சத்குரு: நீங்கள் வேலை செய்யும் இடமாக இருந்தாலும், நடந்து போகும் தெருவாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும் அங்கு யாரோ ஒருவரைப் பார்த்தால், அவரைப் பார்த்த மாத்திரத்தில், “அவரிடத்தில் இது சரி, இது சரியில்லை, அவர் நல்லவர், இல்லை அவர் கெட்டவர், அவர் அழகாக இருக்கிறார், அசிங்கமாக இருக்கிறார்” இன்னும் ஏதேதோ முடிவுகளுக்கு உங்கள் அறிவு வந்துவிடும். இதை எல்லாம் நீங்கள் அமர்ந்து யோசிக்க வேண்டும் என்பது கூட அல்ல, பார்த்த அக்கணத்திலேயே எல்லா மதிப்பீடுகளும் செய்யப்பட்டு, உடனுக்குடன் முடிவுகளும் எடுத்தாகிவிடும்.

 

உங்கள் முன் இருப்பவர், உங்கள் முன் இருக்கும் அக்கணத்தில் எப்படி இருக்கிறார் என்பதை கிரகிப்பது மிக முக்கியம். அவர் நேற்று எப்படி இருந்தார் என்பது முக்கியமல்ல. இக்கணத்தில் எப்படி இருக்கிறார் என்பதே முக்கியம். அதனால், அவரைப் பார்த்தவுடன் அவரை வணங்க வேண்டும். 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அப்படி எடுத்த முடிவுகள் உங்களுக்கு ஏற்கெனவே நிகழ்ந்த அனுபவங்களில் இருந்தே வருவதால், அவை முற்றிலும் தவறாகக் கூட இருக்கலாம். இதனால் உங்கள் முன் இருக்கும் எதையும், யாரையும், அவர் அக்கணத்தில் இருப்பது போல் உங்களால் முழுமையாக உணர முடியாமல் போய்விடும். இது மிகவும் முக்கியம். எந்தத் துறையில் வேலை செய்வதாக இருந்தாலும், உங்கள் முன் இருப்பவர், உங்கள் முன் இருக்கும் அக்கணத்தில் எப்படி இருக்கிறார் என்பதை கிரகிப்பது மிக முக்கியம். அவர் நேற்று எப்படி இருந்தார் என்பது முக்கியமல்ல. இக்கணத்தில் எப்படி இருக்கிறார் என்பதே முக்கியம். அதனால், அவரைப் பார்த்தவுடன் அவரை வணங்க வேண்டும். அவரை வணங்கும்போது, உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு சற்றே வீரியம் குறைகிறது, அதிகமாவதில்லை. ஏனெனில் அவர்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலத்தை நீங்கள் அடையாளம் காண்கிறீர்கள். நமஸ்காரம் செய்வதற்கான நோக்கம் இதுதான்.

படைப்பவனின் பங்களிப்பின்றி, அவனது செயல்பாடு அதனுள் இல்லாமல் இங்கு எந்தப் படைப்பும் இல்லை. ‘படைப்பின் மூலம்’ ஒவ்வொரு அணுவிலும், ஒவ்வொரு உயிரணுவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் இந்தியக் கலாச்சாரம், நீங்கள் விண்ணைப் பார்த்தாலும் வணங்குங்கள், மண்ணைப் பார்த்தாலும் வணங்குங்கள், ஏன் ஒரு ஆணைப் பார்த்தாலும், பெண்ணைப் பார்த்தாலும், குழந்தையைப் பார்த்தாலும், மாட்டைப் பார்த்தாலும், மரத்தைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அதனை வணங்குங்கள் என்று சொல்லிக் கொடுத்தது. இவ்வாறு செய்வது, உங்களுக்கு உள்ளும் அதே ‘மூலம்’ இருக்கிறது என்பதை உங்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாக இருக்கும். இதை உணர்ந்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு முறை நமஸ்காரம் செய்யும் பொழுதும், அது நீங்கள் உங்களுக்குள் மலர்வதற்கான வழியை வகுக்கும்.

படைப்பவனின் பங்களிப்பின்றி, அவனது செயல்பாடு அதனுள் இல்லாமல் இங்கு எந்தப் படைப்பும் இல்லை. ‘படைப்பின் மூலம்’ ஒவ்வொரு அணுவிலும், ஒவ்வொரு உயிரணுவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கு மற்றுமொரு பின்னணியும் உண்டு. பல நரம்புகள் உங்கள் உள்ளங்கைகளில்தான் முடிவடைகின்றன. இதைத்தான் இன்றைய மருத்துவ விஞ்ஞானமும் கண்டுபிடித்திருக்கிறது. உண்மையில் உங்கள் நாவையும் குரலையும் விட உங்கள் கைகள்தான் மிக அதிகமாகப் பேசுகிறது. ‘முத்ரா’க்களுக்கு என்று யோகத்தில் தனியாக விஞ்ஞானமே இருக்கிறது. உங்கள் கைகளை சில நிலைகளில் வைத்துக் கொள்வதாலேயே உங்கள் சக்திகளை பல வகைகளில் செயல்படச் செய்யலாம். உங்கள் உள்ளங்கைகளை ஒன்றாக சேர்த்து வைத்த உடனேயே, உங்களுக்கு பிடித்தமானவை, பிடிக்காதவை, உங்கள் ஏக்கங்கள், வெறுப்புகள், போன்ற எல்லா இருமைகளும் தரைமட்டமாகிவிடுகிறது. ‘நீங்கள்’ என்பது பிரிவுகள் இல்லாத முழுமையாக வெளிப்படுகிறது. உங்கள் சக்திநிலையும் ஒன்றென செயல்படும்.

சுற்றி இருக்கும் எல்லா உயிர்களிடத்திலும் கூட்டுறவு ஏற்பட்டால் மட்டுமே இந்த உயிர் மேன்மை அடையும்.

அதனால் நமஸ்காரம் என்பது வெறும் கலாச்சாரம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அதற்குப் பின் அறிவியல் காரணமும் உண்டு. நீங்கள் யோகப் பயிற்சிகள் கற்று, முறையாக தினமும் ‘சாதனா’வில் ஈடுபடுபவராக இருந்தால், ஒவ்வொரு முறை கைகளை சேர்த்துக் குவிக்கும் போதும், அங்கு தீப்பொறி போன்ற சக்தி ஸ்பரிசம் ஏற்படுகிறது. உங்கள் சக்திநிலையில் பார்த்தால், அது கொடுத்தலுக்கான சூழ்நிலையில் இருக்கிறது. அதாவது அடுத்தவருக்கு உங்களை ஒரு அர்ப்பணமாக நீங்கள் அர்ப்பணிக்கிறீர்கள் என்று பொருள். அப்படி உங்களைக் கொடுக்கும் பொழுது, அங்கிருக்கும் அந்த அடுத்த உயிரை, வாழ்வில் உங்களுடன் ஒத்துப்போகும் ஒரு உயிராய் ஆக்கி விடுகிறீர்கள். நீங்கள் கொடுக்கும் மனநிலையில் இருந்தால் மட்டுமே வெளி சூழ்நிலை உங்களுக்கு ஏற்றார் போல் அமையும். ஒவ்வொரு உயிருக்கும் இதுதான் நிஜம். சுற்றி இருக்கும் எல்லா உயிர்களிடத்திலும் கூட்டுறவு ஏற்பட்டால் மட்டுமே இந்த உயிர் மேன்மை அடையும்.

 

sg-tamil-app-banner