உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் தமிழகத்திலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஈஷா உப-யோகா வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த ஒரு சிறப்பு பதிவாக இங்கே சில வரிகள்!

அனைவரும் இம்மண்ணில் பிறக்கையில் தூய பனித்துளி போன்ற மனம்கொண்ட குழந்தைகளாகவே பிறக்கின்றோம். ஆனால், நம்மில் சிலரை தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகள் குற்றவாளிகளாக மாற்றிவிடுகின்றன. அதிலும் பலரது வாழ்க்கையோ ஒருசில கணங்களில் எடுக்கும் தவறான முடிவுகளால் சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலேயே பெரும்பகுதி கழிந்துவிடுகிறது.

“கைதி ஒருவர், தன்னை சதிசெய்து ஜெயிலுக்குள் தள்ளிய அனைவருக்கும் நன்றி என்று கூறி நமக்கு அதிர்ச்சியை தந்தார். அவர் கூறும்போது, ‘நான் குற்றமற்றவன் என்றாலும், பலரும் சூழ்ச்சி செய்து என்னை இங்கே அனுப்பிவிட்டனர். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் இன்று இந்த யோகா வகுப்பு எனக்கு கிடைத்திருக்காது!’ என்றார்.

மணி அடித்தால் சாப்பாடு, கதவைத் திறந்துவிடுவதற்கும் மூடுவதற்கும் ஆட்கள், உடல்நலக் குறைவென்றால் உடனே மருத்துவ உதவி என அனைத்து வசதிகளும் இருந்தாலும், சுதந்திரம் என்ற ஒன்று பறிக்கப்படும்போது அங்கே சொல்லமுடியாத துக்கம் நிறைவது நிதர்சனமானதே! ஆனால், சிறையும் இரும்பு கம்பிகளும் புறச்சூழலில் வேண்டுமானால், தடையாக இருக்கலாமே தவிர அகச்சூழலில் ஒருவர் சுதந்திரம் பெற நினைத்துவிட்டால் அவருக்கான வாய்ப்பு அப்போதும் திறந்தே இருக்கிறது.

ஏதோ ஒரு சூழ்நிலையால் இன்று குற்றவாளிகளாக தண்டனை அனுபவிக்கும் இந்த உயிர்கள் கருணையின் ஸ்பரிசம் தொட, தீண்டத்தகாதவர்களா என்ன?! சத்குருவின் கருணைப் பார்வை அவர்கள் மீது பட, கைதிகளுக்காக யோகா வகுப்புகள் ஈஷா அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து 24 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. 1992ம் ஆண்டு முதல் சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகளை வழங்கி வரும் ஈஷா, தற்போது உலக யோகா தினத்தை முன்னிட்டு உப-யோகா வகுப்புகளை வழங்கி வருகிறது. சத்குருவின் வழிகாட்டுதலின் படி சிறைச்சாலைகளில் நிகழ்த்தப்படும் யோகா வகுப்புகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட உள்ளது.

கடலூர், சென்னை -புழல் (பெண்களுக்கு, ஆண் விசாரணை கைதிகளுக்கு மற்றும் தண்டனை உறுதிசெய்யப்பட்ட ஆண்களுக்கு என தனித்தனியாக 3 சிறைகள்), கோயமுத்தூர் மற்றும் வேலூரில் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு என தனித்தனிச் சிறைகள் மற்றும் திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் ஈஷா யோகா வகுப்புகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

சிறைச்சாலைகளில் உப-யோகா வகுப்புகளை வழங்கும் யோகா ஆசிரியர்களிடம் கேட்டபோது...

Question: கைதிகள் யோகா வகுப்பிற்கு ஆர்வமாக வருகிறார்களா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“வகுப்பின் முதல்நாளில் வரும்போது அவர்களில் பலர் ஈடுபாடில்லாத தன்மையும், அலட்சியப் போக்கும், சோகம் கலந்த விரக்தியும் கொண்டிருப்பார்கள். வகுப்பு நிகழத்துவங்கிய பின், சத்குருவின் உரைகளை கேட்கத் துவங்கிய பின் அவர்களின் தன்மைகள் சிறிது சிறிதாக மாறத் துவங்கிவிடும். வகுப்பின் இறுதிநாளில் அவர்கள் எங்களுடனேயே விடைபெறும் வரை இருப்பார்கள். வகுப்பில் தன்னார்வத் தொண்டர்களாக மாறி கார்ப்பெட்டுகளை மடித்து வைப்பது போன்ற வேலைகளையும் அவர்களே செய்வதைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கும்!”

Question: வெளியில் யோகா கற்றுத்தருவதற்கும் சிறையில் யோகா கற்றுத்தருவதற்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?

“சினிமாக்களில்தான் குற்றவாளிகளை வில்லன்களாக, கொடூரமானவர்களாக பெரும்பாலும் காட்சிப்படுத்துவர். ஆனால், நேரில் சென்று பார்க்கையில் பெரும்பாலானவர்கள் பொதுவான மனித உணர்வுகளுடன் சாதாரண மனிதர்களாகவே இருக்கிறார்கள். சிறைப்படுத்தும் இரும்புக் கம்பிகள் உள்ளார்ந்த ஒரு துயரத்தை கசியவிட்டாலும், அவர்கள் யோகா வகுப்புகளின் ஒரு பகுதியான விளையாட்டில் ஈடுபடும்போது காட்டும் தீவிரமும் ஈடுபாடும் வேறெங்கும் காண இயலாததாக இருக்கும்.”

பெண்கள் சிறைச்சாலைகளில் வகுப்புகளை வழங்கிய பெண் யோகா ஆசிரியர் கூறும்போது...

“சென்னை புழல் சிறையில் கடந்த மார்ச் மாதம் பெண் கைதிகளுக்கு யோகா வகுப்புகளை வழங்கினோம். ஆண் கைதிகளைக் காட்டிலும் பெண் கைதிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அங்கே ஒரு பெண் பங்கேற்பாளர் ஏற்கனவே தான் சத்குரு புத்தகங்களைப் படித்து வருவதாகவும், இந்த வகுப்பிற்காக தான் காத்திருந்ததாகவும் கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். வகுப்பு நிறைவடைந்த பின் சிலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அதில் ஒரு பெண் கூறுகையில், இந்த வகுப்பில் முன்னரே சேர்ந்திருந்தால் தான் சிறைக்கு வந்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்காது எனக் கூறினார். மேலும் அவர்கள் கூறும்போது, விழிப்புணர்வுடன் வாழ்வதென்றால் என்னவென்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்; இனி உள்ள வாழ்நாளையாவது நான் விழிப்புணர்வுடன் ஆனந்தமாக வாழ விரும்புகிறேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Question: கவனிக்கத் தக்க வகையில் பகிர்ந்துகொண்ட கைதிகள் பற்றி கூற முடியுமா?

“கைதி ஒருவர், தன்னை சதிசெய்து ஜெயிலுக்குள் தள்ளிய அனைவருக்கும் நன்றி என்று கூறி நமக்கு அதிர்ச்சியை தந்தார். அவர் கூறும்போது, ‘நான் குற்றமற்றவன் என்றாலும், பலரும் சூழ்ச்சி செய்து என்னை இங்கே அனுப்பிவிட்டனர். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் இன்று இந்த யோகா வகுப்பு எனக்கு கிடைத்திருக்காது!’ என்றார்.

மேலும், கடுங்காவல் தண்டனை பெற்ற ஒரு கைதி பகிர்ந்துகொண்டபோது, தான் ஒரு அரசு அதிகாரியாக இருந்ததாகவும் பணியில் தனக்கு நல்ல பெயரும் பல விருதுகளும் கிடைத்ததாகவும் கூறினார். தன் பணி நிறைவடையும் தருணத்தில் சிலர் திட்டமிட்டு தன்னை சிறையில் தள்ளினர் என்று கூறிய அவர், அதனால் தான் சந்தித்த அவமானங்கள் மற்றும் துயரங்களிலிருந்து இந்த வகுப்பு தன்னை மீட்டெடுத்துள்ளதாக பதிவுசெய்தார். வகுப்பின் ஒரு அம்சமான ‘ஏற்றுக்கொள்ளுதல்’ என்ற தன்மை தனக்குள் நுழைந்த பின்னர் இந்த சிறைச்சாலையே தனக்கு புதியதாகத் தோற்றமளிப்பதாக அவர் கூறினார். முன்பெல்லாம் தனது குடும்பத்தினர் தன்னை பார்க்க வரும்போது தான் கடும் வார்த்தைகளால் சத்தம்போட்டதாகவும், தற்போது அவர் சாந்தமாக பேசுவதைக் கண்டு அவரின் குடும்பத்தினர் ஆச்சரியப்படுவதாகவும் கண்களில் நீர் கசிய பகிர்ந்துகொண்டார்.”

பழிவாங்கும் எண்ணத்தை பறக்கச் செய்த யோகா...

பொதுவாக பல கொலைக் குற்றவாளிகள் பகிர்ந்துகொண்டபோது, தங்களுக்குள் கனன்றுகொண்டிருந்த பழிவாங்கும் எண்ணம் இந்த வகுப்பில் கலந்துகொண்ட பின் நீங்கிவிட்டதாக குறிப்பிட்டனர். ஒரு சிலர் கூறும்போது, தாங்கள் வெளியே சென்றதும் தங்களுக்கு கொடுமை இழைத்த குறிப்பிட்ட நபர்களை பழிவாங்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அந்த நடவடிக்கை மீண்டும் ஒரு சுழற்சிக்குள் சிக்கவைத்து நம் வாழ்வை பாழாக்கிவிடும் என்ற விழிப்புணர்வு தற்போது வந்துள்ளதாகவும் வெளிப்படையாக தெரிவித்தனர்.

பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும் பல கைதிகள் தங்களுக்கு உடல் மற்றும் மனதில் சமநிலை உருவாகியுள்ளதை குறிப்பிட்டனர். பலர் நாட்பட்ட நோய்களான மன அழுத்தம், முதுகு வலி, முடக்குவாதம் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட்டுள்ளனர்.

ஈஷா யோகாவை உள்வாங்கிக்கொண்ட இந்த சிறைப்பறவைகள், சிறை என்பது புறச்சூழலில் மட்டுமே இருக்கமுடியும், அகச்சூழலில் அனைவருக்கும் விடுதலைக்கான சாத்தியம் எப்போதும் உள்ளது என்பதை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொண்டுள்ளனர்.

துவக்க காலங்களில் சத்குரு தானே நேரில் சிறைச்சாலைகளுக்குச் சென்று வகுப்புகளை எடுத்துவந்துள்ளார். சிறைச்சாலைகளில் யோகாவை உள்வாங்கிக் கொண்ட பலர் இன்று விடுதலைபெற்று நல்லதொரு வாழ்வினை வாழ்ந்து வருகின்றனர். இந்த வகுப்பு அவர்களை உள்நிலையில் மிக ஆழமாக தொட, அவர்களின் உள்நிலை அனுபவங்களும், உணர்வுகளும் உணர்ச்சிமிகு கவிதைகளாகவும் வெளிப்பட்டன.

அவற்றுள் ஒரு பெண் கைதியின் கவிதை:

அம்மா... (சத்குரு)
ஞானத்தின் பிரம்மாணடமே!
உன் ஏடுகளைப் புரட்டினேன் - அன்றே
உயிரானேன் உன் கருவறையில்!

சிவனிடம் வேண்டினேன்
குருவருள் கிடைத்தது
நான் ஜனித்த நாளிலே!

சிவனருளும் குருவருளும்
கலந்து பிறந்த கலவை நான்;
குருவின் சேயாக ஆனதும் நான் செய்த கர்மமே!
அமைதியை உள்வாங்கி
என் உயிருடன் பயணம் செய்ய
குருவுடன் ஆனந்தம் ஆனந்தம்
என்றும் பேரானந்தமே!

நன்றியுடன் தங்களின் சேய்
பூவரசி, புழல் சிறைச்சாலை சென்னை