நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 13

'முக்கனி' இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த விசேஷங்களும் நடைபெறாது. ஆனால், இப்போதோ ஏதேதோ டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் வகைகளை ஸ்டைலாக குடிக்கத் துவங்கிவிட்டோம். கடைத் தெருவில் சாதாரணமாக நாம் பார்க்கும் பழங்கள் புற்று நோயையே குணப்படுத்தும் உண்மையை விளக்குகிறார் நம்மாழ்வார்; கனிகள் பற்றி நம்மாழ்வார் கூறும் கனிவான கருத்துக்கள் இங்கே!

நம்மாழ்வார்:

நாகரீகம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்பாகக் கருதப்பட்டது. இன்று, அது நடைமுறையாக, பழக்கவழக்கங்களாகப் பார்க்கப்படுகிறது. உடைகள், உணவுகள், உடல் அலங்காரங்கள், பேச்சு மொழிகள், பயணம் செய்யும் வாகனங்கள் அனைத்தும் நாகரீகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நாகரீகம் தனி நபருக்கோ, சமூகத்துக்கோ உயர்வைத் தரவில்லை. மாறாக, பலவிதமானத் தொல்லைகளை உண்டுபண்ணுகிறது. அவற்றில் சிலவற்றை, ‘இந்தியா ஒளிர்ந்திடச் சில சிந்தனைகள்’ என்ற புத்தகத்தில் பொறியாளர், டாக்டர் தில்லைநாயகம் குறிப்பிடுகிறார்.
புற்று நோயை குணப்படுத்தும் பழங்கள்,  Putru noyai gunappaduthum pazangal

200 கிராம் திராட்சைப் பழத்தில் தொடங்கி இரண்டு கிலோ வரை உண்டு வந்தால், புற்று நோய் விரைவில் குணமாகும்.

தூய காற்றைச் சுவாசிக்கும் உரிமையை அடிப்படை உரிமையில் சேர்க்கச் சொல்லி, உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் வற்புறுத்தி வருகிறது. இன்றைய நாகரிகத்தால் சுத்தமான சுவாசக் காற்றை அளிக்க முடிகிறதா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மது, குடிப்பவரின் குடும்பத்தைப் பாதிக்கிறது. குடிப்பவரின் உடல்நலம் மட்டுமே பாதிப்புக்கு ஆளாகிறது. ஆனால், புகைப்பவர்கள் 90-க்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்களையும், 4,000-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்களையும் காற்றில் கலந்துவிடுகின்றனர். இதன் மூலம் மற்றவர்களுக்கு சுவாசிக்கத் தூய காற்று இல்லாத நிலை ஏற்படுகிறது. இதன் விளைவு என்ன?

நம் நாட்டில் இன்று 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களில், 32 பேரில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் முதலில் ஒரு பக்கம் மார்பகம் நீக்கப்படும். ஒரு சிலருக்கு மறுபக்க மார்பகமும் சில காலம் கழித்து நீக்கப்படும். முடிவில் மிகுந்த மன உளைச்சலோடு துன்புறுகிறார்கள். தொண்டைப் புற்று, ரத்தப் புற்று, வயிற்றுப் புற்று போன்ற பல வகைப் புற்றுகளால் எண்ணற்றோர் பாதிக்கப்படுகிறார்கள்.

இப்படிக் கூறும் தில்லைநாயகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் கூறுகிறார்.

தொண்டைப் புற்றுநோய் கண்டவரை வெறும் ஆரஞ்சுச் சாறு மட்டும் குடித்துக் குணப்படுத்திவிடலாம் என்பது ஆச்சரியம். ஆனால் உண்மை. மற்ற வகை புற்று நோயாளிகளுக்குத் திராட்சைப் பழத்தை மட்டுமே கொடுத்து வந்தால், நோயை விரைவிலேயே குணப்படுத்த முடியும். 200 கிராம் திராட்சைப் பழத்தில் தொடங்கி இரண்டு கிலோ வரை உண்டு வந்தால், புற்று நோய் விரைவில் குணமாகும். தினமும் கேரட்டும், திராட்சையும் உண்டு வந்தால் புற்றுநோய் வராமல் தவிர்த்துக்கொள்ளலாம். வெறும் தேங்காயும், வாழைப் பழமும் மட்டுமே உணவாகக் கொடுத்து சிறிது காலத்திலேயே அனைவரையும் தொழுநோயிலிருந்து குணப்படுத்தி விடலாம்.

‘கொலைத் தொழிலை விட்டொழிப்போம். மரம் நட்டு வெப்பம் தணிப்போம்’ என்பதை வேத வாக்காக்கிச் சூளுரைப்போம்!

ஆனால், இன்று சந்தையில் கிடைக்கும் வாழைப்பழம், கேரட், திராட்சை, ஆரஞ்சு போன்றவை எந்த அளவுக்கு நோய் தீர்க்கவல்லவை? 150 நாட்களில் விளையும் கேரட் கிழங்குக்கு, 55 முறை நஞ்சு தெளிக்கிறார்கள். 10 மாதத்தில் பலன் தரும் வாழை மரத்துக்கு, நான்கு முறை ஊசி மூலம் நஞ்சை ஏற்றுகிறார்கள். 100 நாட்களில் பலன் தரும் திராட்சைக்கு, 17 முறை நஞ்சு தெளிக்கிறார்கள். இது விஞ்ஞானம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ள நாகரிகம். விஞ்ஞானம் ஒன்றே நமது துன்பங்களுக்கு எல்லாம் விடையளிக்க முடியும் என்ற தவறான சிந்தனை 20-ஆம் நூற்றாண்டில் மக்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது.

உணவே மருந்து என்பதுதான் நமது சித்தர்களின் வாக்கு. ஆனால், மருந்தாகக்கூடிய உணவே இன்று நஞ்சாகிக் கிடக்கிறது. நமது பழங்களையும், கொட்டைகளையும் நாடெங்கும் பரப்பவல்ல பறவைகள் மடிந்தன. பயிர்களைப் பாதுகாப்பதில் பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உரம் என்ற பெயரில் மண்ணில் இடப்பட்ட ரசாயனங்கள் மண்ணில் உள்ள உயிரினத்தை அழித்ததோடு, விளைச்சலையும் வீழ்த்தியது. கூடவே, நைட்ரஸ் ஆக்ஸைடை தோற்றுவித்து பூமி சூடாவதற்கும் முக்கியக் காரணியாகிறது.

மேலே கூறப்பட்ட விவரங்கள் வலியுறுத்தும் உண்மை என்ன? விஞ்ஞான வளர்ச்சி மட்டுமே முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்ல முடியாது. ஆன்மீகம் மட்டுமே பல்லுயிர் பேணும் பண்பை வளர்க்கும். ‘கொலைத் தொழிலை விட்டொழிப்போம். மரம் நட்டு வெப்பம் தணிப்போம்’ என்பதை வேத வாக்காக்கிச் சூளுரைப்போம்!

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’.

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

Public Domain Photos @ flickr, just_go @ flickr