பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

நாடோடி இச்சை

சாலைகள்...
நம் நாடோடி இச்சையை தணிக்க
நாளும் உருண்டு தேயும்
சக்கரங்களின் முடிவில்லா சாலைகள்...

காடுகள், வெளிகள், பாலைகள், மலைகள்,
கடற்கரைகள் எல்லாம் தெளிவற்ற ஒன்றாக -
எனினும் பூமியின் வளங்களான
கண்கவர் காட்சிகள், காலநிலை அதிசயங்கள்
நம் வாழ்வை செழுமையாக்கும்
நம் மனதில் நிரந்தர பதிவாக...

நாடோடி இச்சைகள்
என்றென்றும் மனிதரை பொருட்களின் குவியலாக
மாற்றும் மூடத்தனத்தில் மூழ்காமல்
உங்களை இருக்கச் செய்யும்.

- சத்குரு
பகிருங்கள்