26-ம் தேதி முதல் இணையுங்கள்

“லிங்கபைரவி பெண்தன்மையானவள், அவள் தயவை நீங்கள் விரும்பி வேண்டிட
வேண்டும். அவளை அர்ப்பணிப்பு உணர்வுடன் அணுகவேண்டும்.” - சத்குரு

நீங்கள் ஏன் நவராத்திரி சாதனா செய்ய வேண்டும்:

  • லிங்கபைரவி தேவியுடன் உங்கள் தொடர்பை ஆழப்படுத்திக்கொள்ள
  • உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்வாழ்வை உருவாக்கிக்கொள்ள
  • உங்களுக்குள்ளும் சுற்றிலும் உற்சாகமான சூழலை உருவாக்கிக்கொள்ள
  • லிங்கபைரவி ஆரத்தி அர்ப்பணிப்பதன் மூலம் தேவியின் அருளைப் பெற்றுக்கொள்ள

இந்த சாதனாவை அனைவரும் செய்யலாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும்
நண்பர்களுடன் இணைந்து பங்கேற்றிடுங்கள்.

நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பங்கேற்க முடியும்.

எப்பொழுது, எங்கே:

  • நாள்: செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை (ஆன்லைன்)
  • ஒன்பது நாட்களிலும் இணைவதற்கு மேலே உள்ள buttonஐ பயன்படுத்துங்கள்.

நேரங்கள்:

  • தமிழ்: காலை 11:30 முதல் 12:30 வரை
  • இந்தி: மாலை 6:30 முதல் 7:30 வரை
  • ஆங்கிலம்: இரவு 7:45 முதல் 8:45 வரை
  • அக்டோபர் 2 அன்று மாலை 5:30 மணி முதல் 6:15 மணி வரை சிறப்பு
    நவராத்திரி அபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு.

சாதனாவுக்கான குறிப்புகள்:

  • ஆன்லைன் வகுப்புகளின் போது சாதனா செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
    வழங்கப்படும். நீங்கள் ஒவ்வொரு நாளும் வகுப்பில் இணைய முடிந்தால் சிறந்தது.
  • சாதனாவுக்கு முன் குளிப்பது சிறந்தது.
  • லிங்கபைரவி தேவியின் புகைப்படம்/குடி/யந்திரத்தின் அருகில் அமர்ந்துகொள்ளுங்கள். (உங்களிடம் தேவி புகைப்படம் இல்லையென்றால், ஒன்றை அச்சிட்டு எடுத்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் அலைபேசி திரையில் தேவியின் படத்தை காட்சிப்படுத்தலாம்.)
  • தேவிக்கு ஒரு விளக்கு ஏற்றுங்கள்.
  • ஓர் அர்ப்பணம் செய்யுங்கள் - ஒரு பூ, ஒரு பழம், இனிப்பு அல்லது நீங்கள் விரும்பும் வேறு ஏதேனும் ஒன்று. நீங்கள் என்ன அர்ப்பணிக்கிறீர்கள் என்பதை விட, நீங்கள் எவ்வாறு அதை அர்ப்பணிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது.
  • உணவுக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், சாத்வீக உணவு எடுத்துக்கொள்வது மிகவும் உகந்ததாகும்.
  • நிலையான இன்டர்நெட் தொடர்பு இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
  • சாதனா வகுப்பு நேரம் முழுவதிலும், அறையில் எந்த இடையூறும் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சாதனா வழிகாட்டுதலுக்கான வகுப்பில் உங்களால் இணைய முடியவில்லை என்றால்:

  • அன்றைய தினம் எந்த நேரத்திலும் நீங்களாகவே சாதனாவைச் செய்யலாம்.
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, உகந்த ஒரு சூழலை உருவாக்குங்கள்.
  • “ஜெய் பைரவி தேவி” ஸ்துதியை 3, 6, 9 அல்லது 11 முறை உச்சாடனம்
    செய்திடுங்கள்.
  • தினமும் பதினொரு சுற்றுகள் உச்சாடனம் செய்வது சிறந்தது.
  • இவை தேவியின் 33 மங்களகரமான பெயர்கள். ஒருவர் பக்தியுடன் உச்சாடனம்
    செய்யும்போது, தேவியின் அருளைப் பெறமுடியும்.

லிங்கபைரவி ஸ்துதி

ஜெய் பைரவி தேவி குருப்யோ நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸ்வயம்போ நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸ்வதாரிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாகல்யாணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாபத்ராணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி நாகேஷ்வரி நமஸ்ரீ

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜெய் பைரவி தேவி விஷ்வேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி சோமேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி து:க்கஸம்ஹாரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஹிரண்யகர்பிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி அம்ருதவர்ஷிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி பக்தரக்ஷிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸௌபாக்யதாயினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸர்வஜனனி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி கர்பதாயினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஷூன்யவாஸினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாநந்தினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி வாமேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி கர்மபாலினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி யோனீஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி லிங்கரூபிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஷ்யாமஸசுந்தரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி த்ரிநேத்ரினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி சரவமங்களி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாயோகினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி க்லேஷநாசினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி உக்ரரூபிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி திவ்யகாமினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி காலரூபிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி திரிஷுலதாரிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி யக்ஷகாமினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி முக்திதாயினி நமஸ்ரீ

அஉம் மஹாதேவி லிங்கபைரவி நமஸ்ரீ

அஉம் ஸ்ரீ ஷாம்பவி லிங்கபைரவி நமஸ்ரீ

அஉம் மஹாஷக்தி லிங்கபைரவி நமஸ்ரீ

நமஸ்ரீ / நமஸ்ரீ / தேவி நமஸ்ரீ /

 

26-ம் தேதி முதல் இணையுங்கள்

ஆசிரியர் குறிப்பு: அடுத்த யந்த்ரா வைபவம், ஈஷா யோகா மையத்தில் நடைபெறும். ஒரு சக்தி வாய்ந்த் செயல்முறைக்கான தீட்சை வழங்கப்பட்டு, சத்குருவின் முன்னிலையில் தேவி யந்த்ரம் பெற்றுக்கொள்வீர்கள். மேலும் விபரங்களுக்கு, இங்கே க்ளிக் செய்க அல்லது 8448447708 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

yantra ceremoney