கடந்த இரண்டு ஆண்டுகளில், ஈஷா யோக மையம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பற்றி சில பிரிவு ஊடகங்கள் மட்டும் அவதூறாக பேசி வருகின்றன. பல வகையான அவதூறுகள் ஈஷா மீது சுமத்தப்பட்டது: ஈஷா காடுகளை ஆக்கிரமித்துள்ளது, யானைத் வழிதடங்களில் கட்டிடம் கட்டியுள்ளது, மழைக்காடுகளை அழித்திருக்கிறது, மரங்களை கண்மூடித்தனமாக வெட்டிச் சாய்த்திருக்கிறது என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. இந்த குற்றச்சாட்டுகளில் உள்ள போலித்தனத்தை, அறிக்கைகள் மற்றும் அரசு ஆவணங்கள் காட்டும் உண்மைகளை கொண்டு விளக்க முற்பட்டாலும் கூட, சில குறிப்பிட்ட குழுக்கள் ஒரு கோவிலைப் போல நாங்கள் மதித்து வாழும், எங்கள் குடியிருப்பை, இந்த அழகிய மலை அடிவாரத்தை, நாங்களே அழிக்கறோம் எனும் பொய்யான பிம்பத்தை, மக்கள் மத்தியில் உருவாக்கி வருகிறார்கள்.

பசுமைக்கரங்கள் GreenHands, நதிகளை மீட்போம் Rivers for Rally மற்றும் ஈஷா விவசாய இயக்கம் Isha Agro Movement போன்ற பெரிய சுற்றுச்சூழல் திட்டங்களை மேற்கொண்ட ஒரு அமைப்பு என்ற வகையில், எங்கள் சொந்த குடியிருப்பின் கொல்லைப்புறத்தை நாங்கள் புறக்கணிக்கவோ அல்லது சேதப்படுத்தவோ நினைப்போமா?

உண்மை என்னவென்றால்: எங்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளை எந்தளவிற்கு மேம்படுத்துவது என்ற வகையில் தான் எங்களின் ஒவ்வொரு முயற்சியும் இருக்கும். நாங்கள் வாழும் பகுதியையும், அது அமைந்து இருக்கும் இந்த பிரபஞ்சத்தையும் அக்கறையுடன் கவனித்துக்கொள்வது என்பது ஈஷாவினரான எங்களுக்கு இயல்பானவை.

வெள்ளியங்கிரி எங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது

வெள்ளியங்கிரி வெறும் ஒரு மலைப் பகுதி அல்ல. "தென்னகத்தின் கைலாயம்" அல்லது "தென் கையலாயம்" என அழைக்கப்படும் இந்த மலை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தென் இந்தியாவின் ஆன்மீக உள்ளுணர்வில் மூழ்கியுள்ளது. எண்ணற்ற முனிவர்களும், ரிஷிகளும் மற்றும் சித்தர்களும் இந்த மலையில் நீண்ட காலமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஈஷா யோக மையம் இந்த ஆன்மீக கலங்கரை விளக்கத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. சத்குரு தன்னை ஆழமாக இந்த சிகரங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளார். அவர் கூறுகையில், "நீங்கள் பூமியில் மிக பெரிய மலை எது என்று என்னிடம் கேட்டால், நான் இமயமலை என்று கூறுவேன். ஆனால் பூமியில் உள்ள மிக உயர்ந்த மலை எது என்று என்னை நீங்கள் கேட்டால், நான் வெள்ளியங்கிரி மலைகளைப் பற்றித் தான் கூறுவேன். இதில் "நான் மிகவும் பாரபட்சமாகத் தான் இருக்கிறேன்".

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆன்மீக தேடுதல் உள்ளவர்களுக்கு, இந்த மலைகளிலிருந்து வரும் அருள் அவர்களின் சாதனாவையும் தேடலையும் வளமையாக்குகிறது.

ஈஷாவும் வெள்ளியங்கிரியும்

1990 களில் நாங்கள் இங்கு வருவதற்கு முன், அந்த இடத்தில் பச்சை மரங்களை வெட்டி கடத்தும் ஒரு மரஅறுவை தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த செயல் அங்கே பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது, இதன் விளைவாக, மலைகள் முற்றிலும் மொட்டையடிக்கப்பட்டது போல் இருந்தன. பாறைகளில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய கதிர்களால் கோடைகாலத்தில் இங்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

யாராவது ஒரு புதிய இடத்திற்கு நகர்ந்தால், ஒரு வீட்டை சுற்றி அழகிய பூச்செடிகள் நட்டு அந்த சூழ்நிலையை மேலும் ரம்மியமாக மாற்ற நினைப்பர். சத்குரு சுற்றியுள்ள மலைகள் முழுவதும் மரங்களை நடவு செய்ய முடிவு செய்தார். சுமார் இருநூறு தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து அந்த பகுதியிலே கிடைக்கும் விதைகளை ஒரு மூட்டை அளவிற்கு சேகரித்தனர். அடுத்ததாக ஒரு மூங்கில் குச்சியில் ஒரு கூம்பு உலோகத்தை பொருத்தி தங்களை மரநடவிற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர். முதலில் இவர்கள் மணல் மூட்டைகள் மற்றும் விதைகளை சுமந்து கொண்டு மலை உச்சிக்கு சென்று விடுவார். பின் அங்கிருந்து புறப்பட்டு, ஒரு குழுவினர் தங்கள் கையில் இருக்கும் கூர்முனை மூங்கிலைக் கொண்டு பூமியில் துவாரங்களை ஏற்படுத்திக்கொண்டு இறங்குவர். பின் வருபவர்கள் அந்த துவாரங்களில் இரண்டு விதைகளைப் போட்டு கீழே இருந்து கொண்டு வந்த மணலை அந்த குழிகளை போட்டு மூடிக்கொண்டு இறங்குவர். இந்த இறுக்கம் இல்லாத மணலால் மழைக்காலத்தில் விதைகள் சிரம்மில்லாமல் மேலே வருவது மட்டுமல்லாமல் காட்டு எருமைகள் போன்ற மிருகங்களின் கால்களில் பட்டு விதைகள் சிதறிபோகாமல் காக்கப்படும் என்பதால். கிட்டத்தட்ட 100% விதைகள் முளைத்து வந்தாலும் அதில் 80% மரமாக மாறியது. இன்று இம்மலைகள் ஒரு துடிப்பான பசுமை போர்வையாக மாறி ,கோடை மாதங்களில் கோவையை விட இங்கு வெப்பம் சற்று குறைவாகவே காணப்படுகிறது.

மிக நீண்ட காலமாக, யாத்ரீகர்கள் இந்த மலையில் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இது ஒரு கலாச்சாரம் என்பதால், இவற்றிற்கு நாங்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை, இதன் விளைவு அந்தப் பாதைகளில் காகிதம், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்கள் சிதறிக் கிடைக்கும் கிடங்கான மாறியது. இந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி துண்டுகளை உண்ணும் விலங்குகள் காயம் அடைவது மட்டுமல்லாமல் மரணமடையத்துவங்கின. எனவே நாங்கள் இதை பற்றி ஏதாவது செய்ய முடிவெடுத்த போது, அது இயல்பாகவே எங்கள் தன்னார்வலர்கள் பக்கம் திரும்பியது. சுமார் ஆயிரம் தன்னார்வலர்கள் எங்கள் அழைப்பிற்கு பதிலளித்தனர். இரண்டு வாரங்களுக்கு அவர்கள் மலைகளில் மேல் சென்று, வண்டி வண்டியாக குப்பைகளை கொண்டுவந்தனர், குறிப்பாக இதில் பிளாஸ்டிக் கழிவுகள். ஆரம்ப சுத்ததிற்கு பிறகு, இப்போது நாம் யாத்ரீகர்களை மலைக்கு கிழே நிறுத்தி அவர்களிடம் இருக்கும் பிளாஸ்டிக் பைகளை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக ஒரு துணி பையை கொடுத்து வருகிறோம்.

பல ஆண்டுகளாக, ஈஷா அறக்கட்டளை வெள்ளியங்கிரி வாழ் மக்களின் முழுமையான நல்வாழ்வை கவனிக்க தவறியதில்லை. எங்கள் அவுட்ரீச்  திட்டங்கள் இங்கு பட்டியலிடப்பட்டிருப்பதை விட அதிகமானவை. கிராமப்புற கல்வி, கிராமப்புற கல்வியியல் (ஈஷவித்யா), வேளாண்மை, கிராமப்புற விளையாட்டு , சமூகம் கட்டிடம் மற்றும் பேரழிவு மீட்பு பல செயல்களை ஏழை மக்களுக்காக நடத்தவண்ணம் தான் உள்ளன.

பெரிய சிற்றலைகளை உருவாக்குகிறோம்

திரும்பிப் பார்க்கையில், ஈஷா அறக்கட்டளை அதன் உடனடி சுற்றுப்பகுதிக்கு ஒரு முன்மாதிரியின் பிரதிபலிப்பு என்பதை நாம் காணலாம். அப்போதிலிருந்து நாங்கள் பெரிய மற்றும் அதைவுட பெரிய வட்டாரங்களில் விரிவாக்கம் செய்துள்ளோம்.

2004 ஆம் ஆண்டில், எங்கள் சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் பசுமை போர்வையை அதிகரிக்கும் தொலைநோக்கு திட்டமான பசுமைகரங்கள் (PGH) மூலம் பசுமைமாற்றத்தை அதிகரிக்கத் தொடங்கினோம். மக்கள் மரங்களை வளர்ப்பதற்கும், சுற்றுச்சூழல் கவனம் செலுத்தும் ஒரு பண்பாட்டை வளர்த்துக்கொள்ள பசுமைகரங்கள் ஊக்கமளிக்கிறது. இதுவரையில் இருபது லட்சம் மக்கள் பங்ககேற்ற, தென்னிந்தியாவில் மூன்றரை கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

பின்னர் சத்குரு நதிகளை மீட்கும் பேரணியில் எங்களை வழிநடத்தினார்  நம் மண்ணிற்கு புத்துயிரூவது மற்றும் நதிகளை அழிவிலிருந்து மீட்பதற்கும் மகத்தான, தேசிய அளவிலான பிரச்சாரம் நீடித்தது. 2017 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்த பேரணியின் செயல் காரணத்தால் இப்போது இத்திட்டம் பல்வேறு இடங்களில் பல்வேறு மட்டங்களில் நடைபெற்று வருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில், ஈஷா அக்ரோ இயக்கம் (IAM) மூலம் வேளாண்மைக்கு ஏற்ற மாற்று மாதிரியை வழங்குவதன் மூலம், விவசாயிகள் ஒரு இரசாயன அடிப்படையிலான விவசாயத்திலிருந்து மாறி ஒரு கூடுதல் நிலைக்கு வர இந்த அமைப்பு உதவுகிறது. இன்று தமிழ்நாடு முழுவதும் இந்த அமைப்பின் வேர்கள் உள்ளன.

ஈஷா, இந்திய வேளாண்மையை மாற்றியமைப்பதில் விவசாயிகளை, விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கழகத்தில் இணைய (FPOs) வழிநடத்துகிறது. See more about our work here and here.

இவற்றை தவிர மத்திய அரசின் சுவச்சு பாரத் திட்டமாகட்டும், ஐ.நாவின் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையாக இருக்கட்டும் அல்லது ஐ.நாவின் பத்து வருட திட்டமான நீர்ப்பாசனத்திற்கான நடவடிக்கை திட்டம் ஆக இருக்கட்டும். ஈஷா அது மாதிரியான தேசிய மற்றும் சர்வதேச பிரச்சாரத்திற்கும் உறுதுணையாக உள்ளது. தூய்மையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான நீடித்த வாழ்க்கைக்கான மனிதகுலத்தை நகர்த்துவதற்கு இலக்காக எந்த திட்டம் வந்தாலும் அதில் ஈஷா தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது. இந்த நீண்ட பட்டியல்கள் மற்றும் சாதனைகள் நமது சுற்றுச்சூழல் சான்றுகளை நிரூபிக்க அல்ல. மாறாக, இந்த இயற்கையோடு நாங்கள் கொண்டிருக்கும் நெருக்கத்தின் விளைவு தான் இது என்பதை காண்பிக்கவே.