உண்மையில் தியானலிங்கம் என்ன செய்கிறது?
சென்ற வாரத்துடன் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய "மூன்று பிறவிக் கதை" என்னும் தொடர் நிறைவுக்கு வந்தது. நமது வாசகர்களிடம் பெருத்த வரவேற்ப்பை பெற்ற இந்தத் தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் வாசகர்களிடமிருந்து தியானலிங்கம் குறித்து சுவாரஸ்யமான பல கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன. அவற்றில் சில கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்களை இந்த வாரம் உங்களுக்காக தொகுத்தளிக்கிறோம்.
சென்ற வாரத்துடன் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய "மூன்று பிறவிக் கதை" என்னும் தொடர் நிறைவுக்கு வந்தது. நமது வாசகர்களிடம் பெருத்த வரவேற்ப்பை பெற்ற இந்தத் தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் வாசகர்களிடமிருந்து தியானலிங்கம் குறித்து சுவாரஸ்யமான பல கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன. அவற்றில் சில கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்களை இந்த வாரம் உங்களுக்காக தொகுத்தளிக்கிறோம்.
சத்குரு:
ஒரு மலரை சிறிது நேரம் கையில் வைத்திருந்து என்னால் அதற்கு சக்தியேற்ற முடியும். ஆனால் சற்று நேரத்திலேயே அந்த சக்தி விரயமாகிவிடும். ஆனால், லிங்கம் என்ற அமைப்பு அப்படி அல்ல. அது சக்தியை நெடுங்காலத்துக்குத் தேக்கி வைத்துக்கொள்ள வல்லது.
அதனால்தான் பலவித சக்திகளைத் தேக்கி வைக்க பலவித லிங்கங்கள் உருவாக்கப்பட்டன. ஐம்பூதங்களையும் குறிக்கும் லிங்க வடிவங்கள் தென்னிந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டன.
யோகாவில், உடலில் உள்ள ஐம்பூதங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் முறையை பூதசுத்தி என்போம். இதற்கான ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் லிங்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து, சக்தி மையங்களாகப் பல கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டன. லிங்க அமைப்பும் கோயில் அமைப்பும்கூட விஞ்ஞானப்பூர்வமானவை.
800 ஆண்டுகளுக்கு முன்னால், மக்களுக்கு இந்த விஞ்ஞானத்தில் ஆர்வம் குறைந்தது. விஞ்ஞானத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உணர்ச்சி வேகத்தில் பல ஆலயங்களை எழுப்பினர்.
தியானலிங்கம் அவற்றிலிருந்து மாறுபட்டது. விஞ்ஞான அடிப்படையில் மனித உடலில் உள்ள ஏழு சக்திச் சக்கரங்களையும் உயிர்ப்பிக்கும் சக்தியுடன் தியானலிங்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இங்கு மனிதன் அவனுடைய மிக உன்னத நிலைக்கு உயர்வதற்கான விதை விதைக்கப்படுகிறது.
Subscribe
சத்குரு:
தியானலிங்கத்தை ஒரு மனிதராக, ஒரு குருவாக நாம் பார்க்கிறோம். நிர்வாணம் என்பது நம் கலாச்சாரத்தில் புதிதல்ல. ஆனால், தற்போது நிர்வாணம் என்பது மக்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். எனவே, தியானலிங்கத்திற்கும் குறைந்தபட்ச ஆடையாக கோவணம் அணிவித்திருக்கிறோம்.
சத்குரு:
வனஸ்ரீயை பிரதிஷ்டை செய்துள்ள முறை அப்படிப்பட்டது. ஒரு உருவம் முப்பரிமாணத்தில் இருக்கும்போது பிரதிஷ்டை செய்வதைவிட இரு பரிமாணத்தில் இருக்கும்போது பிரதிஷ்டை செய்வது கடினம். இரு பரிமாணத்தில் இருக்கும்போது,தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரதிஷ்டை செய்ய வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அது தொடர்ந்து முழு சக்திநிலையுடன் இருக்கும். அதனால்தான் வனஸ்ரீக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் பிரதிஷ்டை செய்கிறோம். தியானலிங்கத்திற்கு செய்தது போல் ஒருமுறை மட்டும் பிரதிஷ்டை செய்தால் போதாது. ஏனெனில், மந்திரம் போன்ற வேறு முறைகளும் இங்கு இல்லை. எனவே வருடத்திற்கு ஒரு முறை அல்லது குறைந்தது 2 வருடத்திற்கு ஒரு முறை பிரதிஷ்டை செய்ய வேண்டியிருக்கிறது.
சத்குரு:
நான் ஒரு நாள் தியானலிங்க வளாகத்திற்குள் நுழைந்தபோது, கிட்டத்தட்ட என் மூச்சு அப்படியே நின்றுவிடும்போன்ற தீவிரத்துடன் அதன் சக்தி இருந்தது. எனக்கு ஏற்பட்ட அந்த அனுபவம், தியானலிங்கத்தில் நிலவும் அபரிமிதமான சக்தி பலருக்கும் மிக அதிகப்படியானதாக இருக்கும் என்று எனக்கு உணர்த்தியது. எனவே, தியானலிங்கத்தை சுற்றியுள்ள சக்திநிலையில் சிறிது இடையூறு செய்ய நினைத்தேன். அதனால், ஒரு நாளில் 2 முறை சப்தத்தின் மூலம் ஆராதனை செய்வதாகவும், அதேநேரத்தில் தியானலிங்கத்தை சுற்றியுள்ள சக்திநிலைக்கு சிறிது இடையூறு ஏற்படும்படியும் நாத ஆராதனையை நாம் உருவாக்கினோம். ஒரு வேளை இந்த இடத்தில் 3 நாள் யாரும் போகாமல் எந்த அசைவும் கோவிலுக்குள் இல்லாமல் இருந்து, நீங்கள் போனால் உங்கள் மூச்சு அப்படியே நின்றுவிடும் அளவிற்கு சக்தி தீவிரமாக உள்ளது. அந்த அளவுக்கு அங்குள்ள நிச்சலனம் சக்திவாய்ந்ததாக இருக்கிறது.
சத்குரு:
என் குருவின் விருப்பமில்லாமல் என்னுடைய ஒற்றை சுவாசம் கூட நிகழ்வதில்லை.
சத்குரு:
தியானலிங்கத்துடன் நேரம் செலவிட வரும்போது, நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணியாக வருவதில் எனக்கு விருப்பமில்லை. தியானத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்காகத்தான் அந்த மாபெரும் சந்நிதானம் அமைக்கப்பட்டுள்ளது. உங்களிடம் எந்தக் காணிக்கையையும் எதிர்பார்க்கவில்லை. தியானத்தின் மேன்மையை உணர உங்களையே ஒரு காணிக்கையாகக் கொண்டு வாருங்கள் என்றுதான் சொல்கிறேன்.
ஒரு புகைப்படக்காரராக வருவதை விட வேறு சிறப்பான நோக்கங்களுடன் நீங்கள் அங்கே வருவதைத்தான் விரும்புகிறேன். இன்னொரு விஷயம், அங்கே தியானத்தில் ஈடுபட்டிருப்பவர்களை உங்கள் கேமிராவின் ஒளியும் ஒலியும் கலைக்கக்கூடும்.
புகைப்படம் எடுத்தால், லிங்கத்தின் சக்தி குறைந்துவிடும் என்று நினைக்கவில்லை. லட்சக்கணக்கில் புகைப்படங்கள் எடுத்தாலும் அதையெல்லாம் தாண்டி தியானலிங்கம் சக்தி வாய்ந்ததாக இயங்கும். தியானலிங்கத்தின் புகைப்படங்கள் வேண்டுமென்றால், சிறப்பான புகைப்படக்காரர்கள் கொண்டு நாங்கள் எடுத்துள்ள புகைப்படங்களை வாங்கிச் செல்லுங்கள். அதன் மூலம் கிடைக்கும் வருவாய் வளாகத்தின் மின்சாரக் கட்டணத்துக்காவது உதவும். தியானலிங்கத்துக்கு வருகையில், ஏதோ நினைவுச் சின்னத்துக்கு வந்திருப்பதாக நினைத்து விடாதீர்கள். அங்கே உயிருள்ள ஒரு குரு பிரமாண்டமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.