1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. சத்தம் இல்லாமல் உலகில் நடக்கும் பேரழிவு

சத்தம் இல்லாமல் உலகில் நடக்கும் பேரழிவு

பருவநிலை மாற்றம், கருத்து வேறுபாடு, சண்டைகள், எதிர்பார்த்திராத சமூக மாற்றங்கள் ஆகியவற்றை சமாளிக்க மனிதகுலம் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், இவை எல்லாவற்றைக் காட்டிலும் பெரிய அச்சுறுத்தலாய் உருவெடுக்கக்கூடிய பிரச்சினை பற்றியும், அடுத்த சில ஆண்டுகளில் சரியாக செயல்பட்டு அதை நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக மாற்றிக் கொள்வது எப்படி என்றும் உலகின் முன்னணி சுற்றுச்சூழல், பருவநிலை விஞ்ஞானிகள் சத்குருவுடன் கலந்துரையாடுகின்றனர். விருது பெற்ற விஞ்ஞானிகளின் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படம், உலகம் முழுவதும் மண் அழிந்து வருவதை சுட்டிக் காட்டுகிறது. இதனால் பூமியின் பல இடங்களில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதையும், இது ஏழை நாடுகளை மட்டுமல்ல வளமான நாடுகளையும் பாதிக்கும் என்றும் எடுத்துரைக்கிறது . மண் காப்போம் என்பது, வரவிருக்கும் மண் அழிவுப் பிரச்சினைக்கு ஒரு ஒருங்கிணைந்த, விழிப்புணர்வுடன் கூடிய தீர்வை கொண்டுவர சத்குரு உருவாக்கி இருக்கும் உலகளவிலான இயக்கம் #SaveSoil மண் காக்க இப்போதே செயல்படுங்கள்: http://savesoil.org

video

Jun 5, 2022


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
சூரிய புயலால் மனிதர்களுக்கு நன்மையா? ஆபத்தா?
சூரிய பிழம்புகள் பூமியிலுள்ள அனைத்துயிர்களின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த சக்தியின் எழுச்சியை பயன்படுத்திக்கொண்டு ஒருவர் தன் ஆன்மீக வளர்ச்சியை வெகுவாக வேகப்படுத்த தன்னை எப்படி தயார்செய்துகொள்ள முடியும் என்றும் சத்குரு விளக்குகிறார்.
Feb 13, 2024
video  
இந்த ரகசியம் தெரிந்தால் வெற்றிலையை தினமும் சாப்பிடுவீங்க!
வெற்றிலை மற்றும் கொட்டைப் பாக்குகளின் முக்கியத்துவம், அவற்றின் மருத்துவ குணங்கள், நச்சுகளை நீக்கும் திறன் மற்றும் செரிமானத்தில் அவற்றின் பங்களிப்பு ஆகியவற்றை சத்குரு விளக்குகிறார். பாரம்பரிய சடங்குகளில் வெற்றிலை வைக்கப்படுவதன் காரணத்தையும், அவை எவ்வாறு ஒருவரின் உணர்திறனை மேம்படுத்த முடியும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
Feb 10, 2024
video  
அயோத்தி ராமர் கோவில் மக்களை பிரிக்குமா?
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.
Feb 9, 2024