“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்!”

SONY DSC

காதல் இல்லாத திரைப்படங்களும், டூயட் பாடாத ஹீரோக்களும் இல்லையென்றே சொல்லலாம். உண்மையான காதல் என்று திரைப்படங்கள் கூறும் காதலை, கைதட்டி கண்ணீர்விட்டு ரசிக்கும் நாம், நிஜ வாழ்க்கையில் காதல் என்ற உணர்வை எந்த அளவிற்கு உணர்கிறோம்? தமிழ் பழமொழி சொல்வதுபோல், அறுபதே நாட்களில் முடிந்துவிடக் கூடியதா காதல்? சத்குருவின் வித்தியாசமான கண்ணோட்டம் இங்கே!

சத்குரு:

இந்த இடத்தில் ஆசை என்று காதலைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நீங்கள் ஒரு நபரைக் காதலிக்கிறீர்கள் என்றால், அறுபது நாளில் நிகழும் அவருடைய ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து உங்கள் காதல் மாறுவதில் அர்த்தமில்லை.
அப்பழுக்கில்லாத அன்பை மட்டுமே செலுத்துவதுதான் உண்மையான காதல். காதல் என்பது அன்பின் வடிவம். அதுதான் மனிதனை பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. தான் விரும்புபவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு அது. காதல் என்பது நிபந்தனைகள் அற்றது.

நீங்கள் ஒரு நபரைக் காதலிக்கிறீர்கள் என்றால், அறுபது நாளில் நிகழும் அவருடைய ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து உங்கள் காதல் மாறுவதில் அர்த்தமில்லை.

துடிப்பும் துள்ளலுமாக, சிரிப்பும் சந்தோஷமுமாக இருக்கும் பல காதலர்கள் திருமணம் செய்து கொண்டபின், அசுர வேகத்தில், களை இழப்பதற்குக் காரணம் என்ன? யாரைப் பற்றிய நினைப்பே ஆனந்தம் கொண்டு வந்ததோ, அவர்களின் அருகாமையே இப்போது எரிச்சலாக மாறுவது ஏன்?

காதல் வயப்பட்டிருந்தபோது, அந்த உணர்வு மட்டுமே மேலோங்கியிருந்தது. இதயம் மட்டுமே வேலை செய்தது. இருவர் வாழ்க்கையும் பிணைந்தபின், அங்கே எதிர்பார்ப்புகள் கூடிவிட்டன. ‘நான் இதைத் கொண்டு வருகிறேன்; நீ அதைக் கொண்டு வா’ என்ற வணிகம் நுழைந்துவிட்டது.

திருமணம் என்பது, இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை ஆனந்தமாக்கிக் கொள்ள ஏற்பட்ட அமைப்பு. அதை மறந்து, அடுத்தவரிடம் என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கணவன் மனைவி உறவு அமைந்தால், வாழ்க்கை கொந்தளிப்புகள் நிறைந்ததாகிவிடும். கோர்ட் வரை போகாவிட்டாலும், குடும்ப அளவிலேயே திருமணம் தோற்றுவிடும்.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இடையில் அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் விழுந்தாலும் காயப்படாமல் அறுபது நாளென்ன, அறுபது வருடங்களானாலும் சுகமாக மிதந்து பயணம் செய்ய முடியும்.

samcalplat@fickrஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert