முன்காலத்தில், சில யோகிகள் தன் மன பலத்தால் தொலைதூரத்தில் இருப்போருக்கு சில தகவல்களை பரிமாறினார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதைப் பற்றி பல சினிமாக்களிலும் சீரியல்களிலும் பார்த்திருப்போம். இது சாத்தியமா என்று பலருக்கும் கேள்வி எழுவதுண்டு. நமக்கு மட்டும் இல்லை, நம் நாட்டில் தலைசிறந்த இருதய மருத்துவர்களில் ஒருவரான திரு. தேவி ஷெட்டிக்கும் இக்கேள்வி எழ, மனதின் பலத்தை பற்றி விவரமாக விவரிக்கிறார் சத்குரு.
Subscribe