கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடங்களை தமிழக அரசு மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்த அனுமதித்துள்ளது.

தேவைப்பட்டால், ஈஷா தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனைகளிலும் ஆதரவை வழங்குவார்கள் என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறினார்.

பசி மற்றும் பட்டினியால் உள்நாட்டு அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும், வேலைவாய்ப்பின்மை தினசரி ஊதியம் பெறுபவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பட்டினிக்கு தள்ளும் என்பதையும் சத்குரு சுட்டிக்காட்டினார்.

பாதிப்புக்குள்ளாகும் இந்த பிரிவினரை பாதுகாத்திட உலகெங்கும் உள்ள பல லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் முன்வரவேண்டும். குறிப்பாக இந்தியாவிலுள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும், அவ்வாறு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் 2 நபருக்கான உணவை வழங்க வேண்டும்.

சத்குரு, தன்னார்வலர்களுக்கு விடுத்த வேண்டுகோளில், "நீங்கள் எங்கிருந்தாலும், பட்டினியால் துன்பமும் மரணமும் ஏற்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

மேலும் கூறுகையில் “இக்கட்டான இந்த சூழலில் ஒவ்வொரு குடிமகனும் தன்னால் இயன்றதை செய்வது மட்டுமின்றி, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்”என்றார்.

கடந்த வாரம், ஈஷா யோகா மையம் COVID-19 இன் பரவலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அனைத்து மையங்களிலும் அதன் அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்துள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.