ஈஷா பொறுப்பேற்ற மின்மயானம்… இறப்பை இனிதாக்கும் சமூகப்பணி!

இந்த உலகில் யாரும் நிரந்தரமாய் தங்கிவிட முடியாது. வாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி எப்படி அர்த்தம் சேர்க்கிறதோ அதுபோல் இறப்பு நிகழாமல் வாழ்வு அழகுபெறுவதில்லை. இறப்பும் கூட நமது கடைசி விநாடியில் நிகழும் வாழ்க்கை என சத்குரு சொல்கிறார். ஒருமனிதன் மரணித்த பிறகு அவனது இறப்பையும் ஒரு ஆன்மீக வாய்ப்பாக பார்க்கும் விஞ்ஞான செயல்முறைகள் நம் கலாச்சாரத்தில் இருந்து வருகின்றன. ஆனாலும் பலவித காரணங்களால் இன்று அந்த விஞ்ஞான செயல்முறையானது சமூகத்தில் வெறும் சடங்காகவும் ஊழல் நிறைந்ததாகவும் மாறியுள்ளது.

எல்லோரும் ஆனந்தமாக வாழமுடியும் என்றால் ஆனந்த அலை உருவாக்கலாம். அப்படி இல்லை என்றால், அமைதியாகவாவது இறக்கின்ற மாதிரி, ஒருவர் உயிருடன் இருக்கும்போது, ஒரு சொட்டு ஆன்மீகம் அவருக்கு கொடுக்கலாம். அதற்கும் அவர் வரவில்லை என்றால் நாம் கோயம்புத்தூரில் ஒரு ஈஷா சுடுகாடு ஆரம்பித்திருக்கிறோம். ஈஷா யோகாவிற்கு வராமல் தப்பித்துப் போனவர்களை அங்கு வைத்து ஏதாவது செய்வோம். எனவே உடல் தாண்டிய பிறகாவது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமல்லவா?
ஈஷா அறக்கட்டளை ஓர் மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை நம் தொன்மையான கலாச்சாரத்தில் உள்ள நடைமுறைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து இயங்கி வருகிறது. சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கபைரவி தேவியின் முன்னிலையில், ஒரு குழந்தை பிறந்து நாமகரணம் (பெயர் சூட்டுதல்) என்னும் நிகழ்விலிருந்து, ஒரு மனிதன் இறந்த பிறகு காலபைரவ கர்மா மற்றும் காலபைரவ சாந்தி ஆகிய நிகழ்வு வரை நிகழ்த்தி வருகிறது. உடலை விட்டு பிரிந்த உயிரானது உரிய இடத்தை சென்று அடைவதற்கு சத்குருவின் வழிகாட்டுதலின்பேரில் இந்த செயல்முறைகளை (காலபைரவ கர்மா மற்றும் காலபைரவ சாந்தி) ஈஷா அறக்கட்டளை நடத்தி வருகிறது.

கோவை நஞ்சுண்டாபுரம், போத்தனூர், தொம்மிலிபாளையம், துடியலூர், காரமடை, வெள்ளலூர், வீரகேரளம் மற்றும் சென்னையிலுள்ள நெசப்பாக்கம் & மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் நகர நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று ஈஷா அறக்கட்டளையானது மின் மயானங்களைப் பராமரித்து மக்கள் சேவையில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 25, ஞாயிறு காலை 11.00 மணியளவில் கோவை தொண்டாமுத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள மின் மயானத்திற்கான பொறுப்பினை தொண்டாமுத்தூர் பேரூராட்சியிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொண்டது ஈஷா! இந்நிகழ்வில் ஈஷா அறக்கட்டளையின் சார்பாக சுவாமி அபிபாதா முன்னிலை வகித்தார். மின் மயானம் அமைவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கிய தொண்டாமுத்தூர் ஒன்றிய ரோட்டரி கிளப் பொறுப்பாளர்கள் தலைமை ஏற்றார்கள். சிறப்பாக நடைப்பெற்ற விழாவில் கோவை ஆட்சியாளர் திரு.T.N ஹரிஹரன் IAS அவர்கள் கலந்து கொண்டு ஈஷா அறக்கட்டளையின் சீர்மிகு செயல்பாட்டை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஈஷா சுடுகாடு குறித்து சத்குரு…

எல்லோரும் ஆனந்தமாக வாழமுடியும் என்றால் ஆனந்த அலை உருவாக்கலாம். அப்படி இல்லை என்றால், அமைதியாகவாவது இறக்கின்ற மாதிரி, ஒருவர் உயிருடன் இருக்கும்போது, ஒரு சொட்டு ஆன்மீகம் அவருக்கு கொடுக்கலாம். அதற்கும் அவர் வரவில்லை என்றால் நாம் கோயம்புத்தூரில் ஒரு ஈஷா சுடுகாடு ஆரம்பித்திருக்கிறோம். ஈஷா யோகாவிற்கு வராமல் தப்பித்துப் போனவர்களை அங்கு வைத்து ஏதாவது செய்வோம். எனவே உடல் தாண்டிய பிறகாவது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமல்லவா?

நீங்கள் ஏதோ அவர் இறந்து விட்டார் என்று சொல்கிறீர்கள். உங்களை பொறுத்தவரை அவர் கதை முடிந்து போய்விட்டது. ஆனால் அவர் கதை முடியவில்லை, நடக்கிறது. அவருக்கு வசிப்பிடம் மட்டுமே மாறியிருக்கிறது. உங்களுக்கு பொருள் தன்மையில் மட்டும் தொடர்பு இருப்பதால், ஒருவருக்கு உயிர் போய்விட்டது என்றால் அவருக்கு எல்லாமே முடிந்து போய்விட்டது என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவர் இன்னமும் இருக்கிறார். அவர் உடல் இல்லாமல் உங்களிடம் வந்தால் நேசிக்கமாட்டீர்கள். பேய், பிசாசு என்று எல்லாம் பெயர் கொடுப்பீர்கள். எனவே உங்களோடு அவர் வைத்துக் கொண்டிருந்த தொடர்பு மட்டுமே முடிந்திருக்கிறது. மற்றபடி அவர் இன்னமும் இருக்கிறார்.

அப்படிப்பட்டவர்களை நாம் சில செயல்முறைகள் மூலம் தொட முடியும். அந்த உயிருக்குத் தேவையான நன்மையை செய்ய முடியும். இதற்காகத்தான் இந்தக் கலாச்சாரத்தில் சில சடங்குகள் விஞ்ஞானமாக செய்யப்பட்டு வந்தன. ஆனால் இப்போது விஞ்ஞானம் போய் வியாபாரம் மட்டுமே இருக்கிறது. எனவே மீண்டும் அந்த சடங்குகளை, உண்மையாகவே அந்த உயிருக்கு நன்மையளிக்கும் வண்ணம், செய்ய இருக்கிறோம். இதற்காகத்தான் ஈஷா சுடுகாடு!

ஈஷா சுடுகாடு பற்றிய தகவல்களுக்கு: 94425 66688, 94425 04646
ஈஷாவில் நடக்கும் காலபைரவ கர்மா பற்றிய விபரங்களுக்கு: 94433 65631, 94864 94865
மேலும் தொடர்புக்கு: 9442641563, 8903816461
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert