உலக சுற்றுச்சூழல் தினம் - நாம் என்ன செய்யலாம்?
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, ஈஷா பசுமைக் கரங்கள் மட்டுமல்ல, நாம் அனைவரும் ஈடுபட வேண்டிய மிக முக்கிய நாள். நாம் வாழும் சுற்றுச்சூழல் ஏற்புடையதாக இருந்தால் ஒழிய, நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியாது. சரி, இந்த தினத்தில் நாம் என்ன செய்யலாம்? இதோ விடையாய் அமைகிறது ஈஷா பசுமைக் கரங்களின் திட்டங்கள்...

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, ஈஷா பசுமைக் கரங்கள் மட்டுமல்ல, நாம் அனைவரும் ஈடுபட வேண்டிய மிக முக்கிய நாள். நாம் வாழும் சுற்றுச்சூழல் ஏற்புடையதாக இருந்தால் ஒழிய, நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியாது. சரி, இந்த தினத்தில் நாம் என்ன செய்யலாம்? இதோ விடையாய் அமைகிறது ஈஷா பசுமைக் கரங்களின் திட்டங்கள்...
மலையை தூய்மை செய்யும் ஈஷா!
இயற்கை அன்னையின் தூய்மை மடியான மலைகளிலும் கூட, மனிதர்கள் குப்பைகளை நிறைக்கத்தான் செய்கிறார்கள். தென் கைலாயம் என்று போற்றப்படும் புனித வெள்ளியங்கிரி மலை அந்த சிவன் அமர்ந்த மலை மட்டுமல்ல, யானைகளின் காப்பகமாகவும், பல வன விலங்குகளின் இருப்பிடமுமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பசுமை நிறைந்த வெள்ளியங்கிரியும் பிளாஸ்டிக் குப்பைகளால் கொஞ்சம் காயம்பட்டே உள்ளது. இந்த மலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈஷா யோகா மையம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
அந்த விதத்தில், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதியை முன்னிட்டு வரும் ஜூன் 1ஆம் தேதியன்று, 200 க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்களும், பல கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் வெள்ளியங்கிரி மலையேறி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவுள்ளனர். SACON (Salim Ali Centre for Ornithology and Natural History) நிறுவனமும் ஈஷா பசுமைக் கரங்களும் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். கீழ்கண்ட நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும், ஊழியர்களும் இந்நிகழ்ச்சியில் ஈஷாவுடன் இணைந்து தூய்மைப்படுத்த உள்ளன.
- V.L.B ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி
- கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
- ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
- இன்டஸ் பொறியியல் கல்லூரி
- ஜெகன்னாத் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட்
- நிழல் அறக்கட்டளை
- Deffree இன்ஜியனிரிங் (Pvt) Ltd
நேரம்: காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை.
இந்த வருட இலக்கு, 40 லட்சம் மரக்கன்றுகள்!
சுற்றுச்சூழலைக் காப்பதென்பது மரங்களின் உதவியில்லாமல் நடவாது. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் மரங்கள் இல்லாமல் மனிதனால் ஜீவிக்க முடியாது. மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. "நமது நுரையீரலில் பாதி மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது" என சத்குரு சொல்வதுண்டு.
தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரித்து சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில் ஈஷா மேற்கொண்டுள்ள திட்டமே ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்!
இந்த ஆண்டு, தமிழகத்தில் 40 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறது ஈஷா பசுமைக் கரங்கள். ஜூன் 1, வெள்ளியங்கிரியைத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை அடுத்து, 40 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்பமாக கோவையில் முதல் மரக்கன்று நட்டு துவக்கி வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈஷாவின் இசைக் குழுவான சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
நேரம்: மாலை 5 மணி
இடம்: மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரம், கோவை
Subscribe
இந்நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறோம்.
தொடர்புக்கு: (0422) 2495453, 94434 94434
சென்னையில் ‘Bike2Work’ - சைக்கிள் பேரணி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வாகனங்களால் உண்டாகும் மாசு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஜூன் 1ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது. அதோடு, நிகழ்ச்சியில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழுவினர் பங்கேற்பாளர்களின் காதுகளை இனிக்கச் செய்து, கால்களை நடனமிடச் செய்ய உள்ளனர். தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுவோர் சங்கமும் ஈஷா பசுமைக் கரங்களும் இணைந்து நடத்தும் இந்தப் பேரணியில் நீங்களும் பங்கேற்கலாம்.
இடம்: சென்னை மத்திய கைலாஷ் பகுதியிலிருந்து காலை 6 மணிக்கு சைக்கிள் பேரணி துவங்கும்.
தொடர்பு மற்றும் பதிவிற்கு: 94425 90062
உங்கள் கால்தடத்தின் கார்பனைக் களையுங்கள்!
நாம் எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனுக்கு ஈடுசெய்து நாம் விட்டுச் செல்லும் 'கார்பன்' கால் தடத்தை குறைக்கும் விதமாக ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும் என்பதே தற்போதுள்ள நிலவரம் சொல்லும் கணக்கு.
பொதுவாக, வளர்ச்சியடைந்த ஒரு மரம், நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான 260 பவுன்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது.
நீங்களும் மரம் நட வேண்டுமா?
உங்கள் விரல் நுனிபோதும் ஒரு மரம் வளர்க்க!
giveisha.org/pgh என்ற இணையதளத்தில் ஒரு மரத்திற்கு ரூ.100 வீதம் நன்கொடையாக வழங்குங்கள்*; உங்கள் மரம் வளர்வதைக் காணுங்கள்!
ஈஷா பசுமைக் கரங்கள், உங்களுக்காக மரங்களை நடவும் வளர்க்கவும் செய்கிறது; உங்கள் மரம் வளரக் கூடிய இடத்தையும் வளர்க்கும் விவசாயியின் பெயரையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் இதுவரை,
- 7,30,493 பள்ளி கல்லூரி மாணவர்களைக் கொண்டும்
- 28,410 விவசாயிகள் மற்றும் விவசாயக் குடும்பங்களைக் கொண்டும்
- 14,00,000 மக்களின் துணையோடும்
- தமிழகத்தில் 1.97 கோடி மரங்களை நட்டுள்ளது
சுற்றுச்சூழலுக்கான இந்தியாவின் உயரிய விருதான "இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார்" விருதையும், தமிழக அரசு வழங்கும் சுற்றுச்சூழல் விருதினையும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் பெற்றுள்ளது.
நீங்களும் மரங்களை நடலாம் - ‘Isha Outreach’ என்ற பேயரில் வரைவோலையையோ/ காசோலையையோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புங்கள்.
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், ஈஷா யோகா மையம், செம்மேடு அஞ்சல், கோயம்புத்தூர் - 641114.
(அதனுடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் சேர்த்து அனுப்புங்கள்)
மேலும் தொடர்புக்கு: 94425 90081
info@projectgreenhands.org
* நடப்பட்ட பின் மரங்களைப் பேணுதல் மற்றும் 2 வருடங்களுக்கு மரம் மண்ணில் உறுதியாகும் வரை மறுநடவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும்