கொல்லைப்புற இரகசியம் - பகுதி 4

அத்திப் பழத்தைப் பற்றி 'அடியாத்தி' என சொல்லும் அளவிற்கு வியக்க வைக்கும் பல தகவல்களைத் தந்த உமையாள் பாட்டி, இம்முறை ஆவாரம் பூவப் பத்தி சொல்ல வருகிறாள்! கொல்லைப்புற ரகசியத்தில் ஆவாரம் பூவின் சமாச்சாரங்களை தொடர்ந்து படித்து அறிந்துகொள்ளுங்கள்!

டாக்டர். பிரதீபா சுரேந்தர்,

ஈஷா ஆரோக்யா

"வணக்கம் பாட்டி, எப்படி இருக்கீங்க?" என்று பாட்டியின் குடிலுக்குள் மெதுவாக நுழைந்தேன்; மஞ்சள் நிற மலர்கள் பரத்திக் கிடக்க ஏதோ கை மருந்து செய்துகொண்டிருந்தவள் "நேக்கென்னடா குறைச்சல்?! நன்னா இருக்கேன். ஆமா... நீ ஏன் டல்லா இருக்க? சுகர் கிகர் வந்திருக்கான்னு போய் செக் பண்ணு போ!" என்றாள் கிண்டலாக.

ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும்.

"அப்படியெல்லாம் ஒண்ணும் வராது பாட்டி, நீங்க வேற சும்மா பயமுறுத்தாதீங்க! இப்போதான் எனக்கு கொஞ்சம் டவுட் வர்றது" என்றேன். உண்மையில் எனக்கும் கொஞ்சம் டவுட் இருக்கத்தான் இருந்தது.

ஆவாரம்பூ பயன்கள் (Avarampoo benefits in tamil)

"பயப்படாதேடா...! இந்த ஆவாரம் பூ இருக்குதில்ல?!" என்று அவள் இழுத்துப் பேச, நான் இடைமறித்து "எது இதுவா?" என பரத்திப் போடப்பட்டிருந்த அந்த பூக்களைக் காட்டிக் கேட்டேன்.

"நீரிழிவு" நோய்க்கு ஒரு வரப்பிரசாதம்:

"ஆமா... இதுதான் ஆவாரம் பூ. "நீரிழிவு" நோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்துடா.

தோல் நமைச்சல்:

ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும்.

அப்புறம்...

ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம்:

ஆவாரம் பூவோட கருப்பட்டி சேத்து மணப்பாகு செஞ்சு குடிச்சா ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம் குணமாகும். ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி எல்லாத்திலயும் மருத்துவ குணம் இருக்கு."

இப்படி, ஆவாரம்பூ பத்தி உமையாள் பாட்டி ஆதி முதல் அந்தம் வரை வெளுத்து கட்ட, அவளது பட்டறிவைக் கண்டு வியந்தபடி பார்த்திருந்தேன். தொடர்ந்து பேசிய பாட்டி ஆவாரை பத்தி பேசி சங்க காலம் வரைக்கும் சென்றுவிட்டாள்.

'ஆவிரை' னு அந்தக் காலத்தில சொன்னத இந்த காலத்தில ஆவாரம்பூன்னு சொல்றாங்க. தைப்பொங்கல் அன்னிக்கு காப்புக் கட்டுவதுக்கும், மாட்டுப்பொங்கல் அன்னிக்கு மாடுங்களுக்கு மாலை கட்டுறதுக்கும், வீடிகளுக்குத் தோரணம் கட்டுறதுக்கும் ஆவாரம்பூவ இப்போ பயன்படுத்துறாங்க. சங்க காலத்தில மடல்-மா ஏறி வரும்போது பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கலப்போ மட்டும் பயன்படுத்துற பூவா மாறிருச்சு."

1

2

சிறப்பு குறிப்பு

  • இந்த ஆவாரைத் தாவரத்தில் Sennapicrin என்னும் Cardiac glucoside உள்ளது. ஆவாரை உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

அடுத்தமுறை நான் உமையாள் பாட்டி வீட்டுக்குச் சென்றபோது...

வெளியூரிலிருந்து வந்திருக்கும் பேரன்-பேத்திமார்களை பார்த்த சந்தோஷத்தில் உமையாள் பாட்டி தனது வைத்திய செயல்முறைகளுக்கு ஒருவார காலம் விடுப்பு தந்திருந்தாள். யாரேனும் அவசரம் என்று வந்தால் மட்டும் ஆலோசனை வழங்கி, மருந்து கொடுத்துவிட்டு, பேரன்-பேத்திகளோடு அளவளாவிக் கொஞ்சி மகிழ்ந்துகொண்டிருந்தாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தனது இரண்டு வயது பேரனை தொட்டிலிலே போட்டு தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்த பாட்டியின் முகத்தின் ஆனந்தக் களிப்பும், அந்த தாலாட்டுப் பாட்டின் வரியில் ஒரு ஆரோக்கிய குறிப்பும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது.

 

avarampoo, ஆவாரம்பூ, avarampoo benefits tamil

 

“ஆவாரை பூவிருக்கு தேகத்த குளிராக்க
தாழ்வார தொட்டிலிலே தங்கமே கண்ணுறங்கு
அடிவானம் தூங்கிருச்சு அன்னமே கண்ணுறங்கு!
ஆராரோ ஆரிரரோ!”

கிராமத்து தாலாட்டு பாட்டினை இப்போதெல்லாம் எங்கு பார்க்க முடிகிறது?! குழந்தைகளுக்கு செல்ஃபோனை கையில் கொடுத்து தூங்க வைக்கும் காலமாக மாறிவருவது பெருத்த வேதனைதான்!

சமூலம்’னா ஆவாரை இலை, பூ, பட்டை, பிசின் ஆகியவற்றோட கலவை! தினமும் 30 - 60 மிலி சமூலக் குடிநீர குடிச்சு வந்தா நீரிழிவு நோய் நல்ல கட்டுக்குள் வரும்.

“என்ன பாட்டி, பேரன்-பேத்திகளையெல்லாம் பாத்ததில வைத்தியசாலைய மறந்துட்டீங்க போல...?”

“எனக்கு வைத்தியம் வேற வாழ்க்கை வேற இல்லப்பா! வாழ்க்கையை சரியா புரிஞ்சு வாழ்ந்தா வைத்தியம் பார்க்கவே தேவையில்லப்பா!” பாட்டி தொட்டிலை ஆட்டிய படியே சன்னமான குரலில் பதில் தந்தாள்.

“பாட்டி நீங்க பேசுறதே ஒரு கவிதை மாதிரி இருக்கு, அதோட ஆவாரை பத்தி நீங்க பாடின அந்த தாலாட்டுப் பாட்டு ரொம்ப அருமை” பாட்டியை பாராட்டிய நான் அதோடு விடவில்லை! ஆவாரை பற்றி நான் அறியாத தகவல்களை கேட்டறிய சித்தமானேன். பாட்டியும் பேரனை தன் தாலாட்டினால் தூங்க வைத்துவிட்டு, முற்றத்திற்கு வந்தமர்ந்து எனக்கு ஆவாரை பற்றி சொல்லலானாள்.

avarampoo, ஆவாரம்பூ, avarampoo benefits tamil

 

“அந்த காலத்துல உங்க தாத்தா பங்குனி-சித்திரை வெயில் காலத்தில ஆவாரை இலைகள தலையில பரப்பி வச்சு, அதுமேல தலைப்பாகை கட்டிகிட்டு இங்கிருந்து மதுரைக்கு நடந்தே போவாருப்பா!”

குளிர்ச்சி தன்மை:

“தலைப்பாகைக்குள்ள ஆவாரை இலையா... இது புது Fashion மாதிரி இருக்கே பாட்டி?!”

“இது மாதிரி தலைப்பாகை கட்டினா எவ்வளவு தூரம் வெயில்ல நடந்தாலும் வெயில் தாக்கம் தெரியாது. அந்த அளவுக்கு ஆவாரை இலை குளிர்ச்சி தன்மையுடையுது!

உடற்சூடு தணிய:

ஆவாரை பூ, இலை, பட்டை, வேர்... இப்படி எல்லா பாகமுமே மருத்துவ குணம்கொண்டதுதான். ஆவாரம்பூவ குடிநீரிட்டு பால்கலந்து சாப்பிட்டு வந்தா உடற்சூடு தணியும்.

ஆவாரை வேர்ப்பட்டை குடிநீர் செஞ்சு அதுகூட பசும்பால், எள்நெய் கலந்து முறைப்படி தைலம் செஞ்சு, குளிக்கும் முன்னால தலையில் தேய்த்து தலைமூழ்கினா உடல்வெப்பம் தணியும், கண்ணும் குளிச்சியாகும்.

வெள்ளைப்படுதல், ஆண்குறி எரிச்சல்:

அதுமட்டுமில்லாம, பூவ மணப்பாகு செஞ்சு சாப்பிட்டா, பெண்களுக்கு வெள்ளைப்படுதலும், ஆண்களுக்கு ஆண்குறி எரிச்சலும் தீரும்.

ஆவாரம்பூ பொடி பயன்கள்:

கற்றாழை நாற்றம், உடல் வறட்சி:

பூவ பொடி செஞ்சு தேய்த்து குளிச்சு வந்தா, உடல் வியர்வையினால ஏற்படும் உப்பு, கற்றாழை நாற்றம், உடல் வறட்சி நீங்கும். அதோட உடலுக்கு நல்ல நிறத்தையும் குடுக்கும்.

கண்சிவப்பு (Conjunctivitis):

கண்சிவப்பு (Conjunctivitis) இருக்குறவங்க ஆவாரை விதையை பொடி செஞ்சு நீரில் குழப்பி கண் இமை மேல பத்துபோட்டா குணமாகும்.

ஆவாரை பிசின் பயன்கள்:

ஆவாரை பிசின் 4-10 கிராம் எடுத்து தண்ணியில கலந்து குடிச்சு வந்தா நீரிழிவு, வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

ஆவாரை பட்டை பயன்கள்:

வாய்ப்புண்:

வாய்ப்புண் இருக்குறவங்க ஆவாரை பட்டையை குடிநீரிட்டு வாய் கொப்பளிச்சு வந்தா, நல்ல பலன் கிடைக்கும்.

 

avarampoo, ஆவாரம்பூ, avarampoo benefits tamil

 

சமூலக் குடிநீர்:

அப்புறம் சமூலம் கேள்விப்பட்டிருக்கியா...?”

“அப்படின்னா என்ன பாட்டி... ஏதாவது வியாதியா?”

“சமூலம்’னா ஆவாரை இலை, பூ, பட்டை, பிசின் ஆகியவற்றோட கலவை! தினமும் 30 - 60 மிலி சமூலக் குடிநீர குடிச்சு வந்தா நீரிழிவு நோய் நல்ல கட்டுக்குள் வரும். ஆண்குறி எரிச்சலும் தீரும். இந்த குடிநீர்ல பனங்கற்கண்டு, ஏலம், வால்மிளகு, சேத்து மணப்பாகு செஞ்சு, அதுல 4கிராம் எடுத்து, பால் இல்லேன்னா தண்ணி கலந்து குடிச்சு வந்தா உடல் வலிமையாகும்.”

“அப்போ நான் இனிமே சமூல boyஆ மாறிடலாம்னு இருக்கேன்”

“என்னப்பா அது”

“ஆமா பாட்டி, டெய்லி complan குடிச்சா complan boy, டெய்லி சமூலம் குடிச்சா சமூல boy!”

பாட்டி அந்த கடி ஜோக்கினால் கடுப்பாகி, அடுக்கறைக்குள் நுழைந்தாள் தன் பேரக்குழந்தைகளுக்கு பலகாரம் சமைப்பதற்காக! பாட்டியின் பலகார ருசியை ருசித்துவிட எனக்கும் ஆவல்தான், ஆனால், அதற்கிடைப்பட்ட நேரத்தில் ஈஷா ஆரோக்யா சென்று ஆவாரம் பொடியை வாங்கி வந்துவிட கிளம்பினேன்.

ஈஷா ஆரோக்யா மையங்கள்:

சென்னை: (044) 42128847; 94425 90099
சேலம்: (0427) 2333232; 94425 48852
கரூர்: (04324) 249299; 94425 90098
கோவை: 83000 55555

Wikimedia, Dhammika Heenpella, lalithamba, Vietnam Plants & The USA plants @ flickr