சிவா தென்னிந்தியாவுக்கு வந்தது, வெள்ளையங்கிரியில் தங்கியது, அதை எப்படி தென்னாட்டின் கைலாய மலையாக மாற்றினார் என்ற கதையை சத்குரு சொல்கிறார்.

சத்குரு: சிவாவை எப்பொழுதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி என்று சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிவாவைப் பற்றி என்ன சொன்னாலும், அதன் நேர் எதிராகவும் இருக்கக் கூடியவர். இந்த உணர்ச்சிகளை அடக்கும் யோகி, ஒரு முறை அதீத காதல் வயப்பட்டார்.

புண்யாக்ஷி என்ற தீர்க்கமான, அருள் வாக்கு சொல்லும் ஒரு பெண் இந்திய தீபகர்ப்பத்தின் தென்முனையில் வசித்து வந்தாள். அவளுக்கு சிவனை மணம் புரிந்து அவன் மனைவியாக வேண்டும் என்ற ஆவல் கொண்டு, தீர்மானமும் செய்து விட்டாள் அவனைத்தான் மணம் புரிவேன், வேறு ஒருவரையும் மணம் புரிய மாட்டேன் என்று. புண்யாக்ஷி அந்த நோக்கத்துடன், சிவனை தன் பால் ஈர்க்க தன் தகுதிகளை அதிகமாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்து, தீர்க்கமாக முனைந்தாள். ஒருமுனைப் பாட்டுடன் வேறு எதிலும் கவனத்தை சிதர விடாமல், ஒவ்வொரு நொடியும் சிவனையே நினைத்து வாழ்ந்தாள். அவளுடைய பக்தி நாளுக்கு நாள் எல்லையைத் தாண்டியது, அவள் தவமும் தீவிரமடைந்தது.

அவள் காதலின் தீவிரத்தைப் பார்த்து, சிவாவின் காதலும், கருணையும் கிளர்ந்து எழுந்தது. அவனும் காதல் கொண்டு அவளை மணக்க தன் விருப்பத்தை தெரிவித்தான். ஆனால் புண்யாக்ஷி இருந்த சமூகமோ கவலை கொண்டது. அவள் கல்யாணம் செய்து கொண்டால் அவளுடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்லும் ஆற்றல் போய் விடுமோ என்றும் அவர்களைக் காப்பாற்றி வழி நடத்திச் செல்ல யாரும் இல்லாமல் போய் விடுவார் என்று பயந்தனர். ஆதலால் அவர்களால் முடிந்த வரை இந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் புண்யாக்ஷியின் முடிவையும் அவள் சிவ-பக்தி இரண்டையும் யாராலும் மாற்ற முடியாது.

சிவா மிக காதலுடன் பதிலளித்தான், திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது. தீபகர்பத்தின் தென்முனைக்கு அவன் கிளம்பினான். ஆனால் அவளுடைய சமூக மக்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவாவிடம் “ஓ சிவா, நீ அவளை மணந்தால், எங்களுக்கு என்ற உள்ள தீர்க்கமாக பார்க்கக் கூடிய ஆற்றல் படைத்த ஒரே ஒரு ஆளையும் நாங்கள் இழந்து விடுவோம். அதனால் அவளை மணக்க வேண்டாம்” என்று முறையிட்டார்கள். ஆனால் சிவா அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், கல்யாண ஏற்பாட்டுகளை தொடர்ந்து செய்தார்.

அந்தச் சமூகத்திலுள்ள பெரியவர்கள் “உனக்கு இப்பெண்தான் மணப்பெண்ணாக வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் உண்டு. நீ அதற்காக ஒரு விலை தர வேண்டும்” என்று அவனிடம் கூறினர்.”

“மணப்பெண் விலை என்றாலென்ன? அது என்னவாக இருந்தாலும் நான் கொடுக்கிறேன்” என்று சொன்னான்.”

அவர்கள் புண்யாக்ஷிக்காக மூன்று பொருள்களை மணப்பெண் விலையாக கேட்டனர் – “கணு இல்லாத கரும்பு, நரம்பில்லாத வெற்றிலை மற்றும் கண் இல்லாத தேங்காய் – இந்த மூன்று பொருள்களும்தான் அந்த விலை” என்றனர்.”

இந்த பொருள்களெல்லாமே இயற்கையானவை அல்ல. கரும்பு கணு இல்லாமல் இருக்காது, நரம்பு இல்லாமல் வெற்றிலை விளையாது, கண்கள் இல்லாமல் தேங்காய் இருக்காது. கொடுக்கவே முடியாத மணப்பெண் விலை. கல்யாணத்தை நிறுத்த சிறந்த வழி.

சிவா புண்யாக்ஷியின்பால் அதீத காதல் கொண்டதனால், எப்படியாவது அவளை மணக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். தனக்குத் தெரிந்த மாய மந்திரங்களை உபயோகித்து, இயற்கைக் கட்டுபாட்டை தாண்டி இந்த மூன்று பொருள்களை உருவாக்கினான். இயற்கையின் அடிப்படை நெறிமுறைகளை, அந்த இயலாத, அநியாயமாக கேட்கப்பட்ட மணப்பெண்-விலையை கொடுப்பதற்காக அவன் உடைத்தான்.

சிவா புண்யாக்ஷியின்பால் அதீத காதல் கொண்டதனால், எப்படியாவது அவளை மணக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். தனக்குத் தெரிந்த மாய மந்திரங்களை உபயோகித்து, இயற்கைக் கட்டுபாட்டை தாண்டி இந்த மூன்று பொருள்களை உருவாக்கினான். இயற்கையின் அடிப்படை நெறிமுறைகளை, அந்த இயலாத, அநியாயமாக கேட்கப்பட்ட மணப்பெண்-விலையை கொடுப்பதற்காக அவன் உடைத்தான். கேட்டதை கொடுத்து முடித்த பின், அவன் திருமணத்திற்காக நடையை கட்டினான்.

ஆனால் அந்த சமூக பெரியவர்களோ மேலும் ஒரு நிபந்தனையை விதித்தனர் “நாளை காலை சூரிய உதயத்திற்கு முன் கல்யாணம் முடிந்து இருக்க வேண்டும். அப்படி கால தாமதம் ஆனதென்றால் கல்யாணம் நடக்க முடியாது” என்றனர்.

இதைக் கேட்டவுடன் சிவா தென்முனையை நோக்கி தனது ப்ரயாணத்தை துரிதப் படுத்தினான். அவன் புண்யாக்ஷியை அடைந்து விட வேண்டும் என்று வேகமாக நடந்தான். சமூக பெரியவர்களோ இவன் எல்லா வித செய்ய முடியாத நிபந்தனைகளைக் கூட முறியடித்து விடுவான் என்றும், புண்யாக்ஷியை மணமுடிப்பான் என்றும் கவலைப் பட்டனர்.

சிவா தன் ப்ரயாணத்தை வேகமாக தொடர்ந்து, கல்யாணம் நடக்க இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்த சுசீந்திரம் என்ற ஊரை வந்தடைந்தான். சூரிய உதயம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுக்கு தான் தோல்வி அடைவதை நம்ப முடியவில்லை. ஆனால் இந்த விளையாட்டோ அந்த சமூக பெரியவர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட செயற்கையான சூரிய உதயம். ஒரு பெரிய கற்பூர மலையை உண்டு பண்ணி அதை எரிய விட்டார்கள். அந்த கற்பூர மலை தீவிரமாக, ஜகஜோதியாக எரிந்து, சிறிது தூரத்திலிருந்து பார்த்த பொழுது சிவாவுக்கு அது சூரியன் உதயமாவது போல் தெரிந்தது. அவன் தன் குறிகோளில் தோல்வி அடைந்து விட்டது புரிந்தது. மிக அருகில் வந்தும் அவனால் மணமேடையை அடைந்து புண்யாக்ஷியை கரம் பிடிக்க முடியாமல், செயற்கையாக சூரிய உதயத்தை உருவாக்கி அவனை ஏமாற்றி விட்டனர்.

இங்கு புண்யாக்ஷியோ தனது திருமணத்தை நடத்தாமல் இருக்க தம் சமூகம் செய்யும் சூழ்ச்சிகளை அறியாமல் சிவனுடன் தனது திருமணத்திற்கு பிரமாண்டமாக தயார் செய்து கொண்டிருந்தாள். இயற்கையாக சூரிய உதயத்தின் கீற்று கீழ்வானத்தில் அதிகரிக்க , அவளுக்கு சிவன் வரப்போவதில்லை என்று தோன்றியது. அவள் சீற்றம் கொண்டாள். கொண்டாட்டத்திற்காக தயார் செய்து வைத்திருந்த உணவு நிறைந்த பாத்திரங்களை தள்ளி உடைத்தாள்; கோபத்தில் நாட்டின் எல்லைக்குச் சென்று நின்று கொண்டாள். தேர்ந்த ஒரு யோகினியாகையால் அங்கு நின்றபடியே தன் உயிரை நீத்தாள். இன்றும் அந்த இடம் கன்யாகுமரி என்ற பெயரால், மிகப் பிரபலமாக உள்ளது.

மரபுப்படி எந்த ஒரு இடத்திலும் சிவா ஒரு சில காலம் தங்கினாரோ அந்த இடத்தை கைலாயம் என்று அழைத்தனர். அதனால் இந்த மலையை தென்னிந்தியாவின் கைலாயம் என்று அழைத்தனர்.

சிவா தான் புண்யாக்ஷிக்கு கேடு விளைவித்ததாக எண்ணி, ஏக்கம் மிகுந்து, தன்னையே வெறுத்தான். திரும்ப வந்த வழியே நடக்க ஆரம்பித்தான். அவனுள் கோவம் கொப்பளித்துக் கொண்டிருந்ததால், ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள நினைத்தான். இந்த வெள்ளையங்கிரி மலையில் ஏறி அதன் முகட்டில் அமர்ந்து கொண்டான். அவன் ஆனந்தமாகவோ அல்லது தியானத்திலோ அமரவில்லை, ஒருவித கையாலாகத தனத்திலும், கோபத்திலும் அமர்ந்தான். அவன் அங்கு சில காலம் தங்கியிருந்த்தால் அந்த மலை அவனுடைய சக்தியை கிரகித்துக் கொண்டதால், இன்றும் இந்த மலை மற்ற மலைகளை விட வேறுபட்டே இருக்கிறது.

மரபுப்படி சிவா எந்த இடத்திலும் ஒரு சில காலம் சேர்ந்தார்ப்போல் தங்கினால் அந்த இடத்தை கைலாயம் என்று அழைத்தனர். ஆகையால் இந்த மலையை தென்னிந்தியாவின் கைலாயம் என்று அழைக்கின்றனர். இதன் உயரம், நிறம் மற்றும் பரிமாணம் இமாலயத்தில் உள்ள கைலாயத்தைப் போல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் வீரியத்தில், அழகில், மற்றும் புனிதத் தன்மையில் இது சற்றும் குறைந்தது இல்லை. பல ஆயிரக் கணக்கான வருடங்களாக பல ரிஷிகள், யோகிகள் மற்றும் ஞானிகள் இந்த மலையில் நடந்து இருக்கிறார்கள். இந்த வெள்ளையங்கிரி மலை பல ஞானிகளின் ஆச்சரியகரமான வேலைகளைப் பார்த்திருக்கிறது. கடவுள்களையே பொறாமை கொள்ள வைக்கும் பல மனிதர்கள் மிக்க அருளுடனும், கண்ணியத்துடனும் இந்த மலைகளில் நடந்திருக்கிறார்கள். இந்த பிரமாதமான உயிரினங்கள் தாம் உணர்ந்த ஞானத்தை உள் வாங்கிக் கொள்ளுமாறு இந்த மலைகளில் விட்டுச் சென்றுள்ளனர் – அவை எங்கும் தொலைந்து போகவே முடியாது.