32 நாடுகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், ஆனந்தம் நிறைந்த, மனஅழுத்தமற்ற புதிய பாதையை சாதனாவின் மூலம் தங்கள் வாழ்க்கையில் தாங்களே அமைத்துக் கொள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட தலமான கோவை ஈஷா யோகா மையத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள். சாதனாபாதை பங்கேற்பாளர்கள் அனைவரும் தீவிரமான மற்றும் கட்டுக்கோப்பான சாதனாவில் ஈடுபட்டு, பயிற்சிகளை முறையே செய்து, தங்களின் திறமைகளை ஈஷாவின் செயல்பாடுகளில் ஒரு அர்ப்பணிப்பாக வழங்குவதன் மூலம் பங்கெடுத்து, ஆசிரமத்தில் நடக்கவுள்ள பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களில் திளைக்க உள்ளார்கள். அடுத்த ஏழு மாதங்கள் அவர்கள் மேற்கொள்ள உள்ள சாதனாபாதை பயணத்தில் சந்திக்கும் ஏற்ற தாழ்வுகளின் பின் உள்ள நிகழ்வுகளை இந்த வலைப்பதிவுத் தொடரின் மூலம் நாம் அறிய இருக்கிறோம்...

இரண்டு மாதங்கள், சாதனா பாதை பங்கேற்பாளர்களுக்கு எவ்வாறு பறந்தோடியது என்பது தெரியாது. ஒவ்வொரு நாளும், அவர்கள் சூரியனுக்கு முன்பாக எழுந்து, காலையில் தீவிர சாதனாவின் வழியாக தங்கள் உடலை கடினமான பாதையில் வழி நடத்தி, பின்னர் தீர்த்தகுண்டத்தில் நீராடி அன்றாட தன்னார்வத் தொண்டிற்காக தங்களை புத்துணர்ச்சியூட்டிக் கொள்கிறார்கள். இந்த வழக்கமான தினசரி நிகழ்வுகள் அவர்களை சலிப்படையச் செய்வதில்லை, மாறாக புதிய உள்நிலை பரிமாணங்கள் திறக்கப்படுவது, பல்வேறு விதமான தன்னார்வத் தொண்டுகள், புதிய சவால்கள் ஆகியவை அவர்களை எப்போதும் தீவிரத்துடன் வைத்துள்ளது.

இந்த மாதம், சேவை ஒரு தனித்துவமான வடிவத்தை எடுத்தது; ஏனெனில், ஒரு மகத்தான வரலாற்று இயக்கம் அவர்களின் கண்களுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது - காவேரி கூக்குரல். காவேரி நதிப் படுகையில் 242 கோடி மரங்களை நடவு செய்வதற்கான நிதியை திரட்டுவதற்காக சத்குரு தனிப்பட்ட முறையில் மோட்டார் சைக்கிளில் இந்தியாவின் இரண்டு மாநிலங்களில் பேரணி மேற்கொள்ளும் நிலையில், தன்னார்வலர்கள் தங்கள் வாழ்நாளுக்கான இந்த பணியை நிறைவேற்றுவதற்கான அழைப்புக்கு பதிலளித்தனர். தன்னார்வத் தொண்டின் மூலம், இந்த மிகப்பெரிய பிரச்சாரத்திற்காக எல்லோரும் தங்களை ஒரே நோக்கம் மற்றும் தீவிரத்தோடும் தயார் செய்துகொண்டனர்.

ஒருமுறை ஹேர்கட்டிற்கான தொகை 2 மரங்களுக்கான நன்கொடையாகும்

கேரளாவின் திரூரைச் சேர்ந்த 31 வயதான ராஜேஷ், ஹேர்ஸ்டைலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர், அந்த ஆர்வம் அவரை தனது முடிதிருத்தும் கருவியை சாதனா பாதைக்கு கொண்டு வரச் செய்தது! அவரது திறன்கள் விரைவில் மற்ற பங்கேற்பாளர்களிடையே மிகவும் விரும்பப்பட்டன. ஹேர்கட் செய்ய வரிசையில் நிற்கும் மக்களிடம் காவேரி கூக்குரலுக்கு நன்கொடை கேட்க அவரின் நண்பர்கள் பரிந்துரைத்தபோது, அது அவருள் வலுவாக எதிரொலித்தது. அவரது சக சாதனா பாதை பங்கேற்பாளர்கள் அனைவரும் இந்த அருமையான காரணத்திற்காக நன்கொடை அளிப்பதில் மகிழ்ச்சியடைந்தார்கள். ஒவ்வொரு ஹேர்கட்டுக்கும் குறைந்தபட்சம் 2 மரங்கள் நடலாம் என்பதால், 1000 மரங்களுக்கான நன்கொடையை திரட்ட ராஜேஷ் திட்டமிட்டுள்ளார். அவருக்கு எங்களின் மிகச் சிறந்த வாழ்த்துக்கள்!

இதைப் போலவே, பங்கேற்பாளர்கள் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க தங்கள் தனித்துவமான வழிகளை வகுத்தனர். இதுவரை 50,000 க்கும் மேற்பட்ட மரங்களுக்கு கூட்டாக நிதி திரட்டுவதன் மூலம் அவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளனர்!

காவேரி கூக்குரலுக்காக சாதனா பாதை பங்கேற்பாளர்கள் என்ன செய்கிறார்கள்?

life-in-sadhanapada-volunteering-for-cauvery-calling-global-cause-pic1

life-in-sadhanapada-volunteering-for-cauvery-calling-global-cause-pic2

 

இதற்காக மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், அதற்கான நன்கொடைகளைப் பெறுவதற்கும் இணையதளம் மற்றும் நேரடியான பங்களிப்பு முக்கியமானது. பங்கேற்பாளர்கள் ஈடுபட்ட சில செயல்பாடுகள் இங்கே:

  1. காவேரி கூக்குரலுக்கான ஆன்லைன் விளையாட்டை உருவாக்குதல்
  2. டி-ஷர்ட்டுகள் மற்றும் சுவரொட்டிகளை வடிவமைத்தல்
  3. வலைப்பதிவுகள் எழுதுதல் மற்றும் இன்போ கிராபிக்ஸ் தயாரித்தல்
  4. மக்களைச் சென்றடைய வீடியோக்களை படப்பிடித்தல் மற்றும் அதை சரிபார்த்தல்
  5. நீர் நெருக்கடி மற்றும் வேளாண் வனவியல் போன்ற பல்வேறு அம்சங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்.

சாதனா பாதை பங்கேற்பாளர்கள் 7 மாத காலத்திற்கு ஆசிரமத்தில் தங்குவதற்கு உறுதியளித்தாலும், காவேரி அழைக்கும்போது, நிச்சயம்பதிலளிக்க வேண்டும்தானே. ஒரு பங்கேற்பாளர் சத்குருவின் மோட்டார் சைக்கிள் பேரணியில் சேர்ந்தது மற்றும் தொடர்ச்சியான வீடியோ படப்பிடிப்புகளில் பரபரப்பாக உணர்ந்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

"ஆடம்பரமான விருந்து அரங்குகள் துவங்கி, சரியான வீடியோ காட்சியைப் பெற ஒரு காரின் பக்கவாட்டில் தொங்குவது வரை.”

"ஆசிரமத்திலிருந்து காவேரி கூக்குரலுக்காக ஒரு இரண்டு வாரகால படப்பிற்கு புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, அவர்களுடன் இணைந்துகொள்ளுமாறு என்னிடம் கூறப்பட்டது. சத்குருவை நான் மிக அருகில் காண்பது மட்டுமல்லாமல், படப்பிடிப்பையும் படங்களையும் எடுக்க ஒரு வாய்ப்பு. அது முதல் நான் ஒரு பைத்தியமாக மிகவும் பரபரப்பான அதேவேளையில் மிகவும் திருப்திகரமான ஒரு செயல்பாட்டில் இணைந்திருந்தேன். மிகவும் அழகிய காட்சிகள் துவங்கி மிகவும் சேறும் சகதியுமான மண் முகாம் தளங்கள் வரை; ஆடம்பரமான விருந்து அரங்குகள் முதல் காரில் தொங்கி சரியான வீடியோ காட்சியைப் பெறுவதுவரை - இது ஒரு அருமையான பயணம். குழந்தைகள், பிச்சைக்காரர்கள் மற்றும் முதலமைச்சர்கள் என எல்லோரும் காவேரி கூக்குரல் இயக்கத்தை ஆதரித்தனர் - இது எனக்கு ஒரு புதிய பார்வையை கொடுத்தது. இந்தப் பயணத்தில், எனது சாதனா ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்தது - அந்த திகைப்பிலும் தாழ்மையுடன் இருக்கிறேன்.” – அருஷ், 45, மும்பை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆசிரமத்தில் நிலைப்படுத்தப்படுத்தல்

மழை மற்றும் புயல் என்று பாராமல், சத்குரு தனது மோட்டார் சைக்கிளில் இடைவிடாமல் கர்ஜிப்பதைப் பார்ப்பது பார்வையாளர்களை மட்டுமல்ல, ஆசிரமத்தில் இப்பயணத்திற்கான திட்டமிடல் குழுவில் திரைக்குப் பின்னாலிருந்து இயங்கும் தன்னார்வலர்களையும் சூடேற்றிவிட்டது. நீண்டநேர பயணம், சிறிது தூக்கம், சில சமயம் பட்டினி என அதிக வேலைப்பளு இருந்தாலும், தன்னார்வலர்கள் ஒரு சிறிய புகார் கூட தெரிவிக்காமல், சற்றும் தளராமல் எப்போதும் சுறுசுறுப்புடன் ஓடிக்கொண்டிருந்தனர். இயக்கத்திற்கு வரும் நிதியை கையாளும் குழு, நன்கொடை ரசீதுகள் தயார் செய்வதிலும், சமூக ஊடக குழுக்கள் உடனுக்குடன் செய்திகளை சேகரித்து வெளியிடுவதிலும், ஊடகக் குழுக்கள் பத்திரிக்கைகளுக்கான கட்டுரைகளை எழுதி அனுப்புவது என அனைவரும் பம்பரமாக சுழன்றுகொண்டு இருந்தனர்.

"இது என்னைப் பற்றி"

“காவேரி கூக்குரல் இயக்கத்தில் என்னை நான் அதிகமாக ஈடுபடுத்திகொள்ளும்போது, அது சத்குருவிற்காகவோ அல்லது விவசாயிகளுக்காகவோ, ஆறுகளுக்காகவோ அல்லது சூழலியல் ஆகியவற்றை ஆதரிப்பது அல்ல என்பதை நான் உணர்கிறேன் - இது என்னைப் பற்றியது; நான் உயிருடன் இருக்கும் வரை எனது தட்டில் உணவு இருக்கும் என்பதை உறுதிசெய்கிறது. எனக்கு ஒரு நாள் குடிக்க தண்ணீர் அல்லது ஒரு நாள் சாப்பிட உணவு இல்லை என்று நினைப்பது மிகவும் கொடுமையானது.” – அஸ்வினி, 27, சின்சினாட்டி, அமெரிக்கா

நதிகளைப் போல ஓடக் கற்றுக்கொள்வது

சிலருக்கு, காவேரி கூக்குரல் போன்ற ஒரு பன்முக பிரச்சாரம் அவர்களை ஒருவித வேகத்துடன் இயங்க செய்து, இதற்கு முன்பு செய்யாத ஒன்றைச் செய்ய ஒரு உந்துவேகத்தை கொடுத்தது.

life-in-sadhanapada-volunteering-for-cauvery-calling-global-cause-pic3

"நான் காவேரி கூக்குரல் பற்றி ஒரு ராப் பாடல் கூட எழுதினேன்."

“ஒரு தனிநபராக பங்களிப்பதற்கான எனது திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால், சத்குரு எனக்கு காவேரி கூக்குரல் மூலம் உலகின் சுற்றுச்சூழலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பையும் ஒரு தளத்தையும் வழங்கியுள்ளார். ஒரு நுட்பமான மகிழ்ச்சி நாள் முழுவதும் பரவுகிறது. அது என் திறன்களிடையே ஒரு உள் படைப்பாற்றலை மலர அனுமதித்துள்ளது. நான் ஒருபோதும் ராப் இசையைக் கேட்பதில்லை, ஆனால் காவேரி கூக்குரல் பற்றி நான் ஒரு ராப் பாடல் கூட எழுதினேன்!" - பரன், 35, மெல்போர்ன், ஆஸ்திரேலியா

முன்னாள் பங்கேற்பாளர்கள் சந்திப்பு

வீடியோ குழுவின் ஒரு பகுதியாக சாதனா பாதையின் முன்னாள் பங்கேற்பாளர்கள் இணைந்தனர். அவர்களின் பயணம் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என முழுமையான பயணத்தையும் உள்ளடக்கியது. காவேரி வடிநிலப்பகுதிகள் முழுவதும் உள்ள இடங்களை அவர்கள் சோதனையிட வேண்டியிருந்தது. எனவே, உண்மையான பிரச்சாரத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர்களின் பணி தொடங்கியது.

விவசாயிகளிடமிருந்து இதைப்பற்றி கேட்பது

“காவேரி கூக்குரலின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இடங்களை தேர்வு செய்ய நாங்கள் புறப்பட்டபோது, மரங்கள் இல்லாதது மண்ணில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதையும், அதையொட்டி நதி நீரின் அளவையும் அது எவ்வாறு பாதித்துள்ளது என்பதையும் கண்டோம். ஒவ்வொரு நிகழ்வின் போதும், அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் ஒரு பெரிய ஆதரவைக் காண முடிந்தது. ஹுன்சூர் மற்றும் மைசூருவில் விவசாயிகளின் குழுக்கள் இருந்தன. இத்தகைய முயற்சிக்கு அவர்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் வாயிலாக கேட்கும்போது, காவேரி கூக்குரல் எவ்வளவு அவசியம் என்பதை எனக்கு உணர்த்தியது.” - வருண், 29, பெங்களூரு

காவேரி கூக்குரலின் உச்சகட்டம்

கோயம்புத்தூர் நகரில் பிரச்சாரத்தை முடிக்க சத்குரு திட்டமிடுவதற்கு ஒரு நாள் முன்பு, சாதனா பாதை பங்கேற்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என்று ஆச்சரியமான அறிவிப்பு வந்தது. உற்சாகமாக, மறுநாள் காலையில், அவர்கள் சத்குருவுடன் சேர பேருந்துகளின் வரிசையில் ஏறினார்கள். ஒரு மணிநேர பஸ் பயணம் வேடிக்கை இல்லாமலா இருக்கும்? அவர்கள் பாட்டுகள் பாடியும் விளையாடி மகிழ்ந்து கொண்டும் வந்தனர். அதேசமயம் விழா நடக்கும் இடத்திற்கு வந்ததும், பங்கேற்பாளர்கள் தன்னிச்சையாக தேவையானதைச் செய்வதில் குதித்தனர். சிலர் விழா ஏற்பாடுகளுக்கு உதவினார்கள்; சிலர் பங்கேற்பாளர்களுக்கு உணவு பரிமாறினர்; மற்றவர்கள் சத்குருவை வரவேற்க சாலையோரம் நின்றனர்.

life-in-sadhanapada-volunteering-for-cauvery-calling-global-cause-pic4

life-in-sadhanapada-volunteering-for-cauvery-calling-global-cause-pic5

"2000 மரங்களுக்கு இலக்கு வைத்துள்ளனர். ஏற்கனவே 600 க்கும் மேற்பட்ட மரங்களுக்கு நிதி திரட்டியுள்ளனர்"

“செப்டம்பர் 17 அன்று, சத்குருவையும் உடன் பயணித்தோரையும் வரவேற்கவும் நான் மணிக்கணக்கில் நின்றேன். 62 வயதில், அவர் வெறும் 14 நாட்களில் 3080 கி.மீ தூரம் பயணம் செய்ததோடு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு, அரசியல் கட்சி, நாடு, மாநிலம், சாதி, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்களை ஒன்றிணைத்தது எப்படி என்பதையும் எண்ணி நான் பிரமித்தேன். ஒரு பெரிய இலக்கை நோக்கிய வேலை! அது மிகவும் ஊக்கமளித்தது. அவர் எனக்கு அளித்த ஊக்கமும் அர்ப்பணிப்பும் கவனமும் நன்கொடைகளைக் கேட்க மக்களை அணுகுவதை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் எடுத்துள்ளது. முதல் கட்டமாக நான் 2000 மரங்களுக்கு நன்கொடை பெற இலக்கு வைத்துள்ளேன். இதுவரை 600 க்கும் மேற்பட்ட மரங்களுக்கு நிதி திரட்டியுள்ளேன்.” .- சுஷ்ரீ, 24, புவனேஸ்வர், ஒடிசா

life-in-sadhanapada-volunteering-for-cauvery-calling-global-cause-pic6

“எனக்கு அடுத்து இருந்த ஒரு வெளிநாட்டவர், ‘காவேரியைக் காப்பாற்றுங்கள்!’" என்று கூச்சலிட்டார்.”

“நாங்கள் நதி ஸ்துதியைப் பாடிக்கொண்டு கொடிகள் மற்றும் காவேரி கூக்குரல் அடையாளங்களுடன் சாலையில் நின்று கொண்டிருந்தோம், எங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமும் “காவேரி காவேரி!” என்று கத்திக் கொண்டிருந்தோம். திடீரென்று எனக்கு அருகில் இருந்த ஒரு வெளிநாட்டவர், “காவேரியைக் காப்பாற்றுங்கள்!” என்று கத்தினார். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. நம் நாட்டைச் சேர்ந்தவராக அல்லாதவர்கள் கூட காவேரி மீது அவ்வளவு அக்கறை கொண்டிருப்பதைப் பார்ப்பது என்னை நெகிழச்செய்தது. விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், மேலும் மேலும் நன்கொடை அளிக்க மக்களை ஊக்குவிப்பதற்கும் நான் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறேன்.” - க்ரிதி, 20, ராஞ்சி, ஜார்க்கண்ட்

கண்களை மூடி செய்வதுதான் சாதனாவா?

life-in-sadhanapada-volunteering-for-cauvery-calling-global-cause-pic7

life-in-sadhanapada-volunteering-for-cauvery-calling-global-cause-pic8

காவேரி கூக்குரலின் போது, பங்கேற்பாளர்கள் அனுபவத்தால் நிறைய கற்றுக்கொண்டனர், நீங்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்ய உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை; சாதனா பாதை என்ற சேவையின் தீவிரமான மற்றும் சக்திவாய்ந்த செயல்முறையின் மூலம் அந்த நிலையை அடைய முடியும்.

சத்குரு கூறுகிறார், “யோகாவின் முழு செயல்முறையும் உங்களை நீங்களே கொடுப்பதுதான். வெறுமனே இங்கே உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு உங்களை உலகுக்குக் கொடுக்க முடியும் - ஆனால் அந்த அளவிலான விழிப்புணர்வு பெரும்பாலான மனிதர்களில் இல்லை. எதையாவது நோக்கி தங்களைத் தாங்களே கொடுக்க அவர்களுக்கு நடவடிக்கை தேவை. எனவே, தன்னார்வத் தொண்டு என்பது உங்கள் வேலையின் மூலம் உங்களை உண்மையிலேயே வழங்கக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பாகும்."

பொதுவாக, நாம் செய்ய வேண்டிய சிறிய வேலை எதுவாக இருந்தாலும், கணக்கீடுகள் உள்ளன. ‘நான் எவ்வளவு செய்ய வேண்டும்? நான் ஏன் செய்ய வேண்டும்? இதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கும்? ’இந்த கணக்கீடுகளில், "செய்வது" என்பதின் அழகு அனைத்தும் போய்விட்டன, மேலும் வாழ்க்கையின் செயல்முறை அசிங்கமாகிறது. அன்றாட நடவடிக்கைகளில், எளிமையான காரியங்களைச் செய்ய, நாம் கொடுக்கத் தயாராக இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறோம். இது உங்கள் வேலை, உங்கள் திருமணம், உங்கள் குடும்பம் அல்லது எதுவாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியதால் இந்த விஷயங்களை நீங்கள் விருப்பத்துடன் தொடங்கினீர்கள். ஆனால் நீங்கள் ஆரம்பித்ததும், இதை ஏன் தொடங்கினீர்கள் என்பதை மறந்துவிட்டீர்கள். இப்போது நாம் விருப்பமின்றி கொடுக்கத் தொடங்கிவிட்டதால், அது ஒரு வேதனையான செயல்முறையாகிவிட்டது."

தன்னார்வத்தொண்டு அல்லது சேவா என்பது நம் வாழ்க்கையை வெறும் கொடுக்கும் செயல்முறையாக மாற்ற கற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாகும். ஒரு தன்னார்வலர் என்றால் தயாராக இருப்பவர் என்று பொருள் - இதைச் செய்யவோ அல்லது அதை செய்யவோ மட்டுமல்ல, அவர் வெறுமனே எல்லாவற்றிற்கும் விருப்பமாகிவிட்டார்."

அடுத்து வரும் கொண்டாட்டங்கள்...

ஆசிரமத்தில் இருப்பதன் அன்றாட மகிழ்ச்சியைத் தவிர, சாதனா பாதையின் கடந்த இரண்டு மாதங்களில் பல கொண்டாட்டங்கள் மற்றும் வேடிக்கையான நடவடிக்கைகள் நடந்துள்ளன. அடுத்த தொடரில், ஒருவித துறவு மனப்பான்மையுடன் கூடிய கொண்டாட்ட வழியில் வாழ்க்கையை அணுகுவதற்கான வழிமுறைக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம் ஆன்மீகப் பாதையில் நடப்பது வேடிக்கையாக இருக்க முடியாது என்று யார் சொன்னார்கள்?

ஆசிரியர் குறிப்பு : சாதனா பாதை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், அடுத்த வருடத்திருக்கான சாதனா பாதைக்காக முன்பதிவு செய்வதற்கும் இங்கே கிளிக் செய்யவும்.