டேட்ஸ் டிலைட்
பேரீச்சம்பழத்தை அப்படியே சாப்பிடும் உணவுப் பிரியர்களே, இதோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள பேரீச்சை டிலைட்-ஐயும் கொஞ்சம் ட்ரை செய்து பாருங்க. சுவையாகவும், ஜில்லென்றும் ஒரு டிலைட்டான அனுபவமாக இருக்கும்.

ஈஷா ருசி
பேரீச்சம்பழத்தை அப்படியே சாப்பிடும் உணவுப் பிரியர்களே, இதோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள பேரீச்சை டிலைட்-ஐயும் கொஞ்சம் ட்ரை செய்து பாருங்க. சுவையாகவும், ஜில்லென்றும் ஒரு டிலைட்டான அனுபவமாக இருக்கும்.
டேட்ஸ் டிலைட் (பேரீச்சை டிலைட்):
Subscribe
தேவையான பொருட்கள்:
பேரீச்சை பழம் - 50 கிராம்
ஆப்பிள் - 1
தேங்காய் பால் - 1 டம்ளர்
ஐஸ் - சிறிதளவு
செய்முறை:
கொட்டை நீக்கிய பேரீச்சை, ஆப்பிள் இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய் பால் சேர்த்து நுரை பொங்க மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். இதை பெரிய கண்ணாடி டம்ளரில், ஐஸ் கட்டி சேர்த்து குடிக்கலாம்.
சன்னா சாட் டிலைட்:
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1 கப் (நறுக்கியது)
கேப்ஸி குடமிளகாய் - 1 கப் (நறுக்கியது)
முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது)
கொண்டைக்கடலை - 1 கப்(முந்தின நாள் ஊற வைத்தது)
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
வெள்ளரி - 1 கப்
செய்முறை:
கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். இத்துடன் விதை நீக்கி நறுக்கிய தக்காளி, வெள்ளரி, குடமிளகாய், முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்த்து அதோடு உப்பு, எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா கலந்து பரிமாறலாம்.