பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

காலம்

காலத்தின் சக்கரம் இடைவிடாமல் சுழல்கிறது
ஆனால் அது கடக்கும் பாதையில்
அதன் அடிச்சுவடுகள் இல்லை
ஆனால் மனித அனுபவத்தில்
ஆழமான சுவடுகள் பதித்துச்செல்கிறது
வாழ்வை அதன் இறுதிக்கு நெருக்கமாகவும் கொண்டுசெல்கிறது.

உடலெனும் உடுப்பை
தளர்வாகவும் இலகுவாகவும் சுமந்தால்
காலத்தின் சுவடுகள் உங்கள்மேல் பதியாமல் கடந்துவிடும்.
பொருளைப்போல் இருப்பதிலிருந்து
எல்லையற்ற வெற்றுவெளியாய் ஆனால்
கால சக்கரத்தின் மீது சவாரி செய்வதிலுள்ள
ஆனந்தத்தை ஒருவர் உணரமுடியும்.
ஏனெனில் காலம் என்பது
உல்லாச சவாரியாகவும் இருக்கமுடியும் அல்லது
உங்களை நசுக்கும் சக்கரமாகவும் இருக்கமுடியும்.

- சத்குரு
Share This