“உடல் எனும் யந்திரம்” மற்றும் “மனதை கையாளும் தந்திரம்” ஆகிய இரண்டு புத்தகங்களை ஒரே புத்தகமாக இணைத்து, ஒரு புதுமையான வடிவத்தில் ஈஷா வெளியிட்டுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று மத்திய அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு அவர்களால் வெளியிடப்பட்ட இப்புத்தகங்கள் பற்றிய ஒரு பார்வை!

உடல் எனும் யந்திரம்

உடல் என்பது ஒரு மாபெரும் அதிசயம், அந்த அதிசயத்தை முழுவதும் புரிந்தவர்கள் ஞானிகள். உடலை சரியாக கட்டமைப்பது நமது வாழ்வையும் மரணத்தையும் ஆளுமை செய்யும் வல்லமையை நமக்கு அளிக்கிறது என்று சொல்லும் யோகியும் ஞானியுமான சத்குரு, அதற்கான பல யோக வழிகளை இந்நூலில் நமக்கு எடுத்துரைக்கிறார். உடல்நிலையின் அடிப்படை வேர்களையே அறிவதால் நோயின் மூல காரணங்களிலிருந்தே விடுபட முடிகிறது. பிறரிடம் அன்பு பாராட்ட முடிகிறது, மன அழுத்தத்திலிருந்தும் விடுபட முடிகிறது, ஒரு ஆனந்தமான வாழ்க்கையை வாழ முடிகிறது. அனைத்திற்கும் மேலாக, மனிதன், தனது உச்சபட்ச சாத்தியத்தை அடைந்து அற்புத மனிதனாக வாழவும் செயல்படவும் முடிகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனதை கையாளும் தந்திரம்

பெரும்பான்மை மக்களுக்கு மனம் என்பது இரைச்சல் நிறைந்த ஒரு சந்தைக் கடையாகவும் எல்லா வகை குப்பைகளையும் தனக்குள் திணித்து வைத்திருக்கிற ஒரு குப்பைத் தொட்டியாகவுமே இருக்கிறது. "எனது மனம் என்று நீங்கள் கூறுவது உண்மையில் உங்களது மனம் அல்ல, சமூகத்தின் குப்பைத் தொட்டிதான் உங்கள் மனம். உங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரும், உங்கள் தலைக்குள் அர்த்தமற்ற குப்பையை வீசிவிட்டுச் செல்கின்றனர்" என்று எச்சரிக்கும் சத்குரு, மனதைக் கையாளும் தந்திரம் அறிந்து செயல்படாவிட்டால் பிறகு மனம் நமக்கு எஜமானனாகி நம்மை ஆளத் துவங்கிவிடும் என்பதையும் இந்நூலில் நமக்குத் தெளிவாக சுட்டிக் காட்டுகிறார்.

உடல் எனும் யந்திரம் & மனதை கையாளும் தந்திரம்
ஒரே உறையில் 2 புத்தகங்கள்
பக்கங்கள் 216
விலை ரூ. 120
தொடர்புக்கு: 94878 95595/ 94437 07250

உடல் எனும் யந்திரம் புத்தகத்தை ஆன்லைனில் பெற

இங்கே

க்ளிக் செய்யவும்
மனதை கையாளும் தந்திரம் புத்தகத்தை ஆன்லைனில் பெற

இங்கே

க்ளிக் செய்யவும்

ஈஷா வெளியீடுகளை ஆன்லைனில் பெற: ishadownloads.com
ஈஷா வெளியீடுகளை கூரியர் மூலம் பெற: 0422-2515415