தமிழ் மண்ணின் அடையாளம் நம் கோவில்கள். பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்மோடு பின்னிப்பிணைந்து இருந்தவை நம் கோவில்கள். இவை மனித நல்வாழ்விற்கான சக்தி மூலமாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், இசை, நாட்டியம், ஓவியம், இலக்கியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை உள்ளிட்ட அனைத்தையும் வளர்த்த நம் நாகரீகத்தின் தொட்டிலாய் விளங்கின. இத்துணை சிறப்பம்சம் தாங்கிய நம் கோவில்களின் இன்றைய நிலை என்ன? சித்தர்களும், முனிவர்களும், அரசர்களும், கலைஞர்களும், பக்தர்களும் பேணிக் காத்த நம் கோவில்களின் நிலை என்ன? பெரும்பாலான தமிழக கோவில்களின் நிலையின் முன்னோட்டமாய் இந்த காணொளியை வழங்குகிறோம்.
Subscribe