நீங்களும் சுமங்களா ஆகலாம் - பூதசுத்தி விவாகம்
திருமணங்களை பிரதிஷ்டை செய்யும் ஒரு தொன்மையான செயல்முறையே பூதசுத்தி விவாகம். இதன் மூலங்கள், யோக முறைகளில் இருக்கின்றன. பூதசுத்தியின் அடிப்படை நோக்கமே உடலிலுள்ள பஞ்சபூதங்களை சுத்திகரித்து, இரு உயிர்களுக்கிடையே, பிணைப்பு ஏற்படாமல், மிகப் அதிகப்படியான ஈடுபாட்டினையும் இணைப்பையும் கொண்டு வருவதுதான்.
"பூரண சங்கமத்தை அடைவதற்கு திருமணம் ஒரு படிகல்லாக அமையமுடியும்," என்கிறார் சத்குரு.
உடல் மன உணர்வு நிலைகளைக் கடந்து, பஞ்சபூத நிலையில், தம்பதியருக்கு இடையே ஆழமான இணைப்பை உருவாக்கும் வகையில் இந்த திருமண செயல்முறையை சத்குரு அவர்கள் வடிவமைத்துள்ளார்.
Subscribe
உலகம் முழுவதிலுமுள்ள அனைவருக்கும், இந்த வாய்ப்பினை கொண்டு சேர்க்கும் விதத்தில், ஈஷா தியான அன்பர்கள் இதற்கான பயிற்சியைப் பெற்று அனைவருக்கும் வழங்கக்கூடிய மகத்தான வாய்ப்பினை சத்குரு அவர்கள் சாத்தியமாக்குகிறார். பூதசுத்தி முறையில் ஈடுபட்டு, பிறருக்கு இம்முறைப்படி திருமணம் செய்துவைக்க விரும்பும் தியான அன்பர்களுக்கான தனிப்பட்ட பயிற்சிகள் நடைபெறவிருக்கின்றன. இந்த திருமணங்களை செய்துவிக்கும் அன்பர்கள் "சுமங்களா"என்று அழைக்கப்படுவார்கள்.
டிசம்பர் மாதத்தில், கோவை ஈஷா யோக மையத்தில், இதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பூதசுத்தி திருமணங்களை நடத்த விருப்பமாயுள்ள ஈஷா தியான அன்பர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி: முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம், தம்பதியர் விண்ணப்பிப்பது சிறப்பு. ஈஷா யோகா வகுப்பு மற்றும் பாவ-ஸ்பந்தனா வகுப்புகள் செய்திருக்க வேண்டும்.
பூதசுத்தி விவாகத்திற்கான பயிற்சி டிசம்பர் 1 - 8
மேலதிக தகவலுக்கு: vivaha@lingabhairavi.org
பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் படிவம்