உலக சுற்றுசூழல் தினத்தன்று பிளாஸ்டிக் கழிவுகளை தடுப்பது எப்படி ?
2050ல் நமது கடல்களில் மீன்களைவிட பிளாஸ்டிக்குகள் அதிகமாகி விடும் என்பது உங்களுக்கு தெரியுமா. தடித்த தோல் ஓடு கொண்ட லெதர்பேக் கடல் ஆமைகளில் 3ல் 1ன் வயிற்றில் ப்ளாஸ்டிக் கழிவுகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

வரும் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் வழக்கமான ஒரு சுற்றுச்சூழல் தினமாக இருக்காது என்பதை நாம் நிச்சயம் சொல்லலாம்! ஆம்... அன்றைய தினம் ஈஷா அறக்கட்டளை மற்றும் நதிகளை மீட்போம் இயக்கம் ஐநா சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடைசெய்வதற்கான முன்னெடுப்புகளை முன்னின்று நிகழ்த்தவுள்ளன.
பசிபிக் கடல் பகுதியில் உள்ள மிட்வே அடோல் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த செப்டம்பர் 2009ல் இறந்த அல்பட்ரோஸ் வகை கடல்பறவை குஞ்சின் இரைப்பை பகுதி புகைப்பட கலைஞரால் படம்பிடிக்கப்பட்டது. அதில், அதன் தாய் பறவையால் பிளாஸ்டிக் கழிவுகள் அந்தக் குஞ்சுக்கு ஊட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
வரும் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் வழக்கமான ஒரு சுற்றுச்சூழல் தினமாக இருக்காது என்பதை நாம் நிச்சயம் சொல்லலாம்! ஆம்... அன்றைய தினம் ஈஷா அறக்கட்டளை மற்றும் நதிகளை மீட்போம் இயக்கம் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடைசெய்வதற்கான முன்னெடுப்புகளை முன்னின்று நிகழ்த்தவுள்ளன.
முறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு நாம் கொடுத்த விலை!
முறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நாம் நம் சுற்றுச்சூழலில் பலவிதமான பாதிப்பை உண்டாக்கி கொண்டுள்ளோம்... அவற்றில் சில இங்கே!
ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 8 மில்லியன் டன்கள் அளவிற்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் சேர்கின்றன. அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு வண்டி அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன.
60 முதல் 90% கடல் கழிவுகள் பலவகைப்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் சேர்கின்றன.
Subscribe
2015ல் உலக அளவிலான பிளாஸ்டிக் உற்பத்தியின் மதிப்பானது 900 எம்பயர் ஸ்டேட் கட்டிடங்களுக்கு இணையானது என கணக்கிடப்பட்டுள்ளது.
2050ல் 99% கடல் பறவைகள் அனைத்தும் பிளாஸ்டிக் கொண்டிருக்கும்.
ஏற்கனவே நம் கடல்களில் 51 ட்ரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் அங்கங்கள் சேர்ந்துள்ளன.
இதுதான் நமக்கு ஒலிக்கும் அபாய மணியாகும்.
எனவே நாம் இதற்காக என்ன தீர்வை முன்வைக்க உள்ளோம்?
தாகமாக இருக்கும்போது...
நீங்கள் உண்மையிலேயே பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யாமல் தவிர்க்க விரும்பினால், மீண்டும் மீண்டும் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்!
குளிர்பானங்களோ அல்லது வேறு பிற பானங்களோ கடைக்காரரிடம் வாங்கி அருந்தும்போது, பிளாஸ்டிக் straw வாங்காமல் மறுத்துவிடுங்கள்!
கடைத்தெருவிற்கு செல்லும்போது...
பொருட்கள் வாங்க கடைத்தெருவிற்கு செல்லும்போது, நீங்கள் துணிப்பையை உடன் எடுத்துச் செல்லவும். ஒரு நபர் சராசரியாக 12 நிமிடங்கள் மட்டுமே ஒரு பிளாஸ்டிக் பையை உபயோகித்து பின் தூக்கி எறிகிறார். நீங்கள் அதுபோன்ற ஒரு நபராக இருக்க வேண்டாம்.
உணவுகளை எடுத்துச் செல்ல…
உணவுப் பதார்த்தங்களை கொண்டு செல்லும்போது, பதார்த்தங்களை எடுத்துச்செல்ல பாத்திரங்களை பயன்படுத்தலாம். ப்ளாஸ்டிக் கவர்களை புறந்தள்ளிவிட்டு, ஏன் நீங்கள் உங்கள் சொந்த பாத்திரங்களில் எடுத்துச் செல்லக்கூடாது?! இப்படிச் செய்வது உங்களுக்கு ஒருவேளை ஆரம்பகாலத்தில் அசௌகரியமாக தோன்றலாம். ஆனால், இதுவே பழக்கமாகிவிட்டால், பின்னர் அது எளிமையாகிவிடும்.
பொருட்கள் வாங்கும்போது...
ஒரு நுகர்வோராக உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதன்மூலம் நீங்கள் மகத்தான மாற்றத்தை உண்டாக்க முடியும்! பிளாஸ்டிக் நுண்பொருட்கள் அல்லது பிளாஸ்டிக் பேக்கேஜிங் இல்லாத பொருட்களைப் பார்த்து வாங்கவும். இது ஒரு எளிய படி என்றாலும், இதன்மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகும் ஒரு பெரிய தொடர் சங்கிலி துண்டிக்கப்படுகிறது.
மேற்கூறிய இந்த விஷயங்கள் நீங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடிய எளிமையான தீவுகளாகும்.
மேலும், ஜூன் 5ஆம் தேதியன்று உங்கள் உள்ளூர் ஈஷா மையங்களில் தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து, பிளாஸ்டிக் கழிவுகள் துப்புரவு செய்யும் நிகழ்ச்சிகளில் உங்களை இணைத்துக் கொள்ளலாம். அன்றைய தினம் இந்த செயல்பாடுகளில் கலந்துகொள்ள இயலவில்லை எனில், நீங்கள் வேறு விதங்களில் துணை நிற்க முடியும்!
உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக அவர்கள் கையில் இருக்கும் துணிப்பைகளுடனோ அல்லது பிளாஸ்டிக் Strawக்கு பதிலாக உலோக உறிஞ்சிகள் அல்லது வேறு மறுசுழற்சி ஆகக்கூடிய பொருட்களுடனோ ஒரு செல்ஃபி எடுத்து பகிருமாறு கேட்டுக் கொள்ளவும். இதனை மேலும் ஐந்து நண்பர்களுக்கு Tag செய்து இதைப் பற்றி தெரிவிக்கச் சொல்லவும்.
உங்கள் முகநூல் முகப்பு புகைப்படத்தின் ஃப்ரேமை பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமைக்கலாம்.
உங்கள் நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் இணைந்து ஜூன் 2 அல்லது 3 ஆம் தேதியில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அதனை தரம் பிரித்து வைக்கவும். இந்த நிகழ்வின்போது ஒரு செல்ஃபி எடுத்து, அதனை சமூக ஊடகங்களில் பதிவிடலாம்.
#BeatPlasticPollution என்ற Hashtag பயன்படுத்துவதோடு, ஈஷா அறக்கட்டளையை Tag செய்யவும். கூடவே ஐந்து நண்பர்களையும் Tag செய்யவும். இதன்முலம் உங்கள் நண்பர்கள்/ குடும்பத்தாருக்கு நீங்கள் இந்த முயற்சிகளில் ஒரு முன்னுதாரணமாக இருக்கலாம்.
இப்போதே Thunderclap பிரச்சாரத்தில் இணையுங்கள்!
இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஒன்றிணைந்து ஒரு மகத்தான தாக்கத்தை உருவாக்க வாருங்கள்!