மகாகவி பாரதியின் கவிதைகள் தமிழ் உணர்வுள்ள அனைவருக்குமே ஒரு மாபெரும் அனுபவமாகவே இருக்கும். சுதந்திர உணர்வு மட்டுமல்லாது, ஆன்மீக உணர்வையும், ஆழமிக்க உள்நிலை உணர்தலையும் தன் கவிதைகளால் வெளிப்படுத்திய மகாகவி, நம் சுப்பிரமணிய பாரதி! அவரது கவிதையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சத்குரு, யோகத்தின் அம்சத்தை பாரதி உணர்ந்திருப்பதை உறுதிசெய்கிறார்.