காதல் என்பது உடல் சார்ந்த ஒரு விஷயம் என்று மட்டுமே அணுகும் மனப்பான்மை இன்று வலுத்துக் கிடக்கிறது. ஆனால் தன் உயிரில் கிருஷ்ணனை பதிய வைத்த உன்னதக் காதலி இவள்...

சத்குரு:

ராதை, கிருஷ்ணனின் குழந்தைப் பருவக் காதலி. எளிமையான கிராமத்துப் பெண், பால்காரி. கிருஷ்ணன் மீது கொண்டிருந்த மாறாக் காதல் மற்றும் பக்தி காரணமாக யாராலும் மறக்க முடியாதவளாக மாறிவிட்டவள். ராதையை நினைவுக்கூறாமல் நாம் கிருஷ்ணனைப் பற்றி பேசவே முடியாது. எப்போதாவது நாம் கிருஷ்ணராதா என்று சொல்லியிருக்கிறோமா? இல்லவே இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ராதாகிருஷ்ணன் என்றுதான் சொல்கிறோம். ராதை, கிருஷ்ணன் மேல் கொண்ட தனது மாசுமருவற்ற அன்பின் காரணமாக, கிருஷ்ணனைவிடவும் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறாள்.

அந்த ராதை, கிருஷ்ணனைப் பற்றி என்ன கூறுகிறாள்?

'கிருஷ்ணன் என்னோடு இருக்கிறான். அவன் எங்கே வேண்டுமானாலும் இருக்கட்டுமே. யாரோடு வேண்டுமானாலும் இருக்கட்டுமே. இருப்பினும் என்னோடுதான் எப்போதும் இருக்கிறான்'.

இதுதான் உன்னதக் காதலி ராதாவின் அற்புதமான அனுபவக் கூற்று!

ராதா, தனது அளப்பரிய காதலில் கிருஷ்ணனைத் தன்னில் கரைத்துவிட்டாள். அதனால் ராதா பக்தர்கள் ‘ராதே இன்றி ஏது கிருஷ்ணன்?’ என்று வினவுகிறார்கள்.

ராதையை அவர்கள் காதலாகவே காணுகிறார்கள். அதனால்தான் காதல் இல்லாமல் கிருஷ்ணன் இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறார்கள்

Photo Courtesy: Starlit Silences@flickr