செம்மலைகள்
சுற்றிலும் எழுந்து நிற்பது
அசுரர்களின் குருதியில்
நனைந்ததால் எனக் கதைகளுண்டு.
அசுரர்களை வெட்டிவீழ்த்தியவர்
ஆதியோகி சிவனைப் போல
உருவெடுத்த மாய முனிவர்.
ஜடாமுடி, சூலம்
உடுக்கை, புலித்தோல்
போர்த்தி
ஐந்து துணைவியர் கொண்டவர்
தாண்டவமாடி துள்ளித்திரிந்து
தான் தொடுபவை அனைத்தையும்
மிரட்டி மாற்றமடையச் செய்தார்.