'ஜிம்முக்குப் போறேன்' என்று பலரும், equipments (உடற்பயிற்சி கருவிகள்) வாங்கி வீட்டிலேயே ப்ராக்டிஸ் பண்றேன்னு சிலரும், மூச்சு இறைக்க, நரம்பு புடைக்க உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கிறோம். ஆனால், அன்றைய யோகிகள் இது எதுவும் இல்லாமல் எப்படி தங்கள் உடலைக் கட்டுமஸ்தாக வைத்திருந்தார்கள்?! இதோ விடை சொல்ல வருகிறது 'அங்கமர்தனா'. தொடர்ந்து படியுங்கள்!

சத்குரு:

'அங்கமர்தனா' என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த யோக வழிமுறை. ஆனால் இப்போது அது முற்றிலுமாக மறைந்துவிட்டது. அந்த அற்புத செயல்முறையை இப்போது ஈஷாவில் மீண்டும் கற்றுக் கொடுத்து புத்துயிரூட்டி வருகிறோம். அங்கமர்தனாவில், உங்கள் உடல் எடையையும் விசையையும் பயன்படுத்தி, சில நாட்களுக்குள் உங்கள் தசைகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறீர்கள். இது வெறும் 25 நிமிட செய்முறைதான்.

ஒரு உடற்பயிற்சி என்ற நிலையிலிருந்து பார்த்தாலும், அங்கமர்தனா ஒரு வெற்றிகரமான பயிற்சிதான். ஆனால், தசைகளை வலுவூட்டுவதும், உடலின் கொழுப்புச்சத்தை குறைப்பதும் இதன் பக்க பலன்கள் மட்டுமே.

"அங்கமர்தனா" என்றால் உங்கள் உடல் அங்கங்களின் மேல் ஒரு ஆளுமை கொண்டு வருவது என்று பொருள். இந்த உலகில் நீங்கள் எந்தவொரு செயலைச் செய்தாலும், அது நீங்கள் உங்கள் உடல் அங்கங்களின் மேல் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்துதான் அந்த செயலின் வெற்றி தீர்மானிக்கப்படும். உங்களின் விடுதலைக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் விடுதலைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களின் அங்கங்களின் மேல் ஒரு ஆளுமை இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். உங்கள் அங்கங்களின் மேல் ஆளுமை என்றால், நீங்கள் ஏதோ தசை வலிமை உள்ளவராகவோ அல்லது மலை மேல் ஏறுபவராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவும் நடக்கலாம், ஆனால் அடிப்படையில், உங்கள் சக்தியின் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதுதான் இதன் நோக்கமே.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு உடற்பயிற்சி என்ற நிலையிலிருந்து பார்த்தாலும், அங்கமர்தனா ஒரு வெற்றிகரமான பயிற்சிதான். ஆனால், தசைகளை வலுவூட்டுவதும், உடலின் கொழுப்புச்சத்தை குறைப்பதும் இதன் பக்க பலன்கள் மட்டுமே. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த ஒரு சாதனா செய்தாலும், அது அங்கமர்தனாவோ அல்லது வேறு எதோவொரு சாதனாவாக இருந்தாலும் சரி, நாம் நம் சக்தி நிலையில் ஒரு குறிப்பிட்ட ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் என்பதே உண்மை.

இதை ஒரு விதமாக குறிப்பிட வேண்டுமென்றால், உதாரணமாக ஒரு மனிதர் நடந்து செல்லும்போது, அவரின் உடல் சரியாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். அவரின் முகத்தைப் பார்க்கும்போதே அவர் மனம் சரியாக பண்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் தெரியும். இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஒருவரின் சக்திநிலை பண்படுத்தப்பட்டுள்ளதா என்பது கூடத் தெரியும். அவரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை இதை வைத்தே தீர்மானித்து விடலாம். சக்தியின் மேல் முழுமையான ஆளுமை கொண்டு வந்தால், உங்களின் சக்தியை வெடித்தெழச் செய்ய முடியும்.

அருள் என்பது உங்களை ஆட்கொள்ள வேண்டுமென்றால், ஒரு தகுதியான உடல் உங்களுக்கு இருக்க வேண்டும். அப்படி தகுதியான உடல் ஒன்று இல்லாமல், அருள் உங்களை ஆட்கொண்டால், நீங்கள் சாம்பல் போல் எரிந்து போய்விடுவீர்கள். நிறைய பேருக்கு ஒரு அளப்பறிய அனுபவம் கிட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு தகுந்தார்போல தங்கள் உடலை அவர்கள் தயார் படுத்துவதில்லை. யோகாவில், ஒரு அனுபவத்தை நீங்கள் விரட்டிக் கொண்டு தேடத் தேவையில்லை, அது நிகழ்வதற்கு, உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ள மட்டும்தான் வேண்டும். உங்கள் ஆன்மீகம் வெறும் வாய்ப்பேச்சாக மட்டுமில்லாமல் அதைத்தாண்டிய நிலையில் இருக்குமேயானால், உங்களின் அங்கங்களின் மேல் நீங்கள் ஒரு ஆளுமை கொண்டு வரவேண்டியது மிகவும் முக்கியம்.

குறிப்பு:

மே 24, 2017 அன்று ஈஷா யோக மையத்தில் 8 மற்றும் 21 நாட்கள் சிறப்பு ஹடயோகா நிகழ்ச்சி துவங்க உள்ளது.

இந்நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெறும். இதன் நேரடி மொழிபெயர்ப்பு கீழ்கண்ட மொழிகளில் நடைபெறும்.

நேரடி மொழிபெயர்ப்பு:
8 நாட்கள் ஹட யோகா: தமிழ், இந்தி, மண்டரின், ரஷ்யன்
21 நாட்கள் ஹட யோகா: தமிழ், இந்தி, மண்டரின்

கற்றுத்தரப்படும் பயிற்சிகள்:
8 நாட்கள் ஹட யோகா: உப-யோகா, சூரிய க்ரியா, பூதசுத்தி, யோகாசனப் பயிற்சிகள்
21 நாட்கள் ஹட யோகா: உப-யோகா, சூரிய க்ரியா, பூதசுத்தி, யோகாசனப் பயிற்சிகள் மற்றும் அங்கமர்தனா

விவரங்களுக்கு:
தோலைபேசி: 83000 83111
இ-மெயில்: hathayoga.iyc@ishafoundation.org
பதிவு செய்வதற்கான லிங்க்: http://isha.sadhguru.org/Isha-Hatha-Yoga-8-Day-Program/


அடுத்த வாரம்...நிறைய யோகிகள் ஒரே ஒரு ஆசனாவில்தான் ஆதிக்கம் செலுத்துவார்களாம்; இது எதற்காக? ஆசனங்கள் பற்றி இன்னும் பல அரிய விளக்கங்களோடு சத்குருவின் உரை அடுத்த வாரப் பகுதியில்!