பொதுவாக, ஆண் தன்மை பொருள்தன்மையை கையாள்வதில் திறம் மிக்கதாக இருக்கிறது; பெண்தன்மை எப்போதும் சூட்சுமமான தன்மையை கையாளும் திறம்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. நமது வீட்டிலோ அல்லது சமூகத்திலோ பார்க்கும்போது, ஆண்களை விட பெண்கள் சூட்சுமமான செயல்களான ஓவியம், கலை, நாட்டியம், இசை என அழகுணர்ச்சி மிக்கவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளதைக் காணமுடியும்.

இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சாதனா செய்யும்போது, அது நம்மை சிவனின் ஒரு அங்கமாகவே மாற்றிவிடுகிறது

இருவேறு தன்மைக்கு ஏற்ப அருள் பெறும் வழியும் மாறுபடுகிறது. குறிப்பாக, லிங்கபைரவி தேவியின் அருள் பெறுவதற்காக பெண்களுக்கென பிரத்யேக காலமும் விரதமும் சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆண்கள் மேற்கொள்ளும் சிவாங்கா விரதத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு சிவாங்கா விரதம் குறித்து பேசும்போது…

“டிசம்பரில் வரும் கதிர் திருப்ப நாளிலிருந்து (உத்தராயணம் தொடங்கும் நாள்) வரும் 2வது அமாவாசைக்கு அடுத்த பௌர்ணமி வரையிலான காலகட்டம் ஆன்மீகப் பயணத்தில் இருப்பவர்களுக்கு மிக முக்கிய நாட்கள். மற்ற நாட்களை விட இந்நாட்களில் மிக எளிதாக வாழ்க்கை கனிந்து பலனளிக்கிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக பல செயல்கள் செய்யப்பட்டன. மரங்களும் செடிகளும் இந்நேரத்தில் மிகச் சுலபமாக பூ பூத்தோ, கனி தாங்கியோ நிற்கின்றன. இது அனுகூலமான வெப்பநிலை மாற்றத்தால் மட்டுமல்ல, பஞ்சபூதங்களின் மாற்றமும் அனுகூலமாக இருப்பதால்தான்.

எனவே அத்தகைய ஒரு சாதனாவை சத்குரு இங்கு பெண்களுக்காக வழங்குகிறார். சத்குருவின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் இது ‘வெண்ணையைக் கடைந்தெடுக்கும்’ சாதனா அல்ல, இது ‘திரண்டிருக்கும் வெண்ணையைக் கையிலெடுப்பதைப்’ போன்ற இலகுவான சாதனா.

தைபூசத் திருநாளில் லிங்கபைரவிக்கு வரும்போது, அதற்கு முந்தைய 21 நாட்களும் தேவி தண்டம் செய்து, தேவி ஸ்துதியை உச்சரிப்பதோடு ஒரு வேளை (காலை உணவு) உணவைத் தவிர்த்து விரதம் மேற்கொள்வதன் மூலம் பெண்கள் தேவியின் அருளை முழுமையாய் பெற முடியும். உடல்நலம், மனநலம், குடும்ப நலன், பொருள்வளம் பெற விரும்புவோர் தேவியின் அருள்வேண்டி இந்த விரதத்தில் பங்குபெறலாம்.

கடந்த வருடங்களில் சிவாங்கா விரதத்தை மேற்கொண்ட பெண்கள் தங்கள் ஊர்களில் அன்னதானம் செய்து, தேவி படத்தை வைத்து தேவி ஊர்வலம் நடத்தி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். அத்துடன், தேவிக்கு சிவாங்கா மாலையணிந்த பெண்மணிகள் அனைவரும் தங்கள் ஊரிலிருந்து பாத யாத்திரையாக வந்து லிங்கபைரவியை தரிசித்து அருள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், ஈஷா யோகா வகுப்பு செய்யாதவர்கள் கூட இந்த பக்தி சாதனா மேற்கொள்ளலாம் என்பதால், பொதுமக்கள் பலரும் சிவாங்கா விரதத்தை மேற்கொண்டு தேவி பக்தைகளாயினர். எனவே உங்கள் ஊரிலுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் இந்த சாதனா குறித்து தெரிவித்து தேவியின் அருள் பெறச் செய்யலாம். சிவாங்கா தீட்சை பெறுவதற்கு ஈஷா யோக மையம் வரவேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த ஊரிலுள்ள ஈஷா மையங்களிலேயே பெற்றுக்கொள்ள முடியும். இவ்வருடம் இதற்கான தீட்சை ஜனவரி 18ம் தேதி தமிழகம் உட்பட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது. இந்த 21 நாள் விரதம் பிப்ரவரி 8 தைப்பூசத்தன்று நிறைவுபெறும்.

விவரங்களுக்கு:

தொலைபேசி: 83000 83111

இ-மெயில்: shivanga@lingabhairavi.org