உதவிக்காக காத்திருந்த பிஞ்சுகள்… ஓடோடி சென்ற தன்னார்வலர்கள்! வைரஸை வெல்வோம் - ஈஷா டைரி - பாகம் 15
நமக்கு அன்பானவர்கள் பட்டினியில் கிடப்பதைப் பார்ப்பது நிச்சயம் ஒரு துயரமிக்க அனுபவமாகவே இருக்கும். தென்னமநல்லூரைச் சேர்ந்த ஒரு கொட்டகை உரிமையாளர் 60 குழந்தைகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் உதவியை நாடியபோது, ஈஷா தன்னார்வலர்கள் அவர்களின் பசியைப் போக்கி பாதுக்காக்க அங்கே விரைந்தனர்.

சின்னஞ்சிறு உள்ளங்களில் மலர்ந்த புன்னகை
தன்னார்வலர்கள் தென்னமநல்லூரை அடைந்தபோது, அங்கு இருந்த 60 குழந்தைகள் மற்றும் அவர்களின் காப்பாளர்கள் முகத்தில் திருப்தியுடன் கூடிய ஒரு புன்னகை மலர்ந்தது. ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து அவர்கள் அனைவரும் தென்னமநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகில் இருந்த பெரிய கொட்டகையில்தான் தங்கியிருந்தனர்.
அந்த கொட்டகை உரிமையாளர் அங்குள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் உடனிருப்பவருக்கும் உணவளிக்குமாறு தன்னார்வலர்களிடம் வேண்டினார். "அந்த கொட்டகையில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து தென்னமநல்லூருக்கு வேலைக்காக வந்தவர்கள் என்று அந்த கொட்டகை உரிமையாளர் கூறினார். அந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்த நன்றி, நிறைவான மனநிலையை கொடுத்தது" என தன்னார்வலர் ஒருவர் கூறினார்.

ஈஷா தன்னார்வலர்களை கண்டதும் முள்ளாங்காடு கிராமத்தின் குழந்தைகளின் முகங்களில் புன்னகை ஒளிர்ந்தது. வைரஸைவெல்வோம் என்ற நோக்கில் வழங்கப்படும் உணவினை குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருக்காக வீட்டிற்கு எடுத்துச் செல்லும்போது அவர்களிடம் கள்ளமில்லா மகிழ்ச்சியைக் காணமுடிந்தது #BeatTheVirus pic.twitter.com/2bicxZUAHN
— IshaFoundation Tamil (@IshaTamil) May 7, 2020
மனம் குளிர்ந்த மாற்றுத்திறனாளிகள்
தென்னமநல்லூரைப் போலவே கள்ளிமேட்டிலும் ஒரு அனுபவம் நம் தன்னார்வலர்களுக்கு காத்திருந்தது. அங்கு சில மாற்றுத்திறனாளிகள் தினமும் வரும் தன்னார்வலர்களுக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். அவர்களில் ஒருவரது இரண்டு குழந்தைகள் ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் மாணவர்கள். "அந்த மக்களை பட்டினியின் கொடுமையில் இருந்து காப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். மேலும் அது எங்கள் கடமை. தினமும் நேரம் தவறாமல் மக்களை சந்திப்பத்தை நாங்கள் கவனமாக செய்து வருகிறோம்" என்று ஒரு தன்னார்வலர் கூறினார்.
நல்லூர்வயல்பதி மற்றும் மாதம்பட்டியை சேர்ந்த மக்களும் நம் தன்னார்வலர்களை அணுகி உதவி கோரினர். அந்த கிராம மக்கள் கூறும்போது, ஈஷாவிடம் அவர்கள் உதவி கோரியதற்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு நேரம் தவறாமல் வழங்கப்படும் சுவையான உணவே காரணம் எனத் தெரிவித்தனர். மாதம்பட்டி பஞ்சாயத்து செயலாளர் செல்லையன், "மிக சுவையான உணவு, ஈஷா குழுவினருக்கு நன்றி" என்று கூறினார்.

காவலரின் கனிவான பாராட்டு
புதுப்பாளையத்தில் அலுவலில் இருந்த காவல் துணை ஆய்வாளர் ஒருவர் ஈஷா தன்னார்வலர்களின் தினசரி களப்பணியை வெகுவாகப் பாராட்டினார். அவர் சமீபத்தில் புதுப்பாளையத்தில் இருந்த தன்னார்வலர்களிடம் உரையாடினார். தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் இந்த தொற்றுநோய் பரவாமல் தடுக்க ஈஷா எடுத்துவரும் முயற்சியையும், போஸ்டர் ஒட்டுவது, துண்டு பிரசுரங்கள் கொடுப்பது என அவர்கள் செய்யும் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் பாராட்டியதோடு, அவர்கள் தினமும் வழங்கும் உணவு மற்றும் நிலவேம்பு கசாயத்துக்காகவும் தன்னார்வலர்களை அவர் மிகவும் பாராட்டினார்.
Subscribe