அறிவியல் செயல்முறை போட்டியில் வென்ற ஈஷா வித்யா மாணவர்கள்!
ஈஷா வித்யா மாணவர்கள் வென்ற பரிசு மற்றும் ஈஷா வித்யா மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய குடும்பத்தினரின் கல்வி உதவி என இரு நிகழ்வுகளின் துளிகள்...
ஈஷா வித்யா மாணவர்கள் வென்ற பரிசு மற்றும் ஈஷா வித்யா மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய குடும்பத்தினரின் கல்வி உதவி என இரு நிகழ்வுகளின் துளிகள்...
அறிவியல் செயல்முறை போட்டியில் வென்ற ஈஷா வித்யா மாணவர்கள்!
Subscribe
சென்னையிலுள்ள அக்னி தொழிற்நுட்ப கல்லூரி குழுமம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘அக்னி இக்னைட்’ எனப்படும் மாநில அளவிலான அறிவியல் செயல்முறை போட்டியில் தர்மபுரி ஈஷா வித்யா பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் ஷாலினி சுஷ்மா மற்றும் ஸ்ரீலதா ஆகிய இருவரும் சிறப்பு பரிசினை தங்கள் பள்ளிக்கு பெற்றுத் தந்துள்ளனர். போட்டியில் இவர்கள் முன்வைத்த ‘எரிவாயு மற்றும் புகை’யை அறியும் கருவிக்காக இப்பரிசு வழங்கப்பட்டது.
சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளில் நிகழ்ந்த இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து சுமார் 7000 மாணவர்கள் கலந்துகொண்டனர். அக்னி கல்லூரிகள் குழுமத்தின் இயக்குநர் திரு.அக்னீஷ்வரன் ஜெயப்பிரகாஷ் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த இந்தியா மற்றும் பூட்டானிற்கான ஐநாவின் தேசிய தகவல் அலுவலர் திரு.ராஜீவ் சந்திரன் அவர்களும் ஈஷா வித்யா மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
ஈஷா வித்யா மாணவர்களின் கல்விச் செலவை ஏற்ற ஆஸ்திரேலிய குடும்பம்!
சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் நாகர்கோயில் ஈஷா வித்யா பள்ளியைச் சுற்றிப்பார்க்க வருகை தந்தனர். அவர்களுடன் ஒரு ஆஸ்திரேலிய குடும்பமும் வந்திருந்தது. ஈஷா வித்யா நிர்வாகிகள் அவர்களை மகிழ்வுடன் வரவேற்று பள்ளி முழுவதும் சுற்றிகாட்டினர். மிகுந்த உற்சாகத்தோடு அவர்கள் குழந்தைகளோடு உரையாடினார்கள், விளையாடினார்கள், உணவருந்தினார்கள்.
ஈஷா வித்யா மாணவர்கள் அவர்களுடன் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினர். கிராமத்தில் வறுமையில் வாடும் குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கான ஈஷாவின் செயல்பாடுகள் அவர்களை வெகுவாக கவர்ந்தது. நிறைவாக அவர்கள் ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் 10 பெண் குழந்தைகளின் கல்வியைத் தத்தெடுத்துக்கொள்வதாகக் கூறி அதற்கான ஸ்காலர்சிப் தொகையை வழங்கினார்கள். இந்த தொகையை அவர்கள் தங்கள் ஆஸ்திரேலிய நண்பர்களிடமும் நன்கொடை பெற்று வழங்கியுள்ளார்கள்.