மஹாசிவராத்திரியின் முக்கியத்துவங்கள்
மஹாசிவராத்திரி சிவனுக்கான ஓர் இரவு. இந்திய ஆன்மீக நாட்காட்டியில் இந்நாள் மிக சிறப்பு வாய்ந்தது! மஹாசிவராத்திரியின் சிறப்புகளையும், ஒருவர் இந்நாளை எவ்விதத்தில் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதையும் சத்குரு விளக்குகிறார்!
மஹாசிவராத்திரியின் உன்னதம்
சத்குரு: இந்திய பாரம்பரியத்தில், ஒரு காலத்தில், வருடம் 365 நாட்களும் கொண்டாட்டமாக இருந்தது. அதாவது அவர்களுக்கு கொண்டாட்டத்திற்கு எதோ ஒரு சாக்கு வேண்டி இருந்தது. ஒவ்வொரு காரணத்திற்கு, ஒவ்வொரு குறிக்கோளுடன் 365 கொண்டாட்டங்களை உருவாக்கினார்கள். வரலாற்றுப் புகழ்களை கொண்டாடுவது, வெற்றிகளை கொண்டாடுவது, அல்லது சில நிகழ்வுகளை கொண்டாடுவது – அதாவது அறுவடை செய்வது, விதைப்பது மற்றும் அறுப்பது என்று எல்லாவிதமான நிகழ்வுகளையும் ஒரு கொண்டாட்டமாகவே பார்த்தார்கள். ஆனால் மஹாசிவராத்திரி வேறு விதமான முக்கியத்துவம் வாய்ந்தது.
நிலவின் சுழர்ச்சிக் கணக்கில் ஒவ்வொரு 14ம் நாளும் அல்லது அமாவாசைக்கு முந்தின தினத்தை சிவராத்திரி என்று அழைத்தனர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளிலேயே மாசி மாத்த்தில் (ஃபிப்ரவரி-மார்ச் மாதத்தில்) வரும் நாளான மஹா சிவராத்திரி ஆன்மீக பயிற்சிகளுக்கு மிகவும் உகந்த நாளாகும். இந்த இரவில் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர் சக்தியை மேல் நோக்கி எழும்பச் செய்கிறது. இன்நாளில் இயற்கை தானாகவே ஒருவரை ஆன்மீக பயிற்சியின் உச்ச நிலைக்கு முன்னேர ஒத்துழைக்கிறது. இதை புரிந்து கொண்ட்தாலும், இதை மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்திற்க்கு பயன்படும் வகையில் இந்த கலாசாரத்தில் இந்த நாளை இரவு முழுவதுமான ஒரு கொண்டாட்டமாக உருவாக்கினார்கள். இந்த முழு இரவு கொண்டாட்ட்த்தின் அடிப்படை நோக்கம் என்னவென்றால் – இயற்கையாக மேலெழும்பும் சக்தியை தடையின்றி மேல் நோக்கி செல்ல நமது முதுகுத் தண்டை நேரே வைத்திறுப்பது முக்கியம் என்று வலியுறுத்தவே – இரவு முழுவதும் முழித்திருக்க வேண்டும்.
மஹாசிவராத்திரி ஆன்மீக பாதையில் உள்ளவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்து. குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்களுக்கும், உலகில் சாதிக்க விரும்பவர்களுக்கும் இது முக்கியம். குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் மஹாசிவராத்திரியை சிவாவின் கல்யாண நாளாக கொண்டாடுவார்கள். உலகில் சாதிக்க நினைப்பவர்கள் இந்த நாளை எதிரிகளை சிவா வென்ற நாளாக நினைக்கிறார்கள்.
ஆனால் எல்லாவற்றையும் துறந்தவர்கள் இந்த நாளில் சிவா கைலாச பர்வதத்துடன்.ஒன்றான நாள் என்கின்றனர். அசைவில்லாமல் ஒரு மலையைப் போல மாறினார். யோக கலாசாரத்தில் சிவாவை ஒரு கடவுளாக வழிபடுவதில்லை, அசைவில்லாமல் ஒரு மலையைப் போல மாறினார். யோக கலாசாரத்தில் சிவாவை ஒரு கடவுளாக வழிபடுவதில்லை, அவரை ஆதி குருவாக – ஞானத்தை பகிர்ந்த முதல் குருவாக எண்ணப்படுகிறார். பல ஆயிரக்கணக்கான வருடங்கள் தியானத்திலிருந்த பின் அவர் அசைவற்றவரானார். அந்த நாள் சிவராத்திரி ஆகும். எவ்வித இயக்கமும் அல்லாமல், அசைவற்றவரான நாள் ஆனதால், ஞானிகள் சிவராத்திரியை அசைவில்லாமல் இருக்கும் நாளாக பார்த்தனர்.
மரபு வழி கதைகளைத் தள்ளி வைத்து விட்டு பார்த்தால், யோக கலாசாரத்தில் ஒரு ஆன்மீக தேடுதல் உள்ளவருக்கு இந்த நாள் சாத்தியங்களை அதிகமாக்குகிறது என்பதால்தான் இது முக்கியமான ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது. நவீன விஞ்ஞானம் பல நிலைகளைத் தாண்டி இன்று எதை எல்லாம் நாம் உயிர்த்தன்மை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறோமோ, எதை நாம் பொருள் தன்மை என்றும் வாழ்தல் என்றும் புரிந்து கொண்டிருக்கிறோமோ, எதை பிரபஞ்சம் என்றும் பால் மண்டலம் என்றும் அறிந்திருக்கிறோமோ, எல்லாமே பல கோடி விதங்களில் ஒரே சக்தியின் வெளிப்பாடுதான்.
ஒவ்வொரு யோகியும் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தவர்கள். யோகி என்றாலே பிரபஞ்சத்துடன் ஒன்றானவன் என்று பொருள். நாம் யோகா என்று கூறும் பொழுது நாம் எதோ ஒரு பயிற்சியையோ அல்லது செய்கையையோ குறிப்பிடவில்லை. எல்லையில்லா தன்மையை உணர வேண்டும் என்ற ஏக்கம், பிரபஞ்சத்துடன் ஒன்றி விட ஏக்கம் – இதுதான் யோகா. மஹாசிவராத்திரியின் இரவு ஒரு மனிதனுக்குள் இந்த உணர்வை உருவாக்குவதில் உதவுகிறது.
சிவராத்திரிதான் மாதத்தின் மிக இருளான நாள். சிவராத்திரியை மாதாமாதம் கொண்டாடுவதும், மஹாசிவராத்திரியை அந்த ஒரு நாள் கொண்டாடுவது நாம் இருளை கொண்டாடுவது போலாகும். தர்க ரீதியான ஒரு மனம் வெளிச்சத்தையே நாடும். ‘சிவா’ என்ற வார்த்தையின் பொருள் என்னவென்றால் ‘எது இல்லையோ அது சிவா’. ‘எது இல்லையோ அது’ என்றால்,கண்ணைத் திறந்து பார்தோமானால், உங்கள் பார்வை சிறியதாக இருந்தால், நிறைய படைப்பைப் பார்ப்பீர்கள். உங்கள் பார்வை பெரிய விஷயங்களை நோக்கி இருந்தால் ப்ரபன்சத்தின் மிகப் பெரிய இருப்பு வெற்று இடம்தான். நாம் பால்-மண்டலம் என்று சொல்லும் ஒரு சில இடங்களில் நம் கவனம் செல்கிறது, ஆனால் அந்த பரந்த வெற்றிடம் அவைகளை தம் இடத்தில் பிடித்து வைத்திருப்பதை யாரும் கவனிப்பதே இல்லை. இந்த வெற்றிடம், இந்த வரையரையற்ற வெற்றிடமே சிவா என்பதாகும். எல்லாம் வெற்றிடத்திலிருந்து உருவாகி வெற்றிடத்திற்கே போய் சேர்கிறது என்று இன்று நவீன விஞானமும் நிரூபித்திருக்கிறது. இந்த அடிப்படையில்தான் சிவா – பரந்த வெறுமை அல்லது ஒன்றுமில்லாமையைத்தான் நாம் கடவுள் – மகாதேவா என கூறுகிரோம்.
உலகிலுள்ள எல்லா வித மதங்களிலும் சரி, எல்லா விதமான கலாசாரத்திலும் சரி – எதிலும் இருப்பது, எல்லாவற்றையும் தாண்டியது இறைத்தன்மை – என்றே பேசப்படுகிறது. எல்லாவற்றையும் தாண்டியது என்று ஒன்றை சொல்ல வேண்டுமானால் அது இருள் தன்மை, ஒன்றுமில்லாதது அல்லது வெற்றிடம் என்றுதான் சொல்ல முடியும். பொதுவாக மக்கள் தன் நலனைத் தேடும் பொழுது, தெய்வீகத்தை ஒரு வெளிச்சம் என்று கூறுவார்கள். ஆனால் எப்பொழுது மக்கள் தன்னலத்தை தாண்டி, வாழ்விலிருந்து முக்தி பெற வேண்டும், தான் வணங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வத்தில் கரைந்து விட வேண்டும் எனவும், அந்த கரையும் தன்மையை நாடுகிற பொழுது அந்த தெய்வீகத்தை நாம் ‘ஒன்றுமில்லாத தன்மை-இருள்’ என்போம்.
வெளிச்சமென்பது மனத்தில் ஒரு சிறு நிகழ்வு. வெளிச்சம் என்பது எல்லையில்லாத்து அல்ல, அது எப்பொழுதுமே ஒரு எல்லைக்குள்தான் சாத்தியம் ஏனென்றால் அது ஒரு எல்லையில் ஆரம்பித்து முடிந்தும் விடும். ப்ரபன்சத்திலேயே வெளிச்சத்தின் மூலம் என்பது சூரியன். அந்த சூரிய ஒளியை கூட நம் கையினால் தடுத்து ஒரு கரிய நிழலை உண்டாக்கலாம்.
ஆனால் இருள் எல்லாவற்றையும் தன்னுடன் அணைத்துக் கொள்ளக்கூடியது. உலகில் பக்குவப்படாத மூளையுள்ளவர்கள் இருளை எப்பொழுதுமே அரக்கன் என்றும் சைத்தான் என்றும் கூறியது. எப்பொழுது நாம் தெய்வீகத்தை எல்லாம் என்று கூறினோமோ, நிச்சயமாக தெய்வீகம் என்பது இருள் தன்மையையும் சேர்த்துதானே, ஏனென்றால் இருள் எல்லாவற்றையும் ஊடுருவக் கூடியது. எங்கும் நிறைந்தது. அதற்கு எதிலிருந்தும் ஆதரவு தேவையில்லை. வெளிச்சம் ஏதோ ஒரு மூலப்பொருளை எரித்து அதிலிருந்து வருகிறது. அதற்கு ஆரம்பம்- முடிவு இரண்டுமே உண்டு. ஆனால் இருளுக்கு மூலம் தேவையில்லை. அதுவே மூலம். அது எங்கும்,எதிலும், எல்லா இட்த்திலும் இருக்க்க் கூடியது. ஆகையால் சிவா என்னும் பொழுது – இந்த பரந்த எல்லையில்லா தன்மையே அது. இந்த எல்லையில்லா தன்மையின் மடியில்தான் படைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த எல்லையில்லா மடியையே நாம் சிவா என்று கூறுகிறோம்.
இந்திய கலாசாரத்தில், பழமையான வழிபாட்டு முறைகள் எல்லாம் தன்னை காப்பாற்றுவதற்கோ, எதிலிருந்தோ தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கோ அல்லது எதையோ பெருவதற்கோ, ஏற்படுத்தப் படவில்லை. எல்லா வழிபாடுகளும் “கடவுளே, என்னை அழித்து, என்னையும் உன்னை மாதிரி மாற்று” என்றுதான் இருந்தன.
ஆகையால் சிவராத்திரி – மாதத்தின் இருள் மிகுந்த ராத்திரியாகையால் – ஒருவர் தனது எல்லைகளை தாண்டுவதற்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு விதையாக - படைப்பின் மூலமாக இருக்கும் அந்த எல்லையில்லா தன்மையை உணரவும் ஒரு வாய்ப்பாகும். படைப்பின் மூலமாக இருக்கும் அந்த எல்லையில்ல தன்மையை ஒவ்வொரு மனிதனும் உணர, மஹாசிவராத்திரி ஒரு நல்ல வாய்ப்பு, ஒரு சாத்தியக்கூறாக இருக்கிறது.
ஒரு பக்கம் பார்த்தால் சிவா அழிப்பவர், மற்றொரு பக்கம் அவர் கருணை மிக்கவர். அவரை கொடுக்கும் வல்லமை படைத்தவர் என்றும் சொல்வார்கள். யோக கலாசாரத்தில் சிவாவின் கருணையைப் பற்றி நிறைய கதைகள் சொல்வார்கள். அவர் கருணையை வெளிக்காட்டும் வழிகள் எல்லாமே நம்பதற்கரிய, ஆச்சரியகரமாக இருக்கும். ஆகையால் மஹாசிவராத்திரி பெருதலுக்குரிய இரவு.
நீங்கள் அந்த அகண்ட எல்லையில்லா தன்மையை உணராமல் இந்த இரவை தாண்டக்கூடாது என்பதுதான் எனது ஆசையும், ஆசியும் ஆகும். இந்த இரவு உங்களுக்கு வெரும் விழிப்புடன் இருக்கும் இரவாக இல்லாமல், விழித்தெழும் இரவாக இருக்க வேண்டும்.