ஜென்னல் பகுதி 42

உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்த ஒரு ஜென் குரு இருந்தார். அவரிடம் புதிதாக ஒரு சீடன் சேர்ந்தான். ஒருநாள் அவருடன் வெளியில் சென்றிருந்தபோது, திடீரென்று மழை பிடித்துக்கொண்டது.

சீடன் அவசரமாக ஒரு பெரிய இலையை வாழை மரத்திலிருந்து பிரித்து அதைத் தலைக்கு மேலாகப் பிடித்துக்கொண்டான். குருவிடம் அவன் கேட்டான்: "உலகின் எத்தனையோ பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கிறீர்களே, கோடை காலத்துக்கு உகந்த இடம் எது..? மழைக்காலத்துக்கு உகந்த தேசம் எது..? குளிர்காலத்துக்கு எங்கே சென்றால் நிம்மதியாக இருக்கும்..?"

குரு மழையில் நடந்தவாறு, "உண்மையிலேயே சுகமாக இருக்க வேண்டும் என்றால், கோடையோ, மழையோ, குளிரோ இல்லாத தேசத்துக்கு நீ செல்லலாமே..!" என்று சொன்னார்.

"நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா..?"

"ம்..!"

"அது எங்கே இருக்கிறது என்று எனக்குச் சொல்வீர்களா..?"

"கண்டுபிடித்துப் போ..!" என்று சொல்லிவிட்டு, குரு நிற்காமல் நடந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

ஒரு ஆசிரியை மாணாக்கர்களுக்கு உடலில் ரத்த ஓட்டம் பற்றி வெகு உற்சாகமாக சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மாணாக்கர்களையும் தன்னுடைய பாடத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதி, ஒரு மாணாக்கனை எழுப்பினார்.

'உன்னுடைய வாழ்க்கை கோடையோ, குளிரோ, மழையோ இல்லாத பிரதேசத்துக்குப் போவதுதான்..' என்கிறார். அவர் குறிப்பிடும் பயணம், இந்த உலக வரைபடத்தில் இருக்கும் ஏதோ ஒரு கண்காணாத தேசம் அல்ல.

"நான் இப்போது தலைகீழாக நின்றால், ரத்தம் கீழ்நோக்கிப் பாயும். என் முகம் முழுவதும் சிகப்பாகிவிடுவதை உன்னால் பார்க்க முடியும். ஆனால், நான் கால்களால் நிற்கும்போது, என் கால்கள் சிகப்பாவதில்லை. ஏன் என்று சொல்..!"

மாணவன், கண்ணிமைக்கும் நேரம்கூட எடுத்துக்கொள்ளாமல் பதில் சொன்னான்: "ஏனென்றால், உங்கள் பாதங்கள் வெற்றிடமாக இல்லை..!"

இந்தப் பள்ளி மாணவன் மனித உடலைப் பற்றி அறிந்து கொண்டிருக்கும் அளவுக்குத்தான் குருவைக் கேள்வி கேட்ட சீடனும் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொண்டிருக்கிறான்.

கோடை காலத்தில் எது வசதியான தேசம்..? எங்கே குளிர் இருக்கிறதோ, அது வசதியான தேசமாகத் தோன்றும். குளிர் காலத்தில் எங்கே சூரியன் அதிகமாக வெளியில் வருகிறானோ, அந்த தேசம், விடுமுறைக்கு ஏற்ற பகுதியாகத் தோன்றும். இதைத்தான் சீடனுடைய மனநிலையில் பார்க்க முடிகிறது. ஆனால், குரு அவனுக்கு, 'இது அல்ல உன் வாழ்க்கை..' என்று நினைவுபடுத்துகிறார்.

'உன்னுடைய வாழ்க்கை கோடையோ, குளிரோ, மழையோ இல்லாத பிரதேசத்துக்குப் போவதுதான்..' என்கிறார். அவர் குறிப்பிடும் பயணம், இந்த உலக வரைபடத்தில் இருக்கும் ஏதோ ஒரு கண்காணாத தேசம் அல்ல.

'உன்னுடைய பயணம் உடல்ரீதியான எல்லைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்..' என்பதைத்தான் அவர் சுட்டிக்காட்டுகிறார். உடல்ரீதியான உணர்வுகளைத் தாண்டிச் செல்லும்போது, அங்கே, ஏது கோடை..? ஏது குளிர்..? உங்களுடைய ஆழ்ந்த உள்நிலையை குளிரோ, காற்றோ தொட முடியுமா..?

உங்கள் சருமத்தின் மேற்பரப்பை மட்டுமே குளிரும், வெப்பமும் தாக்க முடியும். 'விடுமுறையை உல்லாசமாகக் கழிக்க எந்த தேசம் போவது என்று தேடிக்கொண்டிருப்பதை விடு..! ஏனென்றால், அங்கெல்லாம் சென்றால், புற உடலுக்குத்தான் வசதி, வசதியின்மை எல்லாம்! உள்நிலையில் இப்போது இருக்கும் இடத்திலேயே வெளிச்சூழ்நிலைகள் உன்னை எந்த விதத்திலும் பாதிக்காத விதத்தில் உன்னை மாற்றிக்கொள்ள முடியும்.'

இதைத்தான் குரு சுட்டிக் காட்டுகிறார்.


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418