தனது குருவான மத்ஸ்யேந்திரநாத் மீது தான் கொண்ட தீவிர அன்பு, கோரக்நாத்தை பல சந்தர்ப்பங்களில் அனைத்து வழிமுறைகளுக்கும் அப்பாற்பட்ட வழிமுறைகளில் கொண்டுசேர்த்தது. அவரது தீவிரத்தை மட்டும் தன்னால் மடைமாற்ற முடிந்தால், தனது சீடருக்கு உலகத்தையே மாற்றியமைக்கும் திறன் இருப்பதை உணர்ந்த மத்ஸ்யேந்திரநாத், தொடர்ந்து அதை நெறிப்படுத்தினார். அப்படி ஒரு சம்பவம் இங்கே.