமல்ல, நாட்டின் பல இடங்களிலும் நிலை இதுதான். தோராயமாக 137 கோடி மக்களுடன், உலகின் 17.71% மக்கட் தொகையுடன் தண்ணீரின்றி நாம் என்ன செய்யப்போகிறோம்? முன்பே இதை நாம் சீர் செய்திருக்கவேண்டும். ஆனால் இப்போதாவது உடனடியாக நாம் செயலில் இறங்குவோம்!

2017ல் நடந்த "நதிகளை மீட்போம்" பேரணி, 16.2 கோடி மக்களின் ஆதரவைப் பெற்று உலகின் மாபெரும் சுற்றுச்சூழல் இயக்கமாக வளர்ந்தது. இந்தப் பேரணியின் போது நம் நதிகளின் கவலைக்கிடமான நிலையை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவந்து, உடனடியாக நதிகளை மீட்கும் பணியில் இறங்கவேண்டும் என்று வலியுறுத்தி அதற்குத் தீர்வாய் அமையக்கூடிய 700-பக்க திட்டப்பரிந்துரையை மத்திய அரசிடம் சத்குரு ஒப்படைத்தார். 30-நாளில் 16-மாநிலங்கள் வழியாக 9,300 கிமீ பயணித்து, மாநில அரசாங்களின் ஒப்புதலும் பெற்று இந்தப் பேரணி நிறைவுக்கு வந்தது.
இந்த இரண்டாண்டு காலத்தில் சத்குரு ஒப்படைத்த அந்த திட்டப்பரிந்துரையை மத்திய அரசாங்கம் அலசி ஆராய்ந்து, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தீர்வுகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் கோட்பாடுகளை நிறுவி, 29-மாநிலங்களும் அதைப் பின்பற்றுமாறு ஆலோசனை அனுப்பிவைத்தது. ஆறுகளை மீட்க நதிகளை மீட்போம் குழுவுடன் 6 மாநிலங்களில் உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில் ஒன்றான மஹாராஷ்டிர மாநிலத்தில், "வாகாரி" நதி புனரைப்புப் பணிகளை 415 கோடி செலவில் அம்மாநில அரசாங்கமே மார்ச் 2019ல் துவங்கியது.
இப்போது காவேரியைக் காக்க நாம் களமிறங்குவோம்!
காவேரி கூக்குரல் இயக்கம் அதிகாரப்பூர்வமாக ஜூலையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக எடுக்கப்பட்ட / எடுக்கப்படும் முயற்சிகளை இங்கே பதிவிடப்போகிறோம்.
- சத்குருவின் 3,500 கிமீ பயணத்தின் தகவல்கள் - (நாளைமுதல்) உடனுக்குடன்!
- வேளாண்காடு வளர்ப்பு பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வுகள்
- தன்னார்வத் தொண்டர்கள் / குழந்தைகளின் விழிப்புணர்வு முயற்சிகள்
- இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பிரபலங்கள், அரசியல்வாதிகள்
- இதுவரை சத்குரு இதுபற்றி பேசியிருக்கும் வீடியோக்கள்
- இது சம்பந்தமாக வெளியாகி இருக்கும் கட்டுரைகள்
- நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள்
- சேனல்களில் வெளியான செய்திகள்
- ஆக்கப்பூர்வமான படைப்புகள்
- விவசாயி வெற்றிக் கதைகள்
சத்குருவின் 3,500 கிமீ பயணத்தின் தகவல்கள் - (நாளைமுதல்) உடனுக்குடன்!
விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், காவேரியின் மூலமான தலைக்காவேரியில் இருந்து காவேரி கடலில் கலக்கும் இடத்திற்கு அருகே இருக்கும் திருவாரூர் வரை 3,500 கிமீ தூரத்திற்கு சத்குரு அவர்கள் மோட்டார் சைக்கிள் ராலியை வழிநடத்திச் செல்கிறார். செல்லும் வழியில் பல பொதுமக்கள் நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. நாளை முதல் ஒவ்வொரு நாளும் இதுசம்பந்தமான தகவல்கள் உடனுக்குடன் பதிவிடப்படும்.
நாளை துவங்கவிருக்கும் மோட்டார் சைக்கிள் ராலியில் பங்கேற்க, மும்பை
மற்றும் பெங்களூரிவில் இருந்து பைக்கர்கள் வந்துவிட்டார்கள்.
![]() | ![]() |

மடிக்கேரி அருகில் பாகமண்டலாவில் நம் மக்கள் தங்குவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கும் டென்ட்கள். இங்கு மலை பெய்து கொண்டிருக்கிறது.
![]() | ![]() |

மைசூருக்கு வந்துவிட்டார் சத்குரு

From Mysore Airport, now, enroute Madikeri. Join us from wherever you are and stay with us, as we start the journey, on two wheels, to make sure that Cauvery flows again. -Sg #CauveryCalling #CauveryDiaries #RallyForRivers @rallyforrivers pic.twitter.com/6Drk84F0jt
Subscribe
சத்குரு மைசூரில் அவரது குடும்பத்தினருடன்

On this day, #Ganesha got a new head & became super brilliant. He became Vigneshwara, the Unstoppable. Let our brains work to #FREEINDIAOfWaterCrisis. We are starting #CauveryCalling today. Let our intelligence work for our wellbeing. Let us make it happen. -Sg #GaneshChaturthi
— Sadhguru (@SadhguruJV) September 2, 2019
மைசூரில் தான் வளர்ந்த இடங்களை ராதேவிற்கு சுற்றிக்காட்டுகிறார் சத்குரு

மழையையும் பொறுட்படுத்தாமல் தன்னார்வத் தொண்டர்களுக்கும் ஆசிரமவாசிகளுக்கும் மடிக்கேரி செல்லும் வழியில் சத்குரு எழுதிய மடல்
.jpg)
காவேரி கூக்குரல் எனக்கும் உங்களுக்கும் 12 வருட பொறுப்பு. காவேரியை மீண்டும் ஓடச்செய்திடும் இந்த ஒரு விஷயத்தை நீங்கள் நிறைவேற்றினால் உலகிற்கான நமது கர்மவினை நிறைவுபெற்றுவிடும். பற்றற்ற செயலுறுதியை உணர்ந்திட என்னுடன் இருங்கள்.
ஆசிகள்,
சத்குரு
செப்டம்பர் 2, 2019

மடிக்கேரியில் சிறிது நேரம் கால்ஃப்

மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்த வண்ணம் மடிக்கேரியில் இருந்து
பாகமண்டலா வந்த சத்குரு

.jpg)
முதல் நாளின் முடிவில் சத்குருவின் மோட்டார்சைக்கிள் நிலை:

சத்குருவுடன் நாள்முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டி களைப்பான ஒரு
தன்னார்வத் தொண்டர் சொல்கிறார், "ஓரு-நாள்-முடிய-இன்னொரு-நாள்
என்று அடுத்தடுத்து 15 நாட்களுக்கு தொடர்ந்து சத்குரு இதுபோல்
எப்படித்தான் பயணிப்பாரோ" என்று!
சாமுண்டி புனித பயணம் பங்கேற்பாளர்கள் இந்த பயணத்திலும்
பங்கெடுக்கிறார்கள். பாகமண்டலாவில் அவர்கள் தங்கும் இடத்தில் சத்குரு
அவர்களுடன் உரையாட ஸ்ரீநிதி ஷெட்டி அவர்கள் வந்திருக்கிறார்.
ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டி 2016 ஆம் ஆண்டில் மிஸ் திவா - மிஸ்
சூப்ராநேஷனல் பட்டம் வென்ற இந்திய மாடல். இவர் கன்னடப்
படங்களில் நடித்துவருகிறார்.


விவசாயிகள் சேர்க்கை | தன்னார்வ செயல்கள் | பிரபலங்கள் | ||
|---|---|---|---|---|
சத்குரு வீடியோ | கட்டுரைகள் | நாளிதழ் செய்திகள் | ||
சேனல் செய்திகள் | சிந்தனைக் கருவூலம் | விவசாயி வெற்றிக் கதைகள் |












