கிராமப்புற மக்களை ஒன்றிணைக்கும் உயரிய நோக்கத்துடன் நடத்தப்படும் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

"உருளும் கல், பாசியை சேகரிக்காது" என்று பேச்சுவழக்கில் சொல்வதுண்டு. ஆனால் உருளும் பந்து..? ஆம், இந்த பந்து கடந்த பதினான்கு ஆண்டுகளாக நிற்காமல் தொடர்ந்து உருண்டோடிக் கொண்டேயிருக்கிறது. அது ஒரு கதை - ஈஷா கிராமோத்சவத்தின் கதை. கிராமோத்சவம் என்பது ஒரு கொண்டாட்டம். இந்திய கிராமங்களின் உத்வேகத்தை விளையாட்டு மூலமாக வெளிக் கொண்டுவரும் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி.

இது சாதி, மத பேதம் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்ச்சி. முதல்முறையாக இந்த கிராமோத்சவம் சிறிது வடகிழக்கு நோக்கி நகர்ந்து 'இந்தியாவின் அரிசி பிரதேசம்' எனும் ஆந்திரப் பிரதேசத்திற்குள் மையம் கொண்டுள்ளது.

தொடர்ச்சியான விளையாட்டுப் போட்டிகள் மூலமாக கிராம மக்களிடம் மத நல்லிணக்கத்தை உருவாக்கி, பெண்களுக்கு வாய்ப்புகளை அளித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மக்களின் செயல் திறனை அதிகரிக்க நடத்தப்படும் இந்தநிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இது துடிப்பான கிராமிய கலாச்சாரத்தின் மறுமலர்ச்சிக்கு ஒரு கருவியாக இருக்கிறது. இது சாதி, மத பேதம் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்ச்சி. முதல்முறையாக இந்த கிராமோத்சவம் சிறிது வடகிழக்கு நோக்கி நகர்ந்து 'இந்தியாவின் அரிசி பிரதேசம்' எனும் ஆந்திரப் பிரதேசத்திற்குள் மையம் கொண்டுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

02-1

இந்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம், நாட்டுப்புற நலனில் அக்கறை கொண்டு பொருளாதாரம், சமூகம் மற்றும் உள்கட்டமைப்பு கொண்ட நிலையான கிராமங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இது அந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும். விளையாட்டு என்பது பொதுவாகவே ஒட்டுமொத்த நலனுக்கான அத்தியாவசிய அடையாளம் என்பதால் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) ஈஷா நிறுவனத்துடன் இணைந்து இந்தமாதிரி செயல்பாட்டை நடத்துகிறது. இந்த முன்முயற்சி விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனந்தபுரம் மண்டலத்தை உள்ளடக்கிய 26 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வயது வித்தியாசமின்றி அனைவரும் ஒன்று கூடி, பொருளாதார வேற்றுமையைக் களைந்து, சமூகத்தின் ஒற்றுமையைப் புதுப்பிக்க உதவும் நிகழ்ச்சியாக இருக்கும். இது பெண்களின் வாழ்வை மேம்பட செய்யும், தீய பழக்கவழக்கங்களில் சிக்கி ஆரோக்கியமற்று வாழ்பவர்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும். ஒன்றாக விளையாடும் கிராமம் ஒன்றாக செயல்படும். இதுவே கடந்த காலத்தில் எங்கெல்லாம் ஈஷா கிராமோத்சவம் நடந்ததோ அங்கெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை.

03-1

கடந்த சில வாரங்களாக ஆண்களுக்கான கைப்பந்து போட்டிகளும் பெண்களுக்கான எறிபந்து போட்டிகளும் அனந்தபுர மண்டலத்தில் நடந்த வண்ணம் உள்ளது, இதுவே அங்கு வேடிக்கை, கேளிக்கை மற்றும் சகோதரத்துவத்திற்கு காரணமாகிவிட்டது. மேலும் வெற்றி பெறாத கிராமத்தில் உள்ள ஏதாவது ஒரு அணியைச் சார்ந்த பெண்களுக்கு ஒரு நிபந்தனையுடன் மலர் செடிக் கன்றுகள் மற்றும் பழமரக் கன்றுகள் வழங்கப்பட்டன. நிபந்தனை என்னவென்றால் அதிலிருந்து கிடைக்கும் பூ மற்றும் பழங்களை அவர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். விளையாட்டில் அன்பு மற்றும் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குவதற்கு இது ஒரு நல்ல ஆரம்பமாகவும் அமையும். விளையாட்டு வீரர்களிடம் ஏற்புடைய அதே சமயத்தில் நேர்மறையான தன்மையை உருவாக்கவும் உதவும். இதில் மறைந்திருக்கும் செய்தியை அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள், விளையாட்டு வீரர்களுக்காக தங்கள் கிராமத்தில் இதுபோன்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்த உள்ளதாகவும் உறுதியளித்தனர். இதன் முக்கிய குறிக்கோள் சமூகத்தில் உள்ள அனைவரையும் சமூக செயல்களில் இணைந்து ஈடுபடச் செய்து தோழமையை உருவாக்குவதே.

விளையாட்டுப் போட்டிகளால் சமுதாயத்தில் நல்லிணக்கம் பெருகுமா?, vilaiyattu pottigalal samuthayathil nallinakkam peruguma?

ஆண்கள் கைப்பந்து போட்டியில் 38 கிராமங்களைச் சேர்ந்த 90 அணிகள் பங்கேற்றன. பெண்கள் எறிபந்து போட்டியில் 28 கிராமங்களை சேர்ந்த 58 அணிகள் பங்கேற்றன. நவம்பர் 25 ஆம் தேதி நடந்த காலிறுதிப் போட்டிகளில் தலா எட்டு அணிகள் பங்கேற்றன.

ஆந்திர மாநிலத்தில் நடக்கும் இந்த கிராமோத்சவ நிகழ்ச்சி அம்மாநில கிராமப்புறங்களின் சாராம்சங்களை, கிராமப்புற விளையாட்டுகள், கிராமிய இசை மற்றும் உணவு வகைகள் மூலமாக காட்சிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்தத் தனித்துவம் வாய்ந்த கொண்டாட்டங்களுடன் சேர்ந்து கைப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகளின் இறுதிப் போட்டி, வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த உச்சகட்ட நிகழ்வானது, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் ஈஷா நிறுவனத்தின் கூட்டு முயற்சியாகும்.

கிராமப்புற மக்கள் தங்கள் கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை மாற்றுவதற்கு பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட ஊக்குவிப்பதே இதன் நோக்கம். அனந்தபுரம் மண்டல குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏழாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்த கிராமோத்சவத்தை கண்டுகளிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியால் சூறாவளி போன்ற கிராமப்புத்துணர்ச்சியுடன், ஆங்காங்கே தனிநபர்களின் மாற்றத்திற்கான வாய்ப்பும் ஏற்படலாம் என்பதே அப்பகுதிக்கான வானிலை அறிக்கையாக தற்போது இருக்கிறது.