சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சி, வருகிற டிசம்பர் 18 &19 ஆகிய தேதிகளில் தமிழில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியை சென்னைவாசிகளிடத்தில் கொண்டுசேர்ப்பதற்கான பல்வேறு புதுமையான உத்திகளை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தெருக்கூத்து, வீதி நாடகம் போன்ற வடிவங்கள் வெகுஜன மக்களை எளிதில் சென்றடையும் ஓர் ஊடகமாக நெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

மக்கள் கூடும் பரபரப்பான சென்னை நகர வீதிகள் மற்றும் சாலைகளில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் நகைச்சுவை கலந்த சுவாரசியமான இந்த கலைப்படைப்பை அரங்கேற்றி, சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சாதாரணமாக சென்று சாலைகளில் எதிரே வரும் மக்களிடத்தில் நிகழ்ச்சி பற்றிய குறிப்புகளை வழங்குவதை விட, இப்படியான ஒரு கலைவடிவத்தின் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களிடத்தில் யோகா குறித்தும், சத்குருவுடன் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைப்பது, நல்ல பலனை தந்துவருகிறது. பொதுவாக, சாலைகளிலும் அக்கம்பக்கத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் பரபரப்பாக இயங்கும் சென்னைவாசிகளை, இந்த தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாடு நின்று கவனிக்க வைப்பதோடு, நிகழ்ச்சி குறித்த தகவல்களை மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் தூண்டுகிறது என்பதில் சந்தேகமில்லை!

பதினோரு குழுக்களாக இயங்கிவரும் இவர்கள், இதுவரை நங்கநல்லூர், அடையாறு, கோடம்பாக்கம், மணலி, தாம்பரம், வளசரவாக்கம், அண்ணா நகர், போரூர், வேளச்சேரி, கூடுவாஞ்சேரி மற்றும் அம்பத்தூர் என சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் 178 இடங்களில் 233 அரங்கேற்றங்களை வழங்கியுள்ளனர். 20 வயது முதல் 60 வயது வரையுள்ள அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள் முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வரும் இல்லத்தரசிகள் வரை, பல்வேறு தரப்பினரும் இந்த குழுவில் இடம்பெற்றிருப்பது நம்மை வியக்கவைக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால், சென்னை தன்னார்வத் தொண்டர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்நிகழ்ச்சி குறித்த விழிப்புணர்வை உங்களால் முடிந்தவரை கொண்டுசேர்க்க வேண்டுகிறோம். ஷாம்பவி மஹாமுத்ரா எனும் சக்திவாய்ந்த பயிற்சிக்கான தீட்சையை சத்குருவிடமிருந்து நேரடியாக பெறும் இந்த அரிய வாய்ப்பினை கூடுதலான மக்கள் தெரிந்துகொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவும் நீங்களும் ஒரு கருவியாகலாம்!

 

APG19_IECSChennai-Tam-Newsletter-650x120-Updated

 

ஆசிரியர் குறிப்பு: ஈஷா யோகா என்பது யோக அறிவியலிலிருந்து பெறப்பட்ட நல்வாழ்வுக்கான தொழில்நுட்பமாகும். உங்கள் வாழ்க்கை, உங்கள் பணியிடம் மற்றும் நீங்கள் வாழும் உலகத்தை உணர்ந்து அனுபவிக்கும் விதத்தில் உள்நிலை மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், ஒருவரின் உள்நிலை வளர்ச்சிக்கான முழுமையான கருவியாக இது வழங்கப்படுகிறது.

தன்னிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த செயல்முறைகள், பாரம்பரிய யோகத்தின் சாரம், வாழ்க்கையின் உன்னத அம்சங்களை உணர்ந்தறிவதற்கான தியானங்கள் மற்றும் தொன்மையான ஞானத்தின் ரகசியங்களை அறிவதற்கான உத்திகள் ஆகியவற்றின் மூலம் உங்கள் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்வதே இந்த வகுப்பின் நோக்கமாகும்.

ஈஷா யோகா வகுப்பு சுய-ஆய்வு மற்றும் தன்னிலை மாற்றத்திற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கி அதன்மூலம் ஆனந்தமான மற்றும் முழுமையான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.

பதிவுசெய்ய