ப்ரஹலாத் கக்கர் – இந்திய விளம்பர உலகத்தின் முண்ணனியில் இருக்கும் இவர் சத்குருவும், இன்னர் இஞ்சினியரிங்கும் எப்படி தன் வாழ்வின் அனுபவங்களை உரு மாற்றியது என்பதை பகிர்ந்து கொள்கிறார்.

கடவுளின் அம்சம்


இயற்கையிலேயே நான் பணிவில்லாத, எதிலும் நம்பிக்கையில்லாத, எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் ஒருவன். அரைகுறை மனத்துடன் அதே சமயத்தில் அறிய ஆர்வமுள்ள ஒரு மனநிலையில் நான் இன்னர் இஞ்சினியரிங்கில் பங்கேற்க சத்குருவின் அழைப்பை – அவரைப் பற்றி ஏதும் தெரியாமலேயே - ஏற்றுக் கொண்டேன். மூன்று நாட்கள் முழுமையாக தியானம் செய்வதைப் பற்றி கற்பனை செய்தது கூட இல்லை. ஆனால் இவரைப் பற்றி அறிய ஆர்வமாக இருந்தது. அவர் பேசும் அந்த செயல்முறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்ததாலும், அந்த வார இறுதியில் வேறு ஒன்றுமில்லாததாலும், கலந்து கொண்டேன்.

ஆனால் என்னுள் அழிக்க முடியாத, வேறு விதமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. வெளியில் உள்ளவர்களுக்கு அவ்வளவாக தெரியவில்லையென்றாலும், எனது குடும்பம், வெகு அருகாமையில் உள்ளவர்களுக்கு துல்லியமாக தெரிந்தது. இன்னர் இஞ்சினியரிங் மக்களின் - பால் என் மனப்போக்கை மாற்றிவிட்டது – அதுவும் திறமையற்றவர்களை கையாளும் விதத்தில் வெளிப்பட்டது. அது என்னை தத்துவரீதியாகவும், சகிப்புத் தன்மையுடையவனாகவும் மாற்றியது. சிறிது அடக்கமாகவும், பரிகாசம் அதிகமாகவும் ஆனவனானேன்.

அந்தப் பயிற்சிகள் என்னை அமைதிப்படுத்தின, சக்தியைத் தூண்டி ஒரு வேலையை முடிக்க வைத்தது. என் வாழ் நாள் முழுவதும் கடவுள் என்பவன் எல்லா அம்சத்திலும் இருக்கிறான் என சொல்லிவந்தேன். அதை நான் என் மாணவர்களுக்கோ, என்னுடன் வேலை செய்பவர்களுக்கோ புரிய வைக்க முடியாமல் தோற்றிருக்கிறேன். என்னுடைய முதல் ஆசிரம பயணத்தின்போது கடவுளின் அம்சத்தை கண்கூடாக எல்லாவற்றிலும் பார்த்தேன். இந்த அம்சம் எங்கும், எல்லாவற்றிலும் இருப்பதை உணர்ந்த பொழுது, சத்குருவின் பால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டு, மிக எளியவனாக உணர்ந்தேன். இதன் ரகசியமென்ன என்று சத்குருவிடம் கேட்டேன். “அவை உன்னை வாழ வைக்க வேலை செய்கின்றது. அன்பிற்காக என்னை வேலை செய்ய வைக்கின்றது” என்றார்.

- ப்ரஹ்லாத் கக்கர்.