1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. தேவாரம் பற்றி சத்குரு

தேவாரம் பற்றி சத்குரு

நம் தமிழ் கலாச்சாரம் பக்தியால் செதுக்கப்பட்டது. தங்கள் சுற்றத்தார்மீதும் குடும்பத்தினர்மீதும் மட்டுமின்றி, சக மனிதர்கள், விலங்குகள் மற்றும் வாழ்ந்த பூமிமீதும் பக்திமிக்கவர்களாய் தமிழர்கள் இருந்தனர். மிக அழகான பக்திநிலைகளில் தங்களுக்குள் வாழ்ந்த மகான்களின் ஆசியுடன், ஆழ்ந்த ஆன்மீக அனுபவங்களின் வெளிப்பாடாக உருவாகிய இலக்கியங்கள் தமிழ்நாட்டில் ஏராளம். தங்களைச் சுற்றியுள்ள உயிர்கள் அனைத்திற்கும் ஓர் அர்ப்பணிப்பாக வாழ்ந்த இந்த யோகிகள், முற்றிலுமாக கரைந்துபோவதையும் மாறுபட்ட வாழ்க்கை அனுபவத்தையும் ருசிப்பதற்கான வாய்ப்பினை இந்த காலங்களைக் கடந்த பொக்கிஷம் மூலம் நமக்கு வழங்குகிறார்கள். பக்தியின் சாரம் குறித்தும், போற்றிக் கொண்டாடப்பட்ட நாயன்மார்களான திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் குறித்தும், அமைதியாக தாக்கம் ஏற்படுத்திச் சென்ற பல்லாயிரம் யோகிகளில் சிலர் குறித்தும் சத்குரு இங்கு பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட தன்னைமறந்த பரவசநிலைகளை எட்டுவது நமக்கு எப்படி சாத்தியமாகும் என்பது குறித்தும் கூறுகிறார். தேவாரம், 1200 ஆண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் தோன்றிய பக்திப்பாடல்கள் ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் இயற்றிய சிவனைப் போற்றும் இப்பாடல்கள், தென்னிந்தியாவில் அப்போது பரவிய பக்தி இயக்கத்திற்கு சான்றாக விளங்குகின்றன. 'தேவாரம்', திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் இயற்றியுள்ள 6 பாடல்களின் தொகுப்பாகும். பக்திப் பெருக்கை வெளிப்படுத்தும் இப்பாடல்களை, இன்றைய உலகும் ரசித்து மகிழவேண்டும் என்ற முயற்சியில், சம்ஸ்க்ருதி மாணவர்களால் தனித்துவமான பாணியில் இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

video

Jan 28, 2020


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
சூரிய புயலால் மனிதர்களுக்கு நன்மையா? ஆபத்தா?
சூரிய பிழம்புகள் பூமியிலுள்ள அனைத்துயிர்களின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த சக்தியின் எழுச்சியை பயன்படுத்திக்கொண்டு ஒருவர் தன் ஆன்மீக வளர்ச்சியை வெகுவாக வேகப்படுத்த தன்னை எப்படி தயார்செய்துகொள்ள முடியும் என்றும் சத்குரு விளக்குகிறார்.
Feb 13, 2024
video  
இந்த ரகசியம் தெரிந்தால் வெற்றிலையை தினமும் சாப்பிடுவீங்க!
வெற்றிலை மற்றும் கொட்டைப் பாக்குகளின் முக்கியத்துவம், அவற்றின் மருத்துவ குணங்கள், நச்சுகளை நீக்கும் திறன் மற்றும் செரிமானத்தில் அவற்றின் பங்களிப்பு ஆகியவற்றை சத்குரு விளக்குகிறார். பாரம்பரிய சடங்குகளில் வெற்றிலை வைக்கப்படுவதன் காரணத்தையும், அவை எவ்வாறு ஒருவரின் உணர்திறனை மேம்படுத்த முடியும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
Feb 10, 2024
video  
அயோத்தி ராமர் கோவில் மக்களை பிரிக்குமா?
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.
Feb 9, 2024