Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக அமைவது - நீங்கள் என்ன சேர்த்து வைத்தீர்கள், உங்கள் உடைமைகள் எவை என்பதை பொருத்து அல்ல - உங்கள் அனுபவம் எவ்வளவு ஆழமானது என்பதை பொருத்துதான்
உலகில் பெரும்பாலான மனிதர்கள் பிஸியாக ஒன்றும் இல்லை - அவர்கள் கவனமற்ற எண்ண ஓட்டத்தில் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.
உங்கள் பணி என்பது நீங்கள் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ள விஷயத்தை உருவாக்குவதாக இருக்கும்போது - பணியையும் வாழ்க்கையையும் சமப்படுத்தும் முயற்சி தேவைப்படாது - வாழ்வே பணியாகிறது, பணியே வாழ்க்கையாகிறது.
“எனக்கு தெரியவில்லை’ என்பது ஓர் மகத்தான சாத்தியம். ‘எனக்கு தெரியவில்லை’ என்று நீங்கள் பார்க்கும் போதுதான் - தெரிந்து உணர்ந்துகொள்ள ஒரு சாத்தியம் உருவாகிறது - அதற்கான நாட்டமும், தேடலும் எழுகிறது.
லாஜிக், அதாவது தர்க்க அறிவின் கட்டுப்பாடுகளுக்குள் அடைபட்டு செயல்படும்போது, வாழ்க்கை எனும் கூத்தில் ஒரு கோமாளியாகவே இருப்பீர்கள்.
இந்த குரு பௌர்ணமி நன்னாளில், உங்கள் உள்நிலை நலனுக்காக உறுதி கொள்ளுங்கள். சாதனா, தியானம் செய்து உங்கள் மனம் ஓர் அதிசயமாகும்படி செய்யுங்கள்.உங்கள் குருவின் அருள் உங்களுடன் உள்ளது.அன்பும் அருளும்
வளமான மண்ணில் மட்டுமே விவசாயம் செழிக்க முடியும் - வேறு எந்த வழியும் கிடையாது. மண்ணை மீளுருவாக்குவது, உலக உயிர்களுக்கெல்லாம் புத்துயிர் அளிப்பதாக அமையும்.
பரிபூரண நன்றியுணர்வில் ஒரே ஒரு கணம் இருந்தால், உங்கள் வாழ்க்கை மொத்தமாக மாறிட முடியும்.
நல்ல நோக்கங்கள் மட்டுமே போதாது. வேண்டிய பலனை விளைவிக்க, சரியான விழிப்புணர்வுடன் செய்யப்படும் சரியான செயல் அவசியம்.
வாழ்க்கை என்றாலே ஈடுபாடுதான். ஈடுபாடு இல்லை என்றால், அங்கு வாழ்வே கிடையாது.