என்ன..? யோகா உடலை வலுவாக்கவும் உதவுமா? இதுவரை உடல் ஆரோக்கியம், மனஅமைதி இதெல்லாம் தானே சொன்னார்கள்? உடலை உறுதியாகவும், வலுவாகவும் யோகா மாற்றும் என்றால் 'ஜிம்' தேவையில்லையா..?

சத்குரு:

ஒன்று பார்ப்பதற்கு நன்றாய் தோற்றமளிப்பதைப் பற்றியது. மற்றொன்று நன்றாய் இருப்பதைப் பற்றியது. மனிதத் தசையமைப்பு முக்கியமானது. நமது தசைகள் செய்யக் கூடிய செயல்கள் அற்புதமானவை. தசைகளை வலுப்படுத்துவதின் மூலம், தசைகளின் செயல்களை மேம்படுத்த முடியும். தசைகளை வலுப்படுத்தும் அதே நேரத்தில் தசைகளை நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் மாற்ற முடியும்.

யோகா என்பது உங்கள் உடலின் எடையையே உபயோகித்து பயிற்சி செய்வது.

அதிக பளுதூக்கும் பயிற்சியினால், உங்கள் தசைகள் பெரியதாகத் தோற்றமளிக்கும். வலுவான மிகப் பெரிய தசைகள் கொண்டவரை நீங்கள் பார்த்திருக்க முடியும்; அவர்களால் நமஸ்காரம் கூட சரியாக செய்ய முடியாது, அவர்களால் வளையக் கூட முடியாது.

உங்கள் தசைகள் மட்டும் அழகாகத் தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால், அதற்கு தற்போது எளிதான வழிகள் உள்ளன. நீங்கள் சிலிக்கானை புஜங்களில் அறுவை சிகிச்சை மூலம் பதிப்பதன் மூலம் அதை செய்யமுடியும். அவை மார்பகங்களில் மட்டுமல்ல, புஜம், ஆடுகால் தசை என்று எல்லாவற்றிலும் வைக்கலாம். அது பயனற்றது என்பது ஒரு பொருட்டில்லை. நீங்கள் அதற்காக கடின உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை. ஹார்மோன்களும், கார்டிசோன்களும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. வெறுமனே அழகாக மட்டும் தோற்றமளிக்க வேண்டும் என்றால் அதற்கு ஏராளமான வழிகள் உள்ளன.

தசைப்பயிற்சி உங்களுக்கு முரட்டுத்தனமான வலிமையைத் தரலாம். ஆனால் அதே வலிமையை வேறு ஓரு வழியில் நீங்கள் அடைய முடியும், மிருகம் போல் தோற்றமளிப்பதையும் தவிர்த்து ஓரு மனிதனைப் போல் நீங்கள் தோற்றமளிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நெகிழ்வுத் தன்மை கொண்ட உடலை நீங்கள் அடையலாம். இது மிகவும் முக்கியமானது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யோகா என்பது உங்கள் உடலின் எடையையே உபயோகித்து பயிற்சி செய்வது. அங்கமர்த்தனா என்பது இதுதான். அப்போது உங்களுக்கு உடற்பயிற்சி சாலைகள் இல்லை என்பது போன்ற சாக்குபோக்குகள் இருக்காது. எங்கே இருந்தாலும் நீங்கள் பயிற்சி செய்ய முடியும். ஏனென்றால் உங்கள் உடல் உங்களிடம் உள்ளது. பளுதூக்கி செய்யும் எந்த பயிற்சிகளுக்கும் இது நிகரானதே. அதே நேரத்தில் இது உங்கள் உடலில் எந்த விதமான அழுத்தத்தையும் உண்டாக்காது. இது உங்களை மிருகம் போல தோற்றமளிக்கச் செய்யாது. இது உங்களை விவேகமுள்ளவராக மாற்றும். அதோடு வலிவுள்ளவராக, மிகவும் வலிவுள்ளவராக நீங்கள் மாறுவீர்கள்.

அப்படியென்றால் நான் எடை தூக்கும் எந்த பயிற்சியும் செய்யக் கூடாதா? செய்யலாம். ஏனெனில் நவீன தொழில்நுட்பம் காரணமாக உடல் பயிற்சியும் உடல் உழைப்பும் நம்மிடம் மிகவும் குறைந்துவிட்டன. இப்போது நாம் ஒரு வாளியில் நீர் சுமக்க வேண்டியதில்லை. அது போன்ற வேலைகளை இப்போது இயந்திரங்கள் செய்கின்றன. உங்கள் 'ஐ'-போனைத் தவிர, வேறு எதுவும் நீங்கள் சுமக்கத் தேவையில்லை, இல்லையா? எனவே, உங்கள் கை கால்களை நீங்கள் நாள் முழுவதும் தற்போது உபயோகப்படுத்தாததால், சிறிய அளவிலான எடைதூக்கும் பயிற்சி சரிதான்.

நல்வாழ்வு என்பது ஆரோக்கியம், சக்தி, மனம் மற்றும் ஆன்மீகம் என்று பல கூறுகளைக் கொண்டது. எனவே காலையில் நாம் ஏதோ ஒரு பயிற்சியில் 30 நிமிடம் முதலீடு செய்கிறோம் என்றால், அது வெறும் தசைவலிவுக்காக மட்டும் அல்லாமல், முழு உடலுக்கும் நன்மை பயப்பதாக இருக்கவேண்டும்.

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org