1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. விவசாயிகளின் வருமானம் பெருக வேளாண்காடுகள் திட்டம்

விவசாயிகளின் வருமானம் பெருக வேளாண்காடுகள் திட்டம்

தற்போதைய காலகட்டத்தில் நீர் பற்றாக்குறையினால் விவசாயம் நலிவடைந்து வருகிறது. நம் நாட்டில் விவசாயி தற்கொலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையை மாற்ற சத்குரு அவர்கள் காவேரி கூக்குரல் என்னும் இயக்கத்தை துவங்கியுள்ளார். காவேரி பேசினில் மரங்கள் வளர்ப்பதன் மூலம் காவேரியை மீட்டு, வற்றாத ஜீவ நதியாக மீண்டும் காவேரியை பெருக்கெடுத்து ஓட செய்ய முடியும். மேலும், மரப்பயிர் வேளாண்மையால் விவசாயிகளின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். இதனால் காவேரி பேசின் விவசாயிகள் மரப்பயிர் வேளாண்மையில் ஈடுபட அறிவுறுத்தும் விழிப்புணர்வு வாகனப் பேரணியை சத்குரு அவர்கள் ஜுலை 31, 2019 அன்று 112 அடி ஆதியோகி முன்னிலையில் துவங்கி வைத்தார். விவசாயிகளுக்கு. வேளாண் காடு வளர்ப்பின் முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழகம் மற்றும் கர்நாடக கிராமங்களுக்கு 28 வாகனங்கள் செல்கின்றன. நீங்கள் மரம் நட: Tamil.CauveryCalling.org

video

Aug 21, 2019


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
சூரிய புயலால் மனிதர்களுக்கு நன்மையா? ஆபத்தா?
சூரிய பிழம்புகள் பூமியிலுள்ள அனைத்துயிர்களின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த சக்தியின் எழுச்சியை பயன்படுத்திக்கொண்டு ஒருவர் தன் ஆன்மீக வளர்ச்சியை வெகுவாக வேகப்படுத்த தன்னை எப்படி தயார்செய்துகொள்ள முடியும் என்றும் சத்குரு விளக்குகிறார்.
Feb 13, 2024
video  
இந்த ரகசியம் தெரிந்தால் வெற்றிலையை தினமும் சாப்பிடுவீங்க!
வெற்றிலை மற்றும் கொட்டைப் பாக்குகளின் முக்கியத்துவம், அவற்றின் மருத்துவ குணங்கள், நச்சுகளை நீக்கும் திறன் மற்றும் செரிமானத்தில் அவற்றின் பங்களிப்பு ஆகியவற்றை சத்குரு விளக்குகிறார். பாரம்பரிய சடங்குகளில் வெற்றிலை வைக்கப்படுவதன் காரணத்தையும், அவை எவ்வாறு ஒருவரின் உணர்திறனை மேம்படுத்த முடியும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
Feb 10, 2024
video  
அயோத்தி ராமர் கோவில் மக்களை பிரிக்குமா?
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.
Feb 9, 2024