நம் கலாச்சாரத்தில் திருமணம் எனும் செயல்முறை ஆழமான ஆன்மீக அறிவியலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சடங்குகளால் கட்டமைக்கப்பட்டது. ஆனால் , தற்போது அதிலுள்ள ஆன்மீகத் தன்மை நீர்த்துப்போய், வெறும் சடங்குகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஒரு தம்பதியரின் வாழ்வில் முக்கிய திருப்பமாக அமையும் திருமண நிகழ்வினை,அவர்களின் உள்நிலை வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமைத்து, யோக விஞ்ஞானத்தின் சாரத்தில் சத்குருவின் வழிகாட்டுதலில் பூதசுத்தி செயல்முறை வழங்கப்படுகிறது.

லிங்கபைரவியில் பூதசுத்தி விவாஹா செயல்முறையை மேற்கொண்ட திருமதி.ஜோஸ்னா ஸ்ரீகாந்த் அவர்களின் அனுபவ பகிர்வு:

bhutashuddhivivaha-jyotsna&srikanth

2016ல் ஃப்ரெஞ்ச் ஆசிரியராக ஈஷா ஹோம் ஸ்கூலில் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். நானும் எனது பெற்றோரும் கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா தியான அன்பர்களாக இருந்து வருகிறோம். லிங்கபைரவி தேவியின் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பது எனது தீவிர ஆசையாக இருந்தது. 2018 மார்ச்சில் முதல்முறையாக விவாஹா செயல்முறையை நான் நேரில் கண்டதற்கு பின்னால், அந்த ஆசை மேலும் தீவிரமானது.

ஸ்ரீகாந்த் அவர்களுடன் என்னுடைய திருமணம் குறுகிய காலத்திற்குள்ளாகவே நிச்சயிக்கப்பட்டது. ஒரு கண்ணுக்குத் தெரியாத அருட்கரத்தை ஒவ்வொரு தருணத்திலும் என்னால் உணரமுடிகிறது, இது தேவியா அல்லது சத்குருவா அல்லது இருவருமா என்பது உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை!

மிகவும் அழகாக அந்த முழுமையான செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஆலயம் முழுவதும், தேவியின் அதிர்வுகளால் நிரம்பியிருப்பதை நன்றாக உணர முடிந்தது. குறிப்பாக, நான் இவ்வளவு மென்மையாகவும் கருணைதன்மையுடனும் இதற்கு முன்னெப்போதும் அவளை நான் உணர்ந்திராத விதமாக அது இருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சர்ப்ப சேவையின் நிறைவில் எனக்கும் ஸ்ரீகாந்த்-க்கும் இடையிலான புற எல்லைகள் மெதுவாக மறைந்து போவதை என்னால் பார்க்க முடிந்தது.

எங்களது திருமண செயல்முறையை எனது முழுக்குடும்பமும் சாட்சியாக இருந்து பார்த்தது, பெரும் பாக்கியமாகும். அவர்கள் பூதசுத்தி மற்றும் விவாஹா செயல்முறையை ஆச்சரியம் பொங்க பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த செயல்முறை முடிந்த பின்னர் அவர்களின் முகங்கள் ஆனந்தத்தில் திளைத்திருந்தன. என்னுடைய உறவினர்களில் சிலர் என்னிடம் கூறியபோது, இத்தகைய ஒரு திருமணத்தில் தாங்கள் பங்கேற்றது பெருமிதம் தருவதாக கூறினர்.

பூதசுத்தி செயல்முறையின் போது நான் நன்றி உணர்ச்சியில் முழுவதுமாக நிரம்பி வழிந்தேன். இதைவிட அழகாகவும் கருணை மிக்கதாகவும் எங்களது திருமண நாள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

நான் பின்னோக்கிப் பார்த்தால் என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், சத்குருவின் அருளை எப்போதும் உணர்ந்து வந்துள்ளேன். அவரது கருணையில்லாமல் என் வாழ்வின் பல மோசமான சூழ்நிலைகளை என்னால் இலகுவாகவும் பாதிப்பு இல்லாமலும் கடந்து வந்திருப்பதென்பது சாத்தியமில்லை! எனக்குத் தேவையானது அனைத்தும், நான் விரும்பியது அனைத்தும் மிக அற்புதமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கை வெகு தீவிரமாக நிகழ்கிறது. வாழ்க்கை நிகழும் விதம் ஒரு அதிசயத்தைப் போல உள்ளது. அவரது அருள் என் வாழ்வை வழி நடத்திக்கொண்டிருக்கிறது.

பூதசுத்தி விவாஹா - உறவுகளை பிரதிஷ்டை செய்தல்

ஒரு தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது.

திருமணம் ஆனவர்களுக்கும், திருமணம் ஆக விருப்பவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்களை சுத்திகரித்து, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இந்த விவாஹா செயல்முறை, சுமங்களா எனப்படும் பயிற்சிபெற்ற தன்னார்வத் தொண்டர்களால் உலகத்தில் நீங்கள் விரும்பும் எந்தவொரு இடத்திலும் நிகழ்த்தப்படும்.

தொடர்பு கொள்வதற்கு: (+91) 83000 30666 அல்லது vivaha@shriyogini.org