Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
உண்மையாக இருப்பது ஒரு ஒழுக்கமோ, நெறிமுறையோ அல்ல. நீங்கள் இருக்கும் விதம், யோசிக்கும் விதம், செயல்படும் விதம், இவை ஒன்றோடு ஒன்று ஒத்திருப்பதை பற்றியது.
ஒப்பிட்டு பார்ப்பதன் அடிப்படையில் வரும் புரிதல் ஒருபோதும் உண்மையானது அல்ல - அது நிஜத்தை திரித்து பார்ப்பதாகும்.
நிபந்தனைகள் இல்லாத அன்பு என்று எதுவுமே இல்லை. எல்லா உறவுகளிலும் நிபந்தனைகள் இருக்கின்றன.
எல்லோரும் உங்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால், குறுகிப் போய்விடுவீர்கள். நம்பகத்தன்மை என்பது மிகவும் முக்கியம்.
முழு விழிப்புணர்வுடன் இருந்தால், நீங்கள் இருக்கக்கூடிய ஒரே இடம் - இந்த க்ஷணம் மட்டுமே.
உங்கள் குழந்தை முழுமையாக மலரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் அன்பான, ஆனந்தமான, அமைதியான மனிதராக மாறுங்கள்.
நீங்கள் யார், என்னவாக இருக்கிறீர்கள் என்பது தெய்வீகத்தின் ஒரு வெளிப்பாடுதான்.
நீங்கள் எடுக்க வேண்டிய முதல் படி - ‘என்ன நடந்தாலும், என் வாழ்க்கை என்னுடைய பொறுப்பு’ என்பதை உள்ளபடி பார்ப்பதுதான்.
இந்த பூமியில் இதுவரை நிகழ்ந்துள்ள அனைத்தையும், இப்போதும் உங்கள் உடல் ஞாபகத்தில் வைத்திருக்கிறது - உங்கள் உடல் இந்த பூமியின் ஒரு துளிதானே!
பாதுகாப்புகளை விட்டுவிட்டு இருக்க தயாராக இல்லை என்றால், நீங்கள் மாற்றத்தை அனுமதிக்கவில்லை. மாறாமலே இருக்கும் எதுவும் இறந்துபோனது போலதான்.
மற்றவர்களின் கர்மாவை பற்றி ஒருபோதும் பேச வேண்டாம் - உங்கள் கர்மாவிற்கு நீங்கள் பொறுப்பு எடுங்கள்.