புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'அக்னி பரீட்சை' எனும் நேர்காணல் நிகழ்ச்சிக்காக ஊடகவியலாளர் திரு.கார்த்திகை செல்வன் அவர்கள் சத்குருவை சமீபத்தில் இணையம் வாயிலாக பேட்டி கண்டார். தமிழக கோயில்கள் அரசாங்கத்தின் பிடியிலிருந்து பக்தர்களின் கைகளுக்கு மாறவேண்டும் என்று சத்குரு சொல்வதற்கான காரணங்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கருத்தில் சத்குருவின் நிலைப்பாடு, பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட வேண்டுமென்று சத்குரு சொல்வது ஏன், அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்பு போன்ற பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்திற்கும் சத்குரு அளித்த விரிவான பதில்களை இந்த காணொளியில் காணலாம்!
Subscribe