உயிர் உடலுக்குள் சேரும் வழி ‘கல்பநாத்’
நம் உடலில் 114 சக்கரங்கள் உள்ளதாக யோக மரபில் சொல்லப்படுகிறது. இதில் உச்சந்தலையில் உள்ள கல்பநாத் மற்றும் அதற்குமேலே உள்ள முக்திநாத், கைலாஷ் ஆகியவற்றைப் பற்றி சத்குரு பேசிய சில வார்த்தைகள் இங்கே!
சத்குரு:
கல்பா என்றால் படைப்பு. முழு கர்ப்ப காலத்திற்குப் பின் நீங்கள் பிறந்திருந்தாலும், உங்களுள் ஒரு பகுதி மட்டும் முழுதாக வளர்ந்திருக்காது. அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அது தலையின் மேல்பகுதி.
பிறப்பின்போது அப்பகுதி முழுவதுமாக வளர்ந்திருக்காது. ஏனென்றால், அந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் உங்கள் உடலுக்குள் நுழைகிறது. நீங்கள் உயிரை உருவாக்கவில்லை, உயிருக்கு ஓர் இருப்பிடத்தைத்தான் அளிக்கிறீர்கள். நீங்கள் உயிருக்கான பாத்திரத்தை, கோப்பையை உருவாக்குகிறீர்கள். அதற்குள் உயிர் தானாகத்தான் நுழையமுடியும். அந்த இடத்தின் வழியாகத்தான் உயிர் நுழைகிறது. அதனால்தான், அது முழுமையாக வளர்ந்திருக்கவில்லை.
Subscribe
இதில் பல அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது நான் பேசவில்லை. இந்த பாகத்தைத்தான் கல்பா என்கிறோம். இங்குதான் உயிர் தொடங்குகிறது. உயிர் உடலுக்குள் நுழைகிறது. இது கல்பநாத். அதற்கு மேல் (அதையும் தாண்டி) முக்திநாத்.
மனித உடலில் 114 சக்கரங்கள் உள்ளன. 112 ஸ்தூல நிலையில் உள்ளது. அதற்கு மேல், மற்ற இரண்டு சக்கரங்கள் உள்ளன. 113 ஆம் சக்கரம், முக்திநாத். அதுதான் முக்தியின் மூலம். 114 ஆம் சக்கரம், கைலாஷ், சிவனுடைய வாசம் அது.
குறிப்பு:
மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.
வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.
நாள்: பிப்ரவரி 13, 2018
நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை
இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.